Featured Home (TOP)

Recent Comments

Monday, December 28, 2015

avathani Media Network

யாழ். கடற்கரையில் கரை ஒதுங்கிய வீடு: விசித்திரத் தகவல் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் திருவடி நிலைக் கடற்கரையில் கரை ஒதுங்கிய வித்தியாசமான மூங்கில் வீடு கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறான மூங்கில் வீடுகள் தாய்லாந் மற்றும் இந்தியாவின் கேரளாப் பகுதிகளில் ஆற்றில் விடப்படுபவையாகும்.
Read More
avathani Media Network

மட்டு-மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நியமனம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் ,மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 23 திகதி தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பாக நியமனத்தின் பிரதி ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அமீர் அலிக்கும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சிறினேசனுக்கும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டிக்கும் ,தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் ,மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More
avathani Media Network

முச்சக்கரவண்டி பதிவுகளை உடன் நிறுத்துக் கோரி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டப் பேரணி - மஹஜரும் கையளிப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரை, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு எனும் சட்டத்தை தயவு செய்து நிறுத்துங்கள் எனக் கோரி காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (28) திங்கட்கிழமை ஆரப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
 
காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டப் பேரணி காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகத்தை சென்றடைந்து, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அமுல்படுத்தவுள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடைமுறையை இரத்து செய்யக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு அனுப்புவதற்கான மஹஜர் ஒன்று காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் என்.எம்.அபூபஸல், அதன் செயலாளர் எம்.எம்.எம்.சியாம் ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
 
மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதிகள்'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில்தானா உங்கள் சட்டங்களை அமுல்படுத்துவது, கிழக்கு மாகாண முதலமைச்சரே முச்சக்கர வண்டிகள் பதிவு எனும் சட்டத்தை நிறுத்த முன்வருவீர்களா?, வாழ்கை சுமை அதிகரித்து செல்லும் வேளையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏன் இந்த சுமை, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தனி சட்டமா? கிழக்கு மாகாண முதலமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் தொழில் புரியும் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானம்தானா, கிழக்கு மாகாண சபைக்கு தென்பட்டது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே! இது போன்ற சட்டங்களை இரத்துச் செய்ய கிழக்கு மாகாணத்தில் குரல் கொடுப்பீர்களா?, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முச்சக்கரவண்டி பதிவுகளை உடன் நிறுத்து' போன்ற தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிளான வாசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
 
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் காத்தான்குடி பொலிசார் உட்பட போக்குவரத்து பிரிவு பொலிசார் ஆகியோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.



















 
Read More
avathani Media Network

நாடு பூராகவும் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி

“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருளுக்கு அமைய நாடு பூராகவும் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அதிபர், ஆசரியர் இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளன என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் 27.12.2015 அன்று அட்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
நாடு பூராகவும் தற்பொழுது கடமையில் இருக்கின்ற 5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களும், 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசரியர்களும் 2016ஆம் அண்டு முதல் இடமாற்றம் செய்யவுள்ளனர்.
தற்பொழுது பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒரு சில பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்களும், ஒரு சில பாடசாலைகளில் குறைவான ஆசிரியர்களும் கடமையாற்றுவதால் இதன்மூலம் ஒரு சில பாடசாலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சம வள பகிர்வையும், சம ஆசிரியர் பகிர்வையும் முன்நிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றம் போல் அன்றி எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த இடமாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
மலையகத்திற்கு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அணைவரினதும் வேண்டுக்கோளாக இருக்கும்பட்சத்தில் 2016ம் அண்டு முதல் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
சீருடை துணிகள் பெறுவதற்கு வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும் இலங்கை முழுவதற்குமான அறிமுகமே இந்த வவுச்சர் முறை தனியாக மலையகத்திற்கு மட்டும் மாற்றுத்திட்டங்கள் கொண்டு வர முடியாது. ஆகையால் இதற்கான நடவடிக்கைகள் முதற்கட்டமாக வவுச்சர் பெற்றுக்கொண்டு மேலதிகமாக பணத்தை அறவிடும் வியாபாரிகளுக்கு அடுத்த முறை வவுச்சர்கள் அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்பதினை உறுதியாக தெரிவித்தார்.
குறிப்பாக ஒரு சில பெற்றோர்கள் குறித்த வவுச்சர்களை வியாபார ஸ்தாபனங்களில் கொடுத்து அதற்கான பணத்தை மாத்திரம் பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு தற்போது இடமளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஒரு சில பெற்றோர்கள் இந்த வவுச்சர் முறையை எதிர்க்கின்றனர்.
எனவே இந்த இலவச சீருடைகள் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதினாலேயே இந்த புதிய வவுச்சர் முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தோடு இலங்கையில் பாரிய கல்வி மாற்றம் இடம்பெறவுள்ளது. கல்வி மாற்றத்தை மேற்கொள்ளவதற்கு அதிகளவிலான நிதி எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதனைக்கொண்டு 2016ம் அண்டு முதல் இலங்கையில் பாரிய கல்வி மாற்றத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் மேலும் இவர் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்

