Featured Home (TOP)

Recent Comments

Friday, January 8, 2016

avathani Media Network

அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம்


அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார். 

அரச சேவையாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு தான் எதிரானவர் என்று அவர் கூறியுள்ளார். 

பானந்துறை ஸ்ரீ சுமங்கள ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

கெம்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் 85 வயதிலும் அறிவை வழங்கக்கூடிய பேராசிரியர்கள் இருப்பதாகவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான வயதில் இலங்கை அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார். 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :