Featured Home (TOP)

Recent Comments

Wednesday, November 4, 2015

avathani Media Network

துருக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அர்தூகான் தலைமையிலான அரசு சர்வேதச முஸ்லிம்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் –இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

துருக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அர்தூகான் தலைமையிலான அரசு சர்வேதச முஸ்லிம்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

துருக்கி தேர்தலில் அர்தூகானின் கட்சி வெற்றி பெற்றிருப்பதை நான் வரவேற்கிறேன் எனவும் குறிப்பாக இன்று அரபு நாடுகளிலே ஏற்பட்டு இருக்கின்ற மிக மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் துருக்கியினுடைய புதிய பிரதமராக அஹமத் தாவூத் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு வரலாற்று மைல்கல்லாக நாம் பார்க்கின்றோம்.

பொருளாதாரத்திலும் ,இராணுவரீதியிலும் மிக பலம்வாய்ந்த நாடான துருக்கி கடந்த காலத்தில் சர்வேதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமைகளின் போது இந்த நாடு அக்கறை இல்லாமல் ,கரிசனை அற்று இருந்தது மிக மன வேதனை அளித்தது அந்த அடிப்படையில் புதிய துருக்கிய பிரதமர் சர்வேதேச முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறையோடு இருப்பது அவருடைய பேச்சுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதானது முஸ்லிம்களுக்கு மிக சந்தோசத்தை அளிக்கின்றது.

அந்த வகையில் சவூதி அராபிய உட்பட அரபு நாடுகளோடு இணைந்து ஒரு பலம் வாய்ந்த சக்தியாக முஸ்லிம் சமூகத்தையும் அதன் பலத்தையும் கட்டியொழுப்பி , முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிராக செயற்படுகின்ற சர்வேதேச சக்திகளுக்கு எதிராக செயற்படும் மிகப்பெரும் சக்தியாக அல்லாஹ்வின் உதவியோடு ஒரு பங்காளியாக துருக்கி மாறும் என எதிர்பார்கின்றோம்.

எல்லாம்வல்ல அல்லாஹ் துருக்கி பிரதமருக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் நல்ல அறிவையும் நேரான பாதையை காட்டுவதோடு அவரும் அவரது அரசாங்கமும் உலக முஸ்லிம்களுக்காக பாடுபடும் சக்தியாக மீண்டும் பலம் வாய்ந்த துருக்கியாக கட்டியெழுப்ப உதவிசெய்ய வேண்டும் என்பதோடு , துருக்கி முழுமையான இஸ்லாமிய நாடாகவும் ,அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் , இஸ்லாமிய கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற ஒரு நாடாகவும் மாறுவதற்க்கு இறைவன் வழிவகுக்க வேண்டும் என இந்த சந்தர்பத்தில் பிராத்திக்கின்றேன் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

மட்டக்களப்பு -கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அலைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கு காரணமாக அமைவதாகவும் இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த வீதியில் பயணம் செய்யும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









Read More
avathani Media Network

சகோதரர் ரியாஸ் மவ்லவி வபாத்தானார்.

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த  மவ்லவி ரியாஸ் அவர்கள் இன்று வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..


கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த நான்கு சிறு பிள்ளைகளின் தந்தையான (திருமணத்தின் பின்னர் கண்டி பிரதேசத்தில் வாசித்து வந்தவர்) இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருந்த நிலையில் இவரின் சத்திர சிகிச்சைக்காக பெருந்தொகை பணம் தேவைப்படுகிரது என நாம் அறிவித்து  சிலர் உதவிகளும் செய்து இருந்த வேளை இன்று  கண்டி வைத்தியசாலையில் வைத்து வபாத்தாகி உள்ளார்.

அன்னாரது ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகை தொடர்ந்து 97ம் கட்ட சிராஜ் நகர் ஜும்அ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்லிவாயல் னமய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக.. அவரின் பிரிவால் வாடும் பிள்ளைகள் , மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் அதனை தாங்கும் சக்தியை வழங்குவானாக.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

காத்தான்குடி நகரசபைக்கு எதிரான கணவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

