Featured Home (TOP)

Recent Comments

Saturday, November 28, 2015

avathani Media Network

திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் -ஜகத் குமார

(-எம்.எச்.எம்.அன்வர்-)

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார்
ஓட்டமாவடி நகர மண்டபத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு 26.11.2015 அன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் என் ரவீந்திர குமார் தலைமையில் இடம்பெற்றது மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு பி குணரெத்தினம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்
செயலாளர் மேலும் தனதுரையில் 
அண்மைக்காலங்களில் சமுர்தித் திட்டத்திற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பாரிய அநீதி இடம்பெறவிருந்தது அப்போது அமைச்சராக இருந்தவர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவாகும் இது சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் வழக்கு தாக்கல் செய்தோம் 
அத்துடன் யார் அமைச்சராக வந்தாலும் சமுர்த்தி திட்டத்திற்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதனை பார்த்துக்கொண்டு எமது சங்கம் சும்மா இருக்க முடியாது 
ஆரம்ப காலத்தில் 1945 ரூபா சம்பளமாக பெற்ற எமது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது கணிசமான சம்பளங்களை பெறுகின்றனர் இவர்களுக்கான பதவியுயர்வுகள் காகிதாதிகள் காரியாலய வாடகை பிரயாணக்கொடுப்பனவு போன்ற அனைத்து வசதிகளையும் பெற எமது சங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது
எமது தொழிற்சங்கமானது கடந்த காலங்களில் இவற்றினை பெற்றுக்கொள்ள பாரிய போராட்டங்கள் சத்தியாக்கிரகங்களை நடாத்தியே பெற்றுக்கொண்டுள்ளது எனவே மேற்படி அகில இலங்கை சமுரத்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பினை எதிர்காலத்தில் வழங்குவீர்கள் என நம்புகிறேன் இவ்வாறு தனதுரையில்  மேலும் தெரிவித்தார்






Read More
avathani Media Network

நாடு தழுவிய ரீதியில் போராட்டம்..! அரச மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக என அரச மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் திருத்தம் செய்யாமை மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு வரிச் சலுகை வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் தினங்களில் அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

"தூய தேசத்தை நோக்கிய பயணம்" விழிப்புணர்வு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் மற்றுமொரு சமூக விழிப்புனர்வு செயதிட்டமான "தூய தேசத்தை நோக்கிய பயணம்" நேற்று (27.11.2015)வெள்ளிக்கிழமை காத்தான்குடி யில் ஆரம்பிக்கப்பட்டது.

இச் செயற்திட்டத்தின் முதலாவது வெளியிடாக"சுய விசாரணை" எனும் பிரசுரம் காத்தான்குடி கடற்கரை திடலில் வினியோகிக்கப்பட்டதோடு.மற்றுமொரு பிரசுரமான " சிகரட் வாழ்வா சாவா?" என்கின்ற விழிப்புணர்வு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது..
இச் செயற்திட்டங்கள் பொதுமக்களது பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது .










Read More
avathani Media Network

ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தூர இடங்களுக்கு செல்லும் ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை என  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி மிதிப்பலகையில் செல்லத்தடை விதிக்கட்பட்டுள்ளது என்று ரயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரதி முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 பயணிகளின் பாதுகாப்பிற்காகவே இச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இது அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம்.
பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்.
இதன் காரணமாக பலஸ்தீன தலைநகரின் நகரமொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் சூட்டப்பட்டது.
முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் பெரும்பாலான அரபிய நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

இலஞ்சம் பெறும்போது வசமாக சிக்கிய பொலிஸ் உயரதிகாரி

25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொஹுவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More
avathani Media Network

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய கல்லூரியின் மற்றுமொரு சாதனை. ¬-தேசிய மீலாத் போட்டியில், தேசிய ரீதியில் முதலாமிடம்-

(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
கடந்த 2015,11,15ம் திகதி கொழும்பு 12, பண்டாரநாயக்க, மாவத்தை, பாத்திமா மகளிர் கல்லூரியில் ஒன்பது மாகாணங்கள்; கலந்து கொண்ட தேசிய மீலாத் தின இறுதிப் போட்டியில் நிந்தவூர் கமுஃகமுஃஅல்அஷ்றக் ம,ம,வி (தே,பாடசாலை ) சிரேஷ்ட பிரிவு, ஆண்களுக்கான நாடகப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைத் தட்டிக் கொண்டு, சாதனை படைத்துள்ளது.

