முஸ்லிம்களின் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், நாட்டின் அனைத்து சமூகங்களுடனான சகவாழ்வை மேம்படுத்துவதற்குமாக பிரமாண்டமான சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஜமாஅதுஸ் ஸலாமாவின் கல்குடா கிளை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 04.02.2016 (வியாழக்கிழமை) சுதந்திர தினத்தன்று மாலை 4.00 தொடக்கம் 5.30 வரை ஓட்டமாவடி அமீர் அலி பொது மைதானத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள சர்வமத தலைவர்களும் கல்விமான்களும அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர். நிகழ்வின் சிறப்பு உறையினை அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்விற்கு இன, மத, சமய பேதமின்றி ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு நாட்டுப் பற்றை வெளிப்படுத்துமாறு ஸலாமா அன்புடன் அழைக்கின்றது.
