Featured Home (TOP)

Recent Comments

Friday, December 18, 2015

avathani Media Network

தேங்காய் தொடர்பில் சபையில் சர்ச்சை

தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என்ற அரசின் வரவு செலவுத் திட்ட யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அரசின்  நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹதுன்னெத்தி இன்று சபையில் முன்வைத்ததோடு
"ப்ரோடைம்" சட்டத்திற்கமைய இலங்கைக்கு தேங்காய் இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 
 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவுத் திட்டத்தில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுமென்ற யோசனையை முன்வைத்துள்ளார். 
ஆனால் இதற்கு பொறுப்பான பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவின் திஸாநாயக்க இந்த யோசனையை எதிர்க்கின்றார். 
தேங்காய் இறக்குமதி செய்வதை தான் எதிர்ப்பதாகவும் அதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். 
அத்தோடு கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட தேய்ங்காய்கள் கடலில் கொட்டப்பட்டது. 
அதேவேளை " ப்ரோடைம்" சட்டத்திற்கமைய இலங்கைக்கு தேங்காய்களை இறக்குமதி செய்ய முடியாது. 
இவ்வாறானதோர் சூழ்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தேங்காய் இறக்குமதி யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அரசின் தீர்மானம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றார்.
(ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம்) virakesri.lk 
Read More
avathani Media Network

விசாரணைகளுக்காக அழைக்கப்படவுள்ள மஹிந்தவின் பாரியார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்க்ஷவிடம், பாரிய நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மானிக்கப்பட்ட ஆடம்பர வீடு ஒனறை, மிகக் குறைந்த விலையில் தமது ஊடக ஆலோசகர் ஒருவருக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து எதிர்வரும் வாரமளவில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

சிரந்தி ராஜபக்ஷ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் மதிக்கத்தக்க வீடு , குறைந்த விலையில் பெற்றுக் கொடுத்தமைத் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு பல அரச அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சிரந்தி ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
Read More
avathani Media Network

யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்  ஐங்கரநேசன்,
2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியதால் சுமார் ஒரு மணித் தியாலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சுனாமியால் உடமைகள், உயிர்கள் என பல அழிவடைந்தன. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் நாம் மீளவில்லை. எனவே 26 ஆம் திகதியை நாம் 'பேரழிவு கட்டுபாடு நாள்" என பிரகடனம் செய்துள்ளோம்.
இதேவேளை இலங்கையில் எதிர்காலத்தில் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இயற்கை பேரழிவுகள் என்பது புதிதல்ல. எனினும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் பூமியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 
மேலும் உலகில் உள்ள எரிமலைகள் பல வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துள்ள அதிக மழை பெய்யும் நிலையும் ஏற்பட்டு வெள்ளமும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையே அண்மையில் சென்னையில் ஏற்பட்டிருந்தது.
எனவே இயற்கை பேரழிவுகளிருந்து எம்மை பாதுகாத்துகொள்ள இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் இருப்பதோடு இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Read More
avathani Media Network

குருநாகல் சாரகம வாவியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

குருநாகல், சாரகம வாவியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளன​ர். இன்று (17) அதிகாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை வாவிக்கு அருகில் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 மற்றும் 15 வயது சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
Read More
avathani Media Network

ஆள்மாறாட்டம்செய்த பரீட்சார்த்திகள் இருவருக்கும் பிணை


பிரிதொரு நபருக்காக கபொத சாதாரண தரப்பரீட்சை எழுதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கடுபொத பரீட்சை நிலையத்தில் 16 வயதுடைய பரீட்சார்த்தி ஒருவருக்காக போலி ஆவணங்களை சமர்பித்து 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று பரீட்சைக்கு தோற்றி இருந்த போது பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது. 
இதனையடுத்து அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அதன்படி சந்தேகநபர்கள் இருவரையும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 50இ000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இதுதவிர ஹக்மனஇ கோன்கல பிரதேசத்தில் பரீட்சை நிலையமொன்றில் கைத்தொலைபேசி ஒன்றுடன் பரீட்சைக்கு தோற்றிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. 
Read More
avathani Media Network

மட்டக்களப்பில் நான்கு தினங்களுக்கு மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று முதல் 4 தினங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
காலை 9..00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,
18ஆம் திகதி – காக்காச்சிவட்டை, சின்னவத்தை, பலாச்சோலை
19ஆம் திகதி – மட்டக்களப்பு நகர பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி
21ஆம் திகதி – குறுமண்வெளி, மகிழூர், எருவில்
22ஆம் திகதி – வட்டவான், காயான்கெணி, மாங்கேணி, பனிச்சங்கேணி,வாகரை மருதங்கேணி தட்டுமுனை
Read More
avathani Media Network

தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் 91ஆவது இடத்தில் இலங்கை

தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளை அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பட்டியலிட்டு வருகிறது. இதன்படி 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில்  உள்ளது.
வர்த்தகம், நிதி சுதந்திரம் மற்றும் ஊழல், வன்முறை போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மோசமான நிலையில் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22ஆவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, ஜப்பான் நாடுகள் தலா 3 இடங்கள் அதிகரித்து தற்போது முறையே 10 மற்றும் 23ஆவது இடத்தில் உள்ளன. ஜெர்மனி 2 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்திலும், சீனா 97இல் இருந்து 94ஆவது இடத்திலும் உள்ளது.
தென்னாபிரிக்கா (47), மெக்சிகோ (53), கஜகஜ்தான்(57), ஜாம்பியா (73), கானா (79), ரஷ்யா (81), இந்தியா (97) ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அண்மித்த இடத்தில் உள்ளன.
பாகிஸ்தான் 103ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 121 ஆவது இடத்திலும் உள்ளன.
Read More
avathani Media Network

வங்குரோத்து அடைந்தோர் ஆட்சி கவிழும் எனக் கனவு

என்று ஆட்சி கவிழும் எப்போது எனது கதை முடியும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள் எந்தளவு வங்குரோத்து நிலையில் உள்ளனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர்களுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை சில மாதங்களிலேயே நிறைவேற்றமுடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டில் முழுமையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மின்சார சபையின் தற்காலிக ஊழிியர்கள் 2433 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்ற போது அங்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற நிறுவனமாக இலங்கை மின்சார சபை விளங்குகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் தேர்தல் காலத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நளின் பண்டார எம்.பி.யும் மின்சார சபை தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் என்னிடம் தெரிவித்தனர். நானும் அவர்களது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்.
அவர்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்ற முடிந்துள்ளது.
எமது நாட்டின் தேர்தல் வாக்குறுதிகள் சம்பந்தமாக நோக்கும் போது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது நிறைவேற்றப்படாதது தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் இதில் ஒவ்வொரு விதமாக செயற்பட்டுள்ளன.
எமது புதிய அரசாங்கத்துக்கு இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியடையாத நிலையில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
எமது அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இந்த அரசாங்கம் விரைவில் வீழ்ச்சிகாணும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
சிலர் இந்த அரசாங்கம் எப்படி விழப்போகிறது என்பது பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். தோல்வியடைந்த சிலர் எனது வீழ்ச்சி பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். நான் எப்போது மரணிக்கப் போகின்றேன் என்றெல்லாம் ஆரூடம் கூறுகின்றனர். அந்தளவு வங்குரோத்து நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை தெரிகிறது. அரசியல் ரீதியாக அவர்கள் எந்தளவு மோசமான சிந்தனையில் உள்ளனர் என்பது புரிகிறது.
இந்த வருடத்தின் ஜனவரி 8 ஆம் திகதி தான் நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றேன். 100 நாள் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். பாராளுமன்றத்தில் போதிய பலம் இல்லாத நிலையில் 19வது திருத்தத்தை 3ல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளோம்.
எமது நாட்டில் மட்டுமல்ல உலகின் ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரை எமது நாட்டுக்கு இந்த விடயத்தில் ஒரு சிறப்பு உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது அவரது ஐ. தே. க.வுக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்களே இருந்தன. எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 142 ஆசனங்கள் இருந்தன. இந்நிலையிலேயே இரு பிரதான கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி 100 நாள் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.
19வது திருத்தத்தின் மூலம் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தினோம். சுயாதீன குழுக்களை அமைத்து நாட்டின் அரச துறையை சுயாதீனப்படுத்தியுள்ளோம் பொலிஸ், நீதிமன்றம் மனித உரிமை என்பன சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு வருட குறுகிய காலத்தில் மக்களைத் திருப்திப்படுத்தும் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிய அரசாங்கம் இருக்க முடியாது. அது முடியாத காரியம் எனினும் எமது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டுள்ளோம்.
மின்சார சபை ஊழியர்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிக்கிணங்க சுமார் 2500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி நாம் வாக்குதியை நிறைவேற்றியுள்ளோம். இதேபோன்று எமது தேர்தல் வாக்குறுதிகளை நாம் தொடர்ந்தும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று மூன்று மாதமே கடந்துள்ளன எனினும் சில சக்திகள் இதனை பல்லாண்டு ஆட்சிசெய்த அரசாங்கமாக எண்ணியே கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அவர்கள் நினைப்பது போலன்றி நாம் நவீன உலகம் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு புதிய சமூகம் புதிய சந்ததி பற்றி சிந்தித்தே செயற்படுகிறோம். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று எமது தாய்நாட்டையும் உலகின் சிறந்த சாதனை படைக்கும் நாடாக கட்டியெழுப்புவதே எமது நோக்கம்.
இதற்காக இந்த யுகத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. குறிப்பாக மின் சக்தியைப் பொறுத்தவரை நாட்டிற்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வளம் அது.
குறுகிய காலத்தில் முழுநாட்டிற்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய உட்பட துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் அனைவருமே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

