Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 27, 2015

avathani Media Network

தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை

2500-rsதனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை இரண்­டா­யி­ரத்து ஐந்நூறு ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரத்ன தெரி­வித்தார்.


தேசிய தொழில் பாது­காப்பு வாரத்­தை­யொட்டி தொழில் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்; அரச ஊழி­யர்­க­ளுக்கு கடந்த கால கட்­டங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­பட்­ட­போதும் தனியார் துறை­யி­ன­ருக்கு அந்த சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.

இதனால் அவர்கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ளமையால் அவர்­க­ளுக்கு 2 ஆயி­ரத்து 500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்பேன்.

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை 2500 ரூபாவால் அதி­க­ரிக்­கு­மாறு தனியார் துறை­யி­ன­ரிடம் பல தட­வைகள் கோரிக்கை விடுத்தபோதும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. தனியார் துறையின் சில நிறு­வ­னங்கள் மாத்­தி­ரம்தான் அரசின் கோரிக்­கையை ஏற்றுக்கொண்­டன.

இதன் அடிப்­ப­டையில் சில முத­லா­ளிமார் 1000 ரூபா­வி­னாலும் மேலும் சில நிறு­வ­னங்கள் 500 ரூபா­வி­னாலும் சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

ஆகை­யினால் விசேட சட்­ட­மூலம் ஒன்றின் மூலம் இந்த சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். அதே­போன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம் என்றார்.

Read More
avathani Media Network

'வார உரைகல்' பெயரில் போலியான முகப்புத்தகம்! வாசகர்கள் அவதானமாக இருக்குமாறு பிரதம ஆசிரியர் வேண்டுகோள்!!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

'வார உரைகல்' எனும் பெயரில் இங்கு காணப்படும் என்னால் வெளியிடப்பட்ட 253 மற்றும் 300வது 'வார உரைகல்' பத்திரகைகளின் முன்பக்கப் புகைப்படங்களுடன் முகப்புத்தம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக வாசகர்கள் பலரும் எனது கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும், அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் என்பவற்றில் முறைப்படி என்னால் பதிவுசெய்யப்பட்டுள்ள 'வார உரைகல்' எனும் இந்த ஊடகத்தின் பெயரில் என்னால் இவ்வாறானதொரு முகப்புத்தகம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவதில்லை என்பதை அனைத்து வாசகர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தால் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தப் போலி முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டிருகின்ற, எதிர்காலத்திலும் பிரசுரமாக்கப்படவுள்ள எந்தவொரு செய்திகள் தொடர்பாகவும், அச்செய்திகள் தொடர்பில் பரிமாறப்படும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு சம்பந்தம் கிடையாது என்பதுடன், இப்போலி முகநூல் பிரசுர நடவடிக்கையானது என்னையும், எனது ஊடகத்தின் பெயரையும் ஏதோவொரு வகையில் சட்டச்சிக்கலில் மாட்டிவிடுவதற்காக இனந்தெரியாத நபர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாக இருக்கலாம் என்பதையும் முன்கூட்டியே எனது வாசகர்களுக்கும், ஊடகத்துறை சார்ந்த சகோதரர்களுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, 'வார உரைகல்' ஊடகத்தளங்களின் அபிமான வாசகப் பெருமக்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருப்பதுடன், இதனை இயக்கும் நபர்கள் பற்றிய விபரங்கள் தெரியவரும் பட்சத்தில் அதுபற்றிய தகவல்களை வழங்கி உதவுமாறும் இத்தால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம்,
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர் - 'வார உரைகல்')
புதிய காத்தான்குடி – 06
26.10.2017 


Read More
avathani Media Network

தேசிய அடையாள அட்டை

unnamed(காத்தான்குடி நிஷவ்ஸ்)
மொத்த போட்டோவிலே
மோசமான போட்டோவினை
பத்திரமாய் பாதுகாக்கும்
பரிதாபமான அட்டை
புடலங்காய் விற்பதிலும்
புது டெக்னிக் வந்த பின்னும்
அடையாள அட்டையில் -இன்னும்
அரசர் கால டெக்னிக்
இந்தியப் படைக்குப் பயந்து
இரவிரவாய்ப் பாடமிட்ட
அட்டையின் இலக்கங்கள்
அழியாமல் இன்னும் மனதில்
குதிரை ஓடிப் பாஸ் பண்ன
குறுக்கால நிற்கும் அட்டை
எதிரிட வோட்டைப் பண்ண
ஏலாமல் ஆக்கும் அட்டை
இந்த அட்டையின்றி
இந்தியன் ஆமியிடம்
நொந்து நூடில்ஸான்
நூறு கதையுண்டு.
மீசை முளைக்கா காலத்தில்
வாசன் ஸ்டூடியோவில்
பூசிய கரியைப் போல
புடித்த போட்டோவுடன்
அட்டையை வைத்திருக்குதுகள்
அந்த இந்தா என்று இருப்பதுகள்
(காத்தான்குடி நிஷவ்ஸ் -27/10/2015)
Read More
avathani Media Network

மாலை நேர வகுப்புக்களும், இருளில் தனிமையில் செல்லும் மாணவிகளும்.

(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர் )

z_p04-Sabaragamuwaநமது பிரதேசங்களில் மாலை இருள் தொடங்கும் நேரங்களில் அதிகளவான மாணவிகள் மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீதியில் தனிமையில் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் நாளுக்கு நாள் பரவிவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கேட்டும் பத்திரிகைகளில் படித்தும் வருகின்றோம் இப்படியானயொரு காலகட்டத்தில் வயதான பெண் மாணவிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மாலை நேர வகுப்புக்கள் கட்டாயத் தேவைதானா அதை வேறு நேரங்களில் நடத்துவதில் ஏதும் சிரமங்கள் ஏற்படுகின்றதாயென்ற கேள்வியும் எழுந்துள்ளது..

ஊரில் எங்கு பார்த்தாலும் “டியுசன்.வகுப்புக்கள் மாணவ மாணவிகளுக்கு நேரமே இல்லாத அளவுக்கு நாள்தோறும் வகுப்புக்கள் தொடங்கப்பட்டு நேரம்கெட்ட நேரத்திலெல்லாம் மாணவர்களின் மூளைச் செல் நரம்புகள் வெடிக்கும் அளவுக்கு வகுப்புக்கள் நடைபெறுவதை காணமுடிகின்றது.

பெற்றோர்களின் எண்ணம் தன் குழந்தைகள் நல்லபடியாக படித்து இச்சமுதாயத்தில் சிறந்த கல்வி மேதைகளாக வரவேண்டுமென்ற எண்ணத்தில் காலநேரம் தெரியாத அளவுக்கு வகுப்புக்களுக்கு அனுப்பிவைக்கின்றோம் ஆனால் அந்த நேரங்கெட்ட நேரமே நமது பெண் குழந்தைகளுக்கு எமகெட்ட நேரமாகிவிடுகின்றதென்பதை ஒரு போதும் எண்ணுவதில்லை.

நேற்று நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் பதிவிடலாமென்று நினைக்கின்றேன் ஒரு பெண் மாணவி மாலை நேர வகுப்பு முடிவடைந்து 6.30, மணியளவில் தனிமையில் வீதியோரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் இரண்டு பருவ வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளைகள் அந்த மாணவியை ஏதோ கேலி செய்துகொண்டு செல்வதை குறிகிய தூரத்தில் வந்துகொண்டிருந்த என்னால் காணமுடிந்தது உடனே என்னைக்கண்ட அந்த ஆண் பிள்ளைகள் வேகமாக சென்றுவிட்டார்கள்.

மேலும் இதுபோன்ற அனாச்சார நிகழ்வுகள் இனியும் நிகழ்வாதிருக்க மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புக்களை நிறுத்திக்கொள்ளுமாறு ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.   

Read More
avathani Media Network

காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கை

பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் கராப்பிட்டிய சிறுவர் மருத்துவமனை போன்றவற்றை தனது ஓவியங்களால் அழகுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் காலி சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில் அவர் தனது குழுவினருடன் தற்போது காலி சிறைச்சாலை சுற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் வகையில் ஓவியங்கள் தீட்டும் பணியை ஆரம்பித்துள்ளார்.
Read More