எரிபொருள் சம்பந்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைப் பொறிமுறையை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்க இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கின்றார்.
புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் உள்நாட்டில் நிலையான விலையொன்றை பேணுவதற்கு முடிவதாக அமைச்சர் கூறினார்.
இமதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
Read More
avathani Media Network

எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் அவர்களுடனான ஒரு சந்திப்பு

இன்றைய எமது மக்கள் மேன்மையில் நாம் பல துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு பொதுமகனை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அந்தவகையில் இன்றைய இந்த அறிமுகத்தில் எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் அவர்களை சந்தித்தோம்.

(செவ்வி கண்டவர்கள்  : ஜெகதீஸ்வரன் & லாபீர் இஸ்மாயில்) ​

நிருபர்: அஸ்ஸலாமு அலைக்கும்  சகோதரர் ஹுதா அவர்களே ! எமது மக்கள் மேன்மை அறிமுக நிகழ்விற்காக உங்களை பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்..
ஹுதா : வா அலைக்குமுஸ்ஸலாம். முதலில் இந்த சந்தர்பத்தை எனக்கு தந்தமைக்கு நன்றி,நான் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் பிணைந்து வாழும் காரைதிவு பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கிழே உள்ள மாளிகைக்காடு எனும் ஊரில் 1990.04.07ம்திகதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த  சீனிமுஹம்மது உமர்லெப்பை  ,முஸ்தபா சித்தி கவுலா ஆகியோருக்கு முதல் மகனாக பிறந்தேன். எனது ஆரம்ப கல்வியை மாளிகைக்காடு அல் -ஹுசைன் வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை சாஹிரா  தேசிய கல்லூரியிலும் கற்றேன்.எனது மேலதிக உயர்  கல்வியை அகில  இந்திய முகாமைத்துவ கல்வி நிலையதிலும் ,கொழும்பு சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்திலும் கற்றேன்.தற்போது இந்தியாவில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் எனது முதுமாணி (MBA ) பட்டப்படிப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன்.

நிருபர்: உங்கள் எழுத்துப்பணி பற்றி கூறுங்களேன்......

ஹுதா : இலங்கையின் பல தேசிய பத்திரிக்கைகளுக்கும்,சர்வதேச ஊடகங்களுக்கும் எனது சொந்த பெயர்களிலும் எனது புனைப்பெயர்களுடனும் பல செய்திகளை எழுதிவருகிறேன்.அதே போன்று சமூக வலைத்தளங்களுக்கும் எனது செய்திகள் சென்றடைகிறது.மக்கள் நம்பிக்கையை வென்ற தினப்பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும் கடமையாற்றுகிறேன்.நான் என்னுடைய பாடசாலை காலங்களில் இருந்து கவிதைகள் ,கட்டுறைகள் என எழுதி வருகிறேன்.எனது கவிதைகளை பாராட்டி 2 தடவைகள் NYSC இன் தேசிய விருதுகள் கிடைக்கபெற்றன. அதேபோன்று பல மாகாண ,மாவட்ட போட்டிகளிலும் எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும்,பல விருதுகள் கிடைக்க பெற்றது.
நிருபர்: நீங்கள் பெற்ற உயரிய கௌரவமாக எதனை எண்ணுகிறீர்கள்?
ஹுதா: 2 தடவைகள் தேசிய அளவில் முதலிடம் கிடைத்தும் நான் உயரிய கௌரவமாக எண்ணுவது  எனது பாடசாலை சமுகம் தந்த கலைமகன் விருதே. அண்மையில் கட்டார் தமிழ் அமைப்பு ஒன்றினால் எனக்கு சிறந்த சமூக நோக்கு கவிதைக்கான விருது கிடைக்க பெற்றது அளவில்லா மகிழ்ச்சியே..
நிருபர் : எழுத்து துறை தாண்டி நீங்கள் ஒரு அறிவிப்பாளரும்,பேச்சாளரும்  கூட  அந்த அனுபவத்தை சொல்லுங்கள்..
ஹுதா: எனது முதலாவது அறிவிப்பு 1997.10.06 ஒரு  ஆசிரியர் தினத்தில் ஆரம்பமாகி எனது ஆசிரியர்களாலும் ,மேலும் பலரின் ஊக்கத்தாலும் சிறப்பாக உருப்பெற்று பல அறிவிப்பு துறை சார் விருதுகளையும் பெற்று கொடுத்தது. NYSC தேசிய விருதினை பெற்ற எனக்கு பலவழிகளிலும் உதவிய எனது குடும்பத்திற்கு என்றும் நான் நன்றிகடன் பட்டவனே. அதேபோன்று எனது நண்பர்களான சப்னி,தானிஸ்,மோகன்,தியாகு ஆகியோருக்கும் பங்கு உண்டு எனலாம்.  ஒரு அரசியல் மேடையில் குறித்த ஒரு பிரமுகர் வருவதற்கு தாமதம் ஆகியதால் அந்த நேரத்தை முகாமைத்துவம் செய்ய யாருமில்லாததால் அந்த நேரத்தில் நான் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில்  பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் முதலாவது அரசியல் பேச்சை அங்கு பேசினேன்.நான் அங்கு அன்றைய சூழ்நிலைக்கு சரியான விடயத்தை தெளிவாக பேசியதாகவும் தைரியமான சிறந்த பேச்சாளருக்கான தகுதி இருப்பதாகவும் அந்த மேடையில் இருந்த பலரும் பாராட்டிய அந்த நேரம் எனது வாழ்க்கைக்கு கிடைத்த பொன்னான நேரம் எனலாம்.அதனை தொடர்ந்து அந்த கட்சி போட்டியிட்ட  தேர்தலில் சகல மேடைகளிலும் முழங்க ஆரம்பித்தேன்.
ஒரு சில  தனியார் ஊடகத்தில் அறிவிப்பாளர் வேலைக்கு சந்தர்ப்பங்கள்  கிடைத்தும் எனது வெளிநாட்டு தொழில் வாய்ப்பினால் அது எட்டாக்கனியாகி விட்டது வேதனையான ஒன்றே.