கொள்ளுப்பிட்டி ஆபரண விற்பனை நிலையத்தில் துணிகரக் கொள்ளை

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல ஆபரண நிலையத்திலிருந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரத்தினக் கற்களை பட்டப் பகலில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் புதன்கிழமை (16) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிலையம் தங்க ஆபரணங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் விற்பனை  செய்யும் இடமாகும். நகை கொள்வனவு செய்வது போன்ற பாவனையில் பாக்கிஸ்தானிய பிரஜைகள் இருவர் குறித்த விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் கடை உரிமையாளர் மாத்திரமே அங்கு இருந்துள்ளார்.
இவர்களில் ஒருவர் உரிமையாளரின் கழுத்தை நெறித்து பிடிக்க மற்றையவர் போத்தலில் கொண்டு வந்திருந்த திரவத்தை துணி ஒன்றில் தெளித்து அதனால் உரிமையாளரின் முகத்தை மூடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் மூச்சுப் பேச்சின்றி மயங்கி விழுந்துள்ளார். கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் இரத்தினக் கற்களை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய பொலிஸார் கொள்ளுப்பிட்டியிலுள்ள விடுதி ஒன்றிலிருந்து அன்றைய தினமே இரவு 10.40 மணியளவில் சந்தேக நபரான ஒரு பாக்கிஸ்தான் பிரஜையை கைது செய்தனர்.
அந்நபர் வழங்கிய தகவலை அடுத்து மற்றைய சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பல்மயிரா வீதியிலுள்ள விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டார்.
இவ்விருவரிடமிருந்தும் நகைகள், இரத்தினக் கற்கள் 100 அமெரிக்க டொலர் நோட்டுக்கள் 30, 50 அமெரிக்க டொலர் நோட்டுக்கள், 9 ஆயிரத்து 340 இலங்கை ரூபா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரையும் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டிய பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More
avathani Media Network

சிம்ஸ் கேம்பஸ் முஸ்தபா புலமைப்பரிசில் திட்டம் : 200 பேருக்கு வாய்ப்பு ,நீங்களும் விண்ணப்பிக்கலாம்

எமது பிரதேசத்தின் முன்னணி கல்வி நிறுவனமான சிம்ஸ் கேம்பஸ் வழமைபோன்று இம்முறையும் எமது பிரதேசத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தர பரிட்சை எழுதிய மாணவர்கள் 200 பேருக்கு முஸ்தபா புலமைப்பரிசில் திட்டத்தின் கீல் வழங்க முன்வந்துள்ளது. 

சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம்.முஸ்தபா அவர்களின் பணிப்பின் பெயரில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சகல பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள,கிறிஸ்தவ மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில்-2016 திட்டத்தின் கீல் கீழ்வரும் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 
01. Dip.in. Graphics Design
02. Dip.in. Information Technology 
03. Dip.in. Network Engneering  
04. Dip.in. English 

உங்கள் விண்ணப்பபடிவங்களை எமது சாய்ந்தமருது கிளை காரியாலயத்தில் (கமு/அல் -ஹிலால் வித்தியாலயதிட்க்கு எதிரில் )பெற்று எதிர்வரும் 2015.12.25 ம திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.என்பதுடன் மேலதிக தகவல்களை அலுவலக நேரங்களில் 067-2225600 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெறலாம்.

உங்கள் பாடசாலைகளில் எமது சிம்ஸ் கேம்பஸ் உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் தகுதிகான் போட்டிப்பரிட்சையில் தொற்றாதவர்களும் மீண்டும் ஒரு சந்தர்ப்பமாக எமது சாய்ந்தமருது கிளையில் எழுத வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

திட்டப்பணிப்பாளர் 
மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் திட்டம் 
சிம்ஸ் கேம்பஸ் 

Read More