காத்தான் குடி நகரசபைக்கு உட்பட்ட ஏ.எல்.எஸ்.எல் மாவத்தையில்  உள்ள குப்பைகளை நகரசபை ஊழியர்கள்  அகற்ற மறுத்து தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதைக்கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவருடன் அப்பகுதி மக்கள் சிலரும் காத்தான்குடி நகரசபைக்கு எதிராக இன்றுக்காலை அப்பகுதியின் பிரதான சந்தியான  அலியார் சந்தியில் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதி பெண் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலம் மழை காலம் என்பதால் குப்பைகள் தேங்கி டெங்கு போன்ற பாரிய நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெறிவிக்கின்றனர்..
எனவே உரிய அதிகாரிகள் இவ் விடயத்தை கவனத்திற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இக்பால் உற்பட அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்..
(ஜுனைட்.எம்.பஹ்த்)




Read More
avathani Media Network

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது

கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

எச்.என்.டீ.ஏ மாணவர்களை தாக்குமாறு உத்தரவிட்ட சுதந்திர கட்சி முக்கியஸ்தர் யார்?

அண்மையில் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் சாதகமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்திற்காக மாணவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் சமாதானமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில குழுக்கல் சூழ்ச்சியான முறையில் ஆத்திரமூட்டும் வகையில் தூண்டிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை உறுதி செய்யும் வகையில் அந்த நிலைமையினை தடுப்பதற்காக பலமுறை மாணவர்கள் முயற்சிக்கு காணொளி ஒன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் மாணவர்களை கடுமையாக தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைக்குமாறு அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரினால் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களை குழப்பி விட்டு எதிர் தாக்குதல் மேற்கொள்ளும் செயற்பாடும் ஒரே இடத்தில் திட்டமிடப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.
இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் உள்ள அதிகாரப் போராட்டத்தின் ஒரு அறிகுறியாக இந்த சம்பவம் உள்ளதோடு, மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி மீது மதிப்பிழக்க செய்வதே இதன் நோக்கமாகும்.
எதிர்வரும் இரண்டு வருடத்தினுள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நீண்ட தூரம் கொண்டு செல்லாமல் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More
avathani Media Network

காவ­ல்நிலையத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்­தண்­டனை

வென்­னப்­புவ தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் தொட­ரப்­பட்ட வழக்கில் அச்­ச­மயம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீதான குற்றம் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவ­ருக்கு கடும் வேலை­யுடன் கூடிய பத்து வருட சிறைத்­தண்­டனை வழங்கி சிலாபம் மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அத்­துடன் அவ­ருக்கு ஏழா­யி­ரத்தி ஐநூறு  ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த தண்­ட­னை­க­ளுக்கு மேல­தி­க­மாக பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இரு­பத்தையா­யிரம் ரூபா நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும், இந்தத் தொகை மற்றும் அப­ராதத் தொகை என்­ப­வற்றை செலுத்தத் தவறின் அதற்­காக ஆறு மாதங்கள் மேலும் இலகு சிறைத் தண்­டனை அனு­ப­விக்க நேரிடும் எனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பஸ்­யால கொட்­டு­வெல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 58 வய­து­டைய ஒரு­வ­ருக்கே இவ்­வாறு தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் பொலிஸ் சார்­ஜன்­டான இவர் இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து பணி­நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்­ததோடு அதன் பின்னர் பன்­னல பிர­தே­சத்தில் தொழி­லா­ளி­யாகப் பணி­யாற்றி வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்­னப்­புவ பொலிஸ் பிரிவின் தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து அப்­போது 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாய் ஒரு­வரை பல­வந்­த­மான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் இவ்­வ­ழக்குத் தொட­ரப்­பட்­டிருந்தது. சம்­ப­வ­தினம் இரவு குற்றம் சுமத்­தப்­பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்­ட­பிள்­க­ளுடன் சிலாபம் கொழும்பு வீதியின் வைக்கால் தோப்பு பாலத்தின் அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் காவ­ல­ரணில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­துள்ளார். இந்­நே­ரமே இவ்­வாறு அங்கு வைத்து குறித்த பெண் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.
நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்ட சாட்­சி­யங்களின் பிர­காரம் குற்­ற­வாளிக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல்ரணராஜாவினால் அவருக்கு இவ்வாறு தண் டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

மாணவர் சிந்­திய ஒவ்­வொரு இரத்­தத்­து­ளி­க்கும் அர­சாங்கம் பதி­ல­ளித்­தே­யாக வேண்டும் : உத­ய­கம்­மன்­பில

