Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 17, 2015

avathani Media Network

நோயாளிகளை நுளம்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரெயின்கோ நிறுவனத்தினால் 50 நுளம்பு வலைகள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கி வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ரெயின்கோநிறுவனத்தினால்; சுமார் 1500 ரூபா பெறுமதியான 50 நுளம்பு வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்ட்ட மேற்படி நுளம்பு வலைகளை வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் 17-11-2015 இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாiயின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகரும்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான டாக்டர் எஸ்.எப்.அல்மீடா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ரெயின்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகளினால் 50 நுளம்பு வலைகள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ரெயின்கோ நிறுவனத்தின் வட-கிழக்கு மத்திய மாகாண விற்பனை முகாமையாளர்களான எம்.பீ.எம்.சுல்பிக், எம்.றிஸ்வின்,எம்.நஸான் ,கிழக்கு மாகாணரெயின்கோ விநியோகத்தர் எம்.அஃனப்,வைத்திய கலாநிதி என்.சுசில், பல் வைத்தியர் திருமதி.சரூபா சமட், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ரீ.லக்சுமி காந்தன்,உப செயலாளர் கே.சிவலிங்கம்,பொருலாளர் எம்.தயாபுரமுரளி உட்பட அதன் உறுப்பினர்கள் , சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் முன்னாள் தலைவரும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் உறுப்பினருமான எம்.வை.ஆதம், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நுளம்பு வலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக நுளம்பு பெருக்கத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நுளம்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரெயின்கோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











Read More
avathani Media Network

பாரிஸ் நகர தாக்குதல் பற்றிய பயான் வீடியோ

"பாரிஸ் நகர தாக்குதல் தெரிவிக்கும் செய்தியென்ன ?" எனும் தலைப்பில் 16.11.15 திங்கட் கிழமை அன்று NTJ பிரச்சாரகர் மௌலவி MCM ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களால் NTJ தலைமயகத்தில் ஆற்றப்பட்ட உரை.
உரையினை முழுமையாகக் கேட்க இங்கே Clik பண்ணவும்




Read More
avathani Media Network

பாரிஸ் தாக்குதலின் பின்னணியில் பிரன்ச் இருக்கலாம் என சந்தேகம்- உலமா கட்சியின் தலைவர்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)

பாரிஸ் தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இத்தகைய
தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான நியாயத்தை தேடும்
அமெரிக்க ஐரோப்பிய சதியாகவும் இருக்க சாத்தியமுள்ளதாகவும் அக்கட்சி
தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசாங்கம் உருவான போது அதனை ஒழித்துக்கட்டும்
நோக்கில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்கர்களின்
ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது என்பது பின்னாட்களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட
செய்தியானது. ஆனாலும் முதலில் இதனை தாம்தான் செய்ததாக அல்கைதா
ஏற்றுக்கொண்டதாகவே அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்கள் கூறின. பின்னர் தமது
தாக்குதல்களுக்கு நியாயம் தேடவும் அதற்கு ஆதரவாக சர்வதேச நாடுகளை
திரட்டவுமே இச்சதிதத்திட்டம் நடத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.

அதே போல் பாரிஸ் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரன்சுப்படையினர் சிரியாவில்
மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், பிரான்சிலுள்ள சிரிய அகதிகள் முகாம்
தீவைப்பு, கனடாவில் உள்ள அல் சலாமா பள்ளிவாயல் எரிப்பு என்பன பாரிஸ்
தாக்குதலின் பின்னணியில் பிரன்ச் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள்
இருக்கலாமோ என்ற வலுவான சந்தேகத்தை கொடுக்கிறது.

சிரிய யுத்தம் உக்ரமடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அகதிகள் பலர் ஐரோப்பிய
நாடுகளுக்கு அகதிகளாக செல்வதால் இவர்களை வர விடாமல் இருப்பதற்காக தமது
தரப்பு நியாயத்துக்காக இவை மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள்
உள்ளன.

ஐ எஸ் போராளிகளின் பல செயற்பாடுகளில் நாம் உடன்பாடு காணவில்லை. ஆனால்
இஸ்லாமிய உலகில் உள்ள ஆயுத தாரிகள் இன்று வரை முஸ்லிம் நாடுகளில்தான்
குண்டு வைக்கின்றார்களே தவிர முஸ்லிமல்லாத நாடுகளில் வைக்கவில்லை என்பதே
உண்மையாகும். அப்படித்தான் பாரிசில் அப்பாவி மக்களை தாக்குவதாயின்
தற்கொலை படையினரை பயன்படுத்தாது குண்டுகளை வைத்து வெடிக்கச்செய்வது மிக
இலகுவானது.

இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது கடினமானது என்பதால் அதற்கே
தற்கொலை தாக்குதல் நடத்தப்படும். ஆனால் இங்கு சில அறபுக்கள் விலைக்கு
வாங்கப்பட்டு ஐ எஸ் மீது பழி போட வேண்டும் என்பதற்காகவே இது
திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் பாரிஸ் தாக்குதலை யார் மேற்கொண்டிருந்தாலும் அது
கண்டிப்புக்குரியதாகும். அதே போல் சிரியா, இராக்கில் அப்பாவி மக்கள் மீது
குண்டு பொழியப்படுவதையும் மனிதாபிமானமுள்ள சக்திகள் கண்டித்து அவற்றை
நிறுத்தவும் குரல் கொடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Read More
avathani Media Network

புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்..

ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும்
பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு.
இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை
பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.
புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை.
சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு
தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40
சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.
மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர்.
புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.
* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப்
பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை
துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என
கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு
வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்
கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல்
நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை
தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு
மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி,.புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு
மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின்
குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய்,
சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 200 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக.இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக
ஆகமாட்டார்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்
றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]
மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு
முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது.
புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது.
அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக
அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய
தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு
சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார்.
இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..?
[திர்மிதி]
நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்?
சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக
இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா?
சிந்திக்க வேண்டும்.புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்க
ள்; ஷைத்தானோ
தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)
சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை
ஆயிரங்களை விரயமாக்கியிருக
்கிறோம் என்று கணக்கிடமுடியும்
. ஒரு பாக்கெட்
சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும்.
மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக,
இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை
வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.
நண்பர்களே! இன்ஷா அல்லாஹ் இவ் விழிப்புணர்வு தகவல் பிரசுரம் வடிவில் வெளிவரவுள்ளது .. எதிர்பாருங்கள்.. உங்கள் கருத்துக்களை தெறிவியுங்கள்...
Read More
avathani Media Network

அம்பாறை மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றுவதற்கான தீர்வு

அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான திண்மக்கழிவு அகற்றுவதற்கான பிரச்சினையை ஒழிக்கவும் அப் பிரதேச இளம் சமுதாயத்தின் தொழில் பிரச்சினைக்கு ஆறுதலாக அமையவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் முயற்சியினால் சீனாவை சேர்ந்த Zhengzhou Whirlston Trade Co .,Ltd கம்பனியின் மூலம் எதிர்வரும் 2016 ஏப்ரல் ஆரம்ப பகுதியில் சொறிக் கல்முனை 6 ஆம் குலனி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள தின்மக் கழிவுகளை உரமாக மாற்றும் தொழிற்சாலையில்  கீழ்வரும் தொழில்கள் வழங்கப்படவுள்ளன.

தொழில்சாலை அமைப்பதுக்காக தெரிவு செய்யப்பட்ட நிலம் சொறிக் கல்முனை 6 ஆம் குலனி

சாரதிகள் , மின் பொறியலாளர், தின்ம கழிவு சேகரிப்பாளர்கள், களஞ்சிய சாலை காப்பாளர், பொதியிடுபவர், உற்பத்தி முகாமையாளர், அலுவாக, நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆளணி முகாமையாளர் கணக்காளர் ,மின்னினைப்பாளர், மெக்கானிக், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள், தொழில்சாலை ஊழியர்கள் , மேற்பார்வையாளர்கள் , காவலாளிகள். 


அம்பாறை மாவட்ட மூவின இளைஞர் யுவதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.



Read More
avathani Media Network

அமெரிக்கா, ஐரோப்பாவிலும் தாக்குதல் நடத்துவோம்: ஐஎஸ் ஐஎஸ் மிரட்டல்

சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸின் கதி தான் ஏற்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தீவிரவாதிகள் கூறியிருப்பதாவது.


எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான். எப்படி பிரான்ஸின் மையமான பாரீஸில் தாக்குதல் நடத்தினோமோ அதே போன்று அமெரிக்காவின் மையமான வாஷிங்டனை தாக்குவோம். மேலும் ஐரோப்பாவையும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ ஈராக்கில் உள்ள சலாஹுத்தான் மாகாணத்தில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்காமல் ஓயப் போவது இல்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது

Read More
avathani Media Network

மஹிந்தவின் மகன் யோசித்தவின் தொலைக்காட்சி நிறுவனத்தில் சோதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோசித்த ராஜபக்ஷவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடுவெல நீதிமன்றத்தின் அனுமதிக்கிணங்க பத்தரமுல்லையில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தில் நேற்று (திங்கட்கிழமை) பல மணித்தியாலங்கள் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
இதன்போது, கனணி, மடிக்கனணி உள்ளிட்ட சில பொருட்கள் விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தாருக்குச் சொந்தமான குறித்த நிறுவனம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வளங்களை சூறையாடியதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதன் தலைமையகம் ஜனாதிபதி செயலகத்தில் இயங்கி வந்ததாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ttnnews
Read More
avathani Media Network

அமைச்சரவையில் சில மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை

அமைச்சுக்களில் காணப்படும் சில முரண்பாடுகளை களையும் நோக்கில், விரைவில் அமைச்சரவையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து கலந்தோலோசிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுக்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்ததில் ஏற்கனவே பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்துடன், அதிகாரங்களை பகிர்வதில் அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறான காரணங்களை கருத்திற்கொண்டு அமைச்சுக்களுக்கான துறை ஒதுக்கீடு மீள ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Read More
avathani Media Network

புறக்கோட்டையில் பட்டப்பகலில் 12 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

புறக்கோட்டை–கதி­ரேசன் வீதிப் பகு­தியில் பட்­டப்­ப­கலில் நப­ரொ­ரு­வரின் கழுத்தை வெட்­டி­விட்டு வங்­கியில் வைப்­பி­லிட எடுத்துச்செல்­லப்­பட்ட 12 இலட்சம் ரூபா பணம் அடை­யாளம் தெரி­யாத நபர்­க­ளினால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

இச்­சம்பவம் நேற்று பிற்­பகல் 1.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சம்­ப­வத்தில் காய­ம­டைந்த அப்­பி­ர­தே­சத்தின் பால் மா களஞ்­சியம் ஒன்றின் பரா­ம­ரிப்பு நிதி சேக­ரிப்­பாளரான லெஸ்லி குணவர்த்தன (வயது 58) கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
இந்த சம்­பவம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,
புறக்கோட்டை–கதி­ரேசன் வீதியில் உள்ள பிர­பல பால் மா களஞ்சி­ய­சாலை ஒன்றில் நிதிசேக­ரிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்றும் நபர் நேற்றும் வழமை போன்று நிதி சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார். நேற்­றைய தினம் குறித்த வீதியில் உள்ள பல கடை­களில் நிதியை சேக­ரித்த அவர் சேக­ரிக்­கப்­பட்ட சுமார் 12 இலட்சம் ரூபாவை வங்­கியில் வைப்­பி­லிட எடுத்துச் சென்­றுள்ளார்.
இதன் போது அவரை பின்தொடர்ந்து வந்­துள்ள கொள்­ளையன் ஒருவன் அந் நபரின் கைகளில் இருந்த பணத்தை பறித்துச் செல்ல முற்­பட்­டுள்ளான். கொள்­ளை­ய­னி­ட­மி­ருந்து பணத்தை காக்க குறித்த நபர் போரா­டவே கொள்­ளையன் உடன் வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து குறித்த நபரின் கழுத்தை வெட்­டி­யுள்ளான். பின்னர் பணத்தை எடுத்­துக்­கொன்டு அவன் தப்பிச் சென்­றுள்ளான்.
சம்ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த குறித்த நபர் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.
சம்ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்திற்கு விரைந்த புறக்­கோட்டை பொலிஸார், மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சம்பிக்க சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More
avathani Media Network

திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கப்போகும் அரசாங்கம்

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்த்து அங்கு அமெ­ரிக்க படை முகாம்­களை அமைப்­ப­தற்கு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இது நாட் டின் தேசிய பாது­காப்­பிற்கும் தெற்கா­சி­ யா­வுக்கும் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லாகும் என முன்னாள் அமைச்சரும் சம சமாஜக் கட்­சியின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எச்சரிக்கை விடுத்தார்.
உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் சர்­வ­ தேச நாடுகள் இலங்­கையின் விட­யத்தில் தலை­யி­டு­வதைப் போன்று அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரி­வித்தார்.
கொழும்பு பொர­ளையில் உள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சோஷ­லிச மக்கள் முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
பயங்­க­ர­வா­திகள் பிரான்ஸில் நடத்­திய காட்­டு­மி­ராண்டித் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தொடர்பில் எமது கவ­லை­யையும் அனு­தா­பத்­தையும் இத்­த­ரு­ணத்தில் தெரி­வித்துக் கொள்­கிறோம்.
இதே­வேளை, உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு சர்­வ­தேசம் ஒன்­றி­ணைந்து போரா­டப்­போ­வதை வர­வேற்­கின்றோம்.இலங்­கையில் இதே­போன்­ற­தொரு பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கா­கவே எமது படை­யினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.
ஆனால் இன்று உலகப் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராடத் தயா­ராகும் சர்­வ­தேசம் எமது நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டமை தொடர்பில் எமது படை­யினர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றது.
எமது நாட்டுப் பிரச்­சி­னையில் தலை­யிட்­டது போன்று சர்வதேச ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கும் போது அவற்றில் தலை­யிட வேண்­டா­மென்று கேட்டுக் கொள்­கிறோம்.
இலங்கை அர­சாங்கம் இன்று முழுக்க முழுக்க அமெ­ரிக்­காவின் சார்­புத்­தன்­மை­யா­ன­தாக கீழ்­ப­டிந்து உள்­ள­தென அந்­நாட்டின் உயர் இரா­ணுவ அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
அமெ­ரிக்கா தனது பாது­காப்பு தொடர்பில் கடல் வல­யத்­தி­னூ­டாக முன்­னெ­டுத்து வரும் பாது­காப்­பிற்­காக திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை கைப்­பற்றும் முயற்­சியை முன்­னெ­டுத்து வரு­கி­றது.
அர­சாங்­கமும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்ப்­ப­தற்கு தயா­ராக உள்­ள­தோடு திரு­கோ­ண­ம­லையில் அமெ­ரிக்கப் படை­யி­னரின் முகாம்­களை அமைப்­ப­தற்கும் அனு­மதி அளிக்க முன்­வந்­துள்­ளது.
இது பயங்­க­ர­மான நிலை­மை­யாகும். இவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அது சீனாவுக்கும் ஆபத்தானதாக அமையும். அது மட்டுமல்லாது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை என்றார்.
Read More
avathani Media Network

ஆளனிப் பற்றாக்குறை காரணமாக குவிந்து கிடக்கும் லஞ்சம், ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள்

அரச ஊழியர்களுக்கு எதிரான 10,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் ஆளனிப் பற்றாக்குறை காரணமாக குவிந்து கிடப்பதாக லஞ்சம், ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டு க்களை விசாரிக்கும் ஆணைக் குழு தெரிவித்து ள்ளது.
800 ஆளனியினர் தேவைப்படும் இடத்தில் 154 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இதனால் விசாரணைகளை பூர்த்தி செய்வதில் தாமதமாவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் தெரிவித்தார். இவ்வருடம் 4000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும் 6000 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட உள்ளன.
2001 ஆண்டு முதல் பல விசாரணைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
லஞ்சம், ஊழல் அற்ற நாடாக எதிர்வரும் மூன்றாண்டுகளில் இலங்கையை நாம் மாற்றுவோம்.
சகல முறைப்பாடுகளையும் விசாரித்து முடிப்போம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
எமது பணிகளை இலகுபடுத்த சிவில் நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் நாம் பெற உள்ளோம்.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமும் அனுஷ்டிக்கப்படும் இத்தினத்துக்கு மக்கள் பங்களிப்பையும் நாம் பெற உள்ளோம்.
இந்த நிகழ்வின் நினைவாக விசேட நடைபவனி மேற்கொள்ளப்படும்.
விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை இது நடைபெறும்.
 “I PAID THE BRIBE”  என்ற இணையத்தளமும் இதன்போது திறந்து வைக்கப்படும்.
டிசம்பர் 09 ஆம் திகதி மாலை 03 மணிக்கு இந்த நடைபவனி ஆரம்ப மாகும் என்றும் தில்ருக்ஷி டயஸ் தெரிவித்தார்.
Read More