நிருபர் உங்கள் வளர்ச்சிக்கு காரணம் யார் ? உங்கள் வளர்ச்சியிலும் ஒரு பெண் உள்ளாரா? 
ஹுதா: என் வளர்ச்சிக்கு முதல் காரணம் எனது சகோதரர்  . நான்  சறுக்கி விழும் இடமெல்லாம் கரம் கொடுக்கும் நண்பராய் இருக்கிறார்.எனது சகோதரர்  தான் இதெல்லாம் சாத்தியமானது எனலாம் .எனது வழிகாட்டி, மை ரோல் மோடல் அவர்தான்.எனது முதல் கவிதை நூலான பனை ஓலைகள் கவிதை வெளியிட்டு விழா சிலரின் சதியால் படுதோல்வியை சந்தித்தது.அப்போதும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்.அதனால் தான் இன்று பனையோலைகள் ,இசை பாடும் மூங்க்கில்காடு,கருவறை சொந்தங்கள்,மிக விரைவில் கப்பல் பயணம் ஆகிய கவிதை நூல்களை இந்த இலக்கிய உலகுக்கு தர முடிந்தது. அதேபோல என்வளர்ச்சிக்கு பின்னல் ஒன்றில்லை 4 பெண்கள் இருக்கிறார்கள்.எனது தாயும் சகோதரிகளும் தான் அவர்கள்...எனது முதலாவது கவிதை நூல்  தோல்வியை சந்தித்த போது ஊக்கம் அளித்தவர்கள் இவர்கள் தான் .எனது தந்தையின் அர்ப்பணம் சொல்லில் வடிக்க முடியாத ஒன்றே.
நிருபர்: நீங்கள் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு கொண்டவர் அதனை பற்றி சற்று கூறுங்கல்.
ஹுதா: நான் ஏற்கனவே சொன்னது போல எனது குடும்பத்தினர் அதிக சமுக நலன் கொண்டவர்கள். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுக்கும் அன்வர் முஸ்தபா.இவர்களை பார்த்து பழகியதாகவே இந்த சமுக சேவையை என்னுகிறேன். சகல இன, பிரதேச,மக்களையும் உள்ளடக்கியதாக உள்ள அல்-மீசான் பௌண்டசன் அமைப்பின் தலைவராக என்னை நியமித்திருப்பது எனக்கு சந்தோசமே.இது தவிர சிறு வயதில் ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் நிருவாக சபை உறுப்பினராக,கிராம அபிவிருத்தி சங்க உப செயலாளர்,சனசமுக நிலைய பிரதி தலைவர்,பிரதேச மட்ட முதலுதவி குழு தலைவர்,இளையோர் கழகங்களின் தலைவராக பொறுப்பு வகித்த அனுபவம் மிக பெரிய அனுபவமே.தமிழ் சகோதரர்கள் அதிகமாக வசிக்கும் எனது பிரதேசத்தின் பிரதேச சம்மேளன தலைவராக தொடரச்சியாக 3  வருடங்களும்,அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவராக,அமைப்பாளராக நியமிக்க பட்டது எனது தலைமைத்துவ ஆளுமைக்கு அவர்கள் தந்த உரிய கௌரவமாக கருதுகிறேன்.இன,பிரதேச வாதங்கள் அற்ற எனது சேவையை பாராட்டி எனக்கு அம்பாறை மாவட்ட  செயலகம் விருதும் தந்துள்ளதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் மாற்றுதிரனாளிகளுக்கான வேலைத்திட்டத்தில் சம்பளமற்ற ஊழியராக கடமையாற்ற கிடைத்தது எனது பாக்கியமாகவே கருதுகிறேன்.

நிருபர்: நீங்கள் அரசியல் கட்சியிலும் முக்கிய பதவி வகிக்கிறீர்கள் அது சம்பந்தமாக சொல்லுங்கள்?...
ஹுதா: தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் அக்கட்சியின்  ஊடக இணைப்பாளராகவும் எங்களது கட்சி என்னை நியமித்துள்ளது.....
நிருபர்: எதிர்வரும் உள்ளுராட்சி சபையில் போட்டியிடுவீர்களா? எந்த சபையில் போட்டியிடுவீர்கள் ?
ஹுதா : நிச்சயமாக தேர்தலில் களமிறங்குவேன், எங்களது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் 1 ஒப்பந்தம் செய்ய உள்ளோம் அது வெற்றியளித்தால் அக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவோம் அல்லது தனித்தும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று பெரிய கட்சிகளுடனும் எங்களது கட்சி பேச்சுவார்த்தை செய்ய கொண்டிருக்கிறோம். கடைசி வரை எந்த கட்சி என்பதை தற்போது என்னால் கூற முடியாது. இன்சா அல்லாஹ் காரைதீவு பிரதேச சபையில் களமிறங்க உத்தேசித்துள்ளேன்.
நிருபர் : வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா ? 
ஹுதா: இன்சா அல்லாஹ்,எனது மண்ணில் சமுக சேவகர்களை பட்டியல் படுத்தினால் அதன் முன்னிலை வரிசையில் எனது பெயரும் இருக்கும் என்பது மக்கள் அறிந்த உண்மை. தேர்தலை மையமாக வைத்து பல   அமைப்புக்கள்  முளைத்து வருகிறது. அவற்றையெல்லாம் மக்கள் ஏற்பார்களா என்பது காலம் பதில் சொல்லும்.இளம் சமூகத்தின் கையில் இந்த முறை மக்கள் அதிகாரத்தை கொடுப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.அத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை நன்றாக அறிந்தவர்கள்தான் உள்ளனர். அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் இன்சா அல்லாஹ் எனது மண்ணுக்கு விடிவு என்மூலமாக கிடைக்கும்.
நிருபர்: நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
ஹுதா : . நவீன தொழினுட்பத்தை கொண்ட பிரதேசமாக எனது பிரதேசத்தை மாற்றியமைப்பேன். அத்துடன் கல்வியில் பாரிய புரட்சியை கொண்டுவருவேன். கழிவகற்றல் பிரச்சினையை நாங்கள் எங்கள் கட்சியால் செயற்படுத்த உள்ள பசளை தொழிற்சாலை மூலம் இல்லாது ஒழிப்பேன்.இப்படி இன்னும் பல முக்கிய அபிவிருத்திகளை திட்டம் தீட்டியுள்ளேன்.....
நன்றி ஹுதா 

செவ்வி கண்டவர் : ஜெகதீஸ்வரன் & லாபீர் இஸ்மாயில் ​
Read More
avathani Media Network

வரலாற்றில் முதல் தடவையாக கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்...

(ரிம்சி ஜலீல்)

இலங்கயைில் முதன்மையான பாடசாலையில் ஒன்றான கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பழைய மாணவர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு இன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நூற்றாண்டை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிக மும்முரமாக அரங்கேறி வரும்இத்தருணத்தில் அதன் ஒரு அங்கமாக பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்அல்லாஹ்வின் அருளால் 27 டிசம்பர் 2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.30 க்குபாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பிரதிநிதிகளை உள்ளடக்கியதானபழைய மாணவர் சங்க மத்திய குழு தெரிவு செய்யப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது விடையமாகும்.







Read More
avathani Media Network

காத்தான்குடியை சேர்ந்த இரு சாதனையாளர்கள் பிரதேச செயலகத்தினால் கௌரவிப்பு

(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடியை சேர்ந்த தற்போது அரச பொதுச் சேவைத் துறையில் மிளிரும் இரு சாதனையாளர்கள் பிரதேச செயலகத்தினால் கௌரவிப்பட்டனர்
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியை பிறப்பிடமாகக்கொண்ட தற்போது அரச பொதுச் சேவைத்துறையில் மிளிரும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எம் ஐ எம் றபீக் SLAS மற்றும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பி எம் அம்ஸா SLFS ஆகியோர் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டனர்
மேற்படி இருவருக்கும் ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் கவிமணி மௌலவி எம் எச் எம் புஹாரி பலாஹி பொன்னாடை போற்றி கௌரவித்ததுடன் இவர்கள் வாழ்க்கை தொடர்பான வரலாற்றினை ஓய்வுபெற்ற அதிபர் எம் ஐ எம் இஸ்மாயில் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு எல் எம் என் முபீன் தொகுத்து வழங்கினர்
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம் ஐ எம் சுபைர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் எம் எம் எம் அப்துர் ரஹ்மான் சட்டத்தரணி எம் உவைஸ் சட்டத்தரணி எம் ஐ எம் ஹக்கீம் சமுர்த்தி முகாமையாளர்கள் கிராம சேவை அதிகாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனர் 
மேற்படி நிகழ்வின்போது சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் 200 வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதுடன் மேற்படி பாதணிகளை  அதிதிகள் வழங்கி வைத்தனர் அத்துடன் கலை நிகழ்வுகள் பாடல்களும் இங்கு இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது 











Read More
avathani Media Network

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் ரூ.40 இலட்சம் நிதிஒதுக்கீட்டிலான பொருட்கள் சமூகசேவையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக இருந்த போது பல்வேறு சமூக சேவை நிறுவனங்களுக்காக ஒதுக்கீடு செய்த ரூபாய் 40 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்கள் அனைத்தையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.பசீர், ஏ.எம்.தபீக் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், கணக்காளர் ஏ.எல்.மஃறூப், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பசீர், கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு பேசுகையில்:- ' நாம் தொடர்ந்தும் வழிகெடுக்கப்படுகின்ற சமூகமாக இருக்கக் கூடாது என்பதைத்தான் நான் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மக்கள் மத்தியில் பேசிவருகின்றேன். சிலருக்கு இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை விழிப்படையச் செய்யவேண்டியுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை முன்னேற்றிச் செல்லவேண்டியுள்ளது' எனத் தெரிவித்தார்.













Read More