தற்­போ­தைய அர­சாங்கம் பொலிஸ் சுயா­தீன ஆணைக்­கு­ழுவை நிறு­வி­யதன் பலனை தற்­போது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அனு­­ப­விக்­கின்­றனர். அதனால் வோர்ட் பிளேஸ் இல் மாண­வர்கள் சிந்­திய ஒவ்­வொரு இரத்தத் துளிக்கும் அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

கொழும்பு கோட்­டேயில் அமைந்­துள்ள தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
கடந்த அர­சாங்­கத்தின் போதும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அப்­போதும் பொலிஸார் அவர்­களை நீர்த்­தா­ரைப்­பி­ர­யோகம் மேற்­கொள்ளல் அல்­லது கண்ணீர் புகை மூலம் அவர்­களை கலைத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் மாண­வர்­களை மிலேச்­சத்­த­ன­மாக தாக்­க­வில்லை.
தற்­போது அதற்கு மாறாக மாண­வர்கள் மிலேச்­சத்­த­ன­மாக தாக்­கப்­ப­டு­கின்­றனர். ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­காது வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த மாணவி ஒரு­வரும் பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­டுள்ளார்.
குறைந்த பட்ச பலப்­பி­ர­யோகம் என்ற பேரில் பொலிஸார் தாக்­கு­வ­தையும் முறை­யற்ற விதத்தில் கண்­ணீர்ப் புகைக் குண்­டு களை பிர­யோ­கிப்­ப­தையும் ஊட­கங்கள் வாயி­லாக அறிந்­து­கொள்ள முடிந்­ தது.
ஆனால் அண்­மையில் பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத் தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான ருவன் குண­சே­கரஇ ஒரு நபர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­படும் போது அவரின் உட லில் குறிப்­பிட்ட இடங்­களில் மட்டும் தான் தாக்­குதல் நடத்த முடியும் என்ற வரை­ய­றைகள் விடுக்­கப்­ப­ட­வில்லை.
பொலிஸார் குறைந்த பட்ச பலப்­பி­ர­யோ­கத்­தினை பயன்­ப­டுத்தி மாண­வர்­களை தாக்­கினர் என்று குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் ஆர்ப்­பாட்­டத்தை கலைத்த பொலிஸார் மாண­வி­களின் தலையில் தாக்கி காயத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த படங்கள் வெளி யா­கி­யிருந்­தன.
இது அர­சாங்கம் அமைத்த சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் பலன். அதனை பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் அனு­ப­விக்க நேரிட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் அர­ சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்று வடக்கில் மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். மறு­புறம் மீரி­ய­பெத்தை தோட்ட தொழி­லா­ளர்கள் தமக்கு வீடு வழங்க வேண்டும் எனக் கோரி பெரும் ஆர்ப்­பாட்­டங்கள் செய்த போதும் பொலிஸார் அமை­தி­யான முறையில் அந்த ஆர் ப்­பாட்­டங்­களை கலைத்­தனர்.
ஆனால் நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து உயர் தேசிய கணக்­கீட்டு டிப்­ளோமா பாட­நெறி பயிலும் மாண­வர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­த­போது அவர்­களை மாண­வர்கள் மிலேச்­ச­த் த­ன­மாக தாக்­கி­யது நியா­ய­மற்­றது.
இவை அனைத்தும் பொலிஸ் சுயா­தீன ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டதன் விளை­வு­ கள். இதனால் கடந்த காலங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் இவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­படும் என்று எதிர்வு கூறினோம்.
நல்­லாட்சி என்ற பேரில் நாட்டில் எம னின் ஆட்­சியே இடம் பெறு­கின்­றது. தற் ­போதும் அரசு தனது சிறு உரு­வத்தை மட்­டுமே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் எதிர்­கா­லத்தில் அரசின் சுய­ரூபம் விரை யில் வெளிப்­படும். அதன்­போது இந்த அர­சுக்கு வாக்­க­ளித்த 52 சத­வீ­தத்­தி­னரும் உணர்ந்துகொள்வர்.
இங்கு மாணவர்களை தாக்கிவிட்டு தம்மை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு நாம் ஒன்றை மட்டுமே கூற விரும்புகின் றோம். அவர் தமது பேச்சாளர் பத வியிலி ருந்து சற்று காலம் விலகிச் சென்று சட் டம் பயின்ற பின் னர் மீண்டும் ஊடகப் பேச்சாளர் தொழிலில் இணைந்து கொள் வது சிறந்தது என்றார்.
Read More