Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 21, 2016

avathani Media Network

காத்தான்குடியில் 5000 கும் அதிகமான குடும்பங்கள் 3000.00 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுகின்றார்கள்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

(ஏ.எல்.டீன் பைரூஸ்)
சமுர்த்தி திட்டம் மற்றும் சமுர்த்தி நிவாரணம், வாழ்வாதாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை ஆய்வு செய்தல், சமுர்த்தி திட்டத்தின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் SH. முசம்மில் (SLAS) அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (18.01.2016) அன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
 இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் அவர்கள் இப் பெறுமதி மிக்க நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது 13200 குடும்பங்களை கொண்ட காத்தான்குடியில் 5000 கும் அதிகமான குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறுகின்றவர்களாக இருக்கின்றனர்,

தாவது கிட்டத்தட்ட 40 வீதமானவர்கள் மாதாந்தம் 3000.00 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுகின்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற தகவலை நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு இருக்கின்ற நிலைமையில் தான் கிழக்கு மாகாணத்தின் பூஞ்சோலையென எமது காத்தான்குடியை கூறிக்கொண்டு சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் நாம் கவலைபட வேண்டிய ஓர் விடயமாகும்.
இதில் எமது பிழைகளும் உள்ளது, ஏனென்றால் கடந்த வருடம் 420 தையல் இயந்திரங்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது அது சுமாராக 120 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
 இது எதனை காட்டுகின்றது என்றால் சமுர்த்தி உதவியினை பெறுகின்றவர்கள் இருக்கும் நிலையில் இருந்து உயர்ந்து செல்வதற்கு பதிலாக ஒரே மட்டத்தில் வைத்து கொள்கின்ற செயற்பாடாக ஒரு காரணியாக இதனை நாம் பார்க்கின்றோம். எதிர் காலத்தில் இவ்வாறான செயற்திட்டங்கள் கொண்டுவரும் பொழுது தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், குறிப்பாக தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் அறிந்திருக்கின்ற கிராமசேவக உத்தியோகஸ்தர்கள் கூடிய கவனம் செலுத்துவதனூடாக எதிர்காலத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் நிலையிலிருந்து அவர்களை உயர்நிலைக்கு கொண்டுவரவேண்டும்.
 5000 கும் அதிகமான குடும்பங்கள் 3000.00 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுகின்றார்கள் என்றால் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒர் விடயம் இந்த வருடம் 5000 குடும்பங்கள் இருக்கின்றது
 என்றால் எதிர்வருகின்ற வருடம் 4500 அல்லது 4000 குடும்பங்களாக குறைய வேண்டும், அவ்வாறான மாற்றம் வரும்போதுதான் நாம் செயல்படுத்துகின்ற செயல் திட்டங்கள் சரியான முறையில் நடைபெற்று என்பதட்குறிய ஒரு காரணியாக எம்மால் அதனை காணமுடியும். எங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கின்றது
 சமுர்த்தி பயனாளி திட்டத்தில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால் உடனடியாக காரியாலயம் வந்து இந்த அதிகாரி அந்த அதிகாரி எங்களை சமுர்த்தி கொடுப்பனவில் இருந்து நீக்கிவிட்டார்கள் அவர் தனக்கு சார்பானவர்களுக்கு கொடுகின்றார், பாரபட்சம் பார்கின்றார் என்று பலவிதமான முறைபாடுகளை முன்வைகின்றார்கள்,

அவர்களுடைய உண்மை நிலையை ஆராயும்போது அவர்கள் முன்னைய மாதம் பெற்ற வருமானத்தை விட அதிகமான வருமானத்தினை பெறும்தகுதியை அடைந்த பின்புதான் அவர்களுடைய சமுர்த்தி கொடுப்பனவு நீக்கப்பட்டிருக்கின்றது.
 இந்த நிலைமை எதை காட்டுகின்றது என்றால் போதியளவு வருமானம் இருந்தாலும்கூட இலவசமாக எது கிடைக்கின்றது என்றால் அதனை நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும்,

அனுபவிக்க வேண்டும் என்கின்ற நிலைபாட்டில் இருகின்றார்கள், இந் மனநிலை மாறவேண்டும், யதார்த்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பீட்டளவில் காத்தான்குடியை பார்கின்ற பொழுது நல்ல நிலைமையில் இருக்கின்றது

உதாரணமாக படுவான்கரை பிரதேச மக்களுடைய வாழ்வாதார நிலைமையை ஒப்பீட்டு பார்க்கும் பொழுது காத்தான்குடி பிரதேச மக்களுடைய வருமானம் அதிகமாக பெற்றுக்கொண்டு அது போதாது என்ற சுமையினை நாம் ஏற்றிக்கொண்டிருக்கின்றோம்.