நாடகத்தின் தலைப்பு(நெருப்புக் குண்ட வாசிகள்). இந்த நாடகம் கல்முனை கல்;வி வலயத்திலும், காத்தான்குடியில் நடைபெற்ற மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தைதட்டிக் கொண்டுள்ளதுடன், 1974ம் ஆண்டு கமுஃகமுஃஅல்அஸ்றக் ம,ம,வி (தே,பாடசாலை)யின் அதிபர் மர்ஹும் எம்.எஸ்.ஹமீது அவர்களது காலத்தில் 'பண்டாரவன்னியன்'எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டு தேசிய விருதைப் பெற்றது ,அதன் பிறகு தற்போதைய அதிபர் எஸ்.எம். ஜாபிர் அவர்களது சேவையில் சுமார் 40 வருடங்களின் பின்னர் இந்தநாடகமே தேசிய ரீதியில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டு, நிந்தவுர் கமுஃகமுஃஅல் அஸ்றக் ம,ம,வி தேசிய பாடசாலைக்கும்,கல்முனை கல்வி வலயத்திற்கும் நன்மதிப்பைத் தேடிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைச் சம்பவமான இந் நாடகத்தை கமுஃகமுஃஅல்அறக் ம,ம,வி (தே,பாடசாலை)யின் ஆசிரியர் அல்ஹாஜ் எம்,எஸ்,அப்துல் றஷீது மௌலவி (ஸர்கி)அவர்கள் எழுதி, வடிவமைத்து அதனைஇயக்க,செல்வன் ஏ,எல், முஸ்பிர் எனும் மாணவன் நாடகத்திற்குத் தேவையான திட்டமிடல் மற்றும் ஒப்பனைகளை வழங்கியுள்ளார்.

இந்நாடகத்தில்; வரும் கதாபாத்திரங்களும், மாணவர் பெயர்களும்.
1) அரசன்:- ஏ.எம். ஜராத்
2) சிறுவன்:- ஐ.எம்.ஐ.இபாஸ் முகம்மது இக்பால்
3) மந்திரவாதி:- எம்.ஆர்.மபாஸ்
4) துறவி:- எம்.கே.எம். அக்தர்.
5) சிப்பாய்;:- 1 எம்.கே.எம். ஜெம்சித்
6) சிப்பாய்;:- 2 எம்.எம். றிஸ்வி
7) சிப்பாய்;:- 3 எம்.எஸ்.எம். இஸாம்
8) ஊர்வசி:- 1 கே. ஜேனோஜ்.
9) ஊர்வசி:- 2 ஏ.எஸ்.ஆகில்
10) ஊர்வசி:- 3 பி. துஸான்.
11) தகப்பன்:- எம். மின்ஹாஜ்
இந்நாடகத்தை எழுதி, அதனைத் தயாரித்து, மாணவர்களையும் நன்கு பயிற்று வித்து, இறுதியில் அகில இலங்கை மட்டத்தில் முதலாமிடம் வரை அதனை வழிநடத்திச் சென்ற சாதனை புரிய வைத்த சங்கைக்குரிய உலமா அல்ஹாஜ் எம்,எஸ்,அப்துல் றஷீது மௌலவி (ஸர்கி)அவர்கள் இப்பாடசாலை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுச் சென்று ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் இப்பாடசாலை மீது அவர் வைத்துள்ள பற்றையும், பாசத்தையும், மாணவர் முன்னேற்றத்தில் அவர் கொண்டுள்ள அக்கரையையும் காட்டுகின்றது. எனவே, அவர் சேவையை இறைவன் பொருந்திக் கொள்ள மாணவர், ஆசிரியர், பெற்றோர் சார்பாகப் பிரார்த்திக்கிறோம்.








Read More