கடந்தவருடம் உயிரியல் பீடத்தில் கல்விகற்று மாவட்ட மட்டத்தில் 1வதாக வைத்தியதுறைக்கு தெரிவான மாணவியின் பெற்றோர் மிகவும் வறுமையில் வாழுகின்றவர்களாக இருகின்றார்கள், அவ்வாறு தமது வருமானத்திட்கு ஏற்றவாறு செலவீனங்களை செய்கின்ற கலாச்சாரத்திற்குள் எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பயனாளியாக தெரிவு செய்யப்படுபவர்களை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடைய வாழ்வாதார நிலைமையை உயர்த்திவிட்டு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை அவ்வாறு உயர்நிலைக்கு கொண்டுவருதற்குரிய படிப்படியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

சமுர்த்தி திட்டத்தினால் பயன்பெறும் பயனாளிகளின் தொகுப்பு இங்கு தொகுத்து வழங்கப்பட்டது அதில் ஒரு தாயார் தனது வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக ஒரே சமயத்தில் இரு தொழில் நடவடிக்கைகளை கஷ்டப்பட்டு மேற்கொள்கின்றார் இவ்வாரானவர்கள் பாராட்ட வேண்டியவர்கள். இவ்வாறு முயற்சியுள்ளவர்களாக அனைவரும் மாறவேண்டும்,

தொடர்ந்தும் உதவிகளை பெறுகின்றவர்களாக, மற்றவர்களை நம்பி அவர்களின் தயவில் வாழ்கின்றவர்களாக நாம் இருக்ககூடாது. தெரிவு செய்யப்படும் பயனாளிகள் இம்முறை நாம் பெற்றுள்ள இந்த உதவியினைக் கொண்டு முன்னேற்றம் அடைந்து அடுத்த முறை வரும் உதவியினை இன்னுமோர் குடும்பம் பெறவேண்டும் என்ற உணர்வுபூர்வமான ஒர் தன்மையினை அவர்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டும்.

 இன்று இங்கு சிறப்பான முறையில் சமுர்த்தி திட்ட செயற்பாடுகள், அதன் சவால்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது, அதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் பிரதேச செயலாளர் SH. முசம்மில் அவர்கள் முதன்முறையாக வட்டியில்லா கடன்திட்டம் ஒன்றினை சமுர்த்தி வங்கிக்கூடாக அறிமுகப்படுத்தி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றார் இது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

 எனவே எதிர்காலத்தில் அரசுக்கூடாகவே, அசரசார்பற்ற நிறுவனங்களுக்கூடாகவே செயற்படுத்தப்படும் திட்டங்கள் சிறந்த முறையில் நேர்த்தியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்னுடைய மாகாணசபை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளை பிரதேச செயலகத்தினால் நீங்கும் போது கூட தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்படு உதவிகள் கிடைக்க வேண்டும்

என்று எதுவிதமான தலையீடுகளையும் செய்வதில்லை. உண்மையில் காத்தான்குடி மட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டம் முலுவதும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நிலைமை மாறவேண்டும்.

வறுமை என்கின்ற அளவீடு எதனை கொண்டு அளவிடப்படுகின்றது என்றால் சமுர்த்தி பெறுகின்றவர்களின் எண்ணிக்கையினைக் கொண்டு ஒரு கணியம் அளவிடப்படுகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட 720000 குடும்பம் இந்த சமுர்த்தி திட்ட உதவியினை பெற்று வாழ்கின்றனர் இந்நிலை மாறவேண்டும்.

வறுமை என்பது ஒரு சுமையல்ல நாம் அதனை எதிர்த்து நிற்காத வரையில். எனவே தமது சொந்த காலில் நின்று முன்னேர வேண்டும் என்ற என்னம் பயனாளிகள் அனைவருக்கும் வரவேண்டும் அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும்
 என்றும் இன்ஷா அல்லாஹ் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒன்றுபட்டு எங்களால் முடியுமான முழு உதவிகளை செய்யவோம் என தனதுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :