Featured Home (TOP)

Recent Comments

Tuesday, January 12, 2016

avathani Media Network

ஹிருணிகாவின் பிணையில் புதிய கிண்ணஸ் சாதனை

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை குறுகிய காலத்தில் விடுதலை செய்து நல்லாட்சி அரசாங்கம் புதிய கிண்ணஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கறுப்புக்கொடி விவகாரம் தொடர்பிலும் தாம் மக்களிடமிருநது திரட்டிய தகவல்களை அடிப்படையாக கொண்டும் தாம் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளதாககூம் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையான   ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் .நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பாது எமது நாட்டில் பிரசித்தமான ஒரு கதாபாத்திரமாக பேசப்படுபவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரணிகா பிரேமசந்திர ஆவார்.  ஜனவரி 4 ஆம் திகதி இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் நான் ஆரூடம் கூறியிருந்தேன்.  ஹிருணிகா கைது செய்து பிணையில் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தேன்.  
அந்த வகையில் பார்த்தால் இன்று நான் இலங்கையில் முதல்தர ஜோதிடராக உள்ளேன்.  கடந்த 4 ஆம் திகதி அவரை கைது செய்யவிருப்பதாகவே எமக்கு தகவல் கிடைத்திருந்தது.   எனினும். நாம் இது தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தமையினால் அவரை சில நாட்கள் சென்ற பின்னர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். ஏவ்வாறாயினும நாம் குறிப்பிட்ட  விடயம் நடந்துள்ளது.
இன்று நாலக சில்வா என்ற  புத்திஜீவி விசாரணைக்கு  இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களை அவ்வாறு செய்துள்ள போது ஹிருணிகா  விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் மிக விரைவாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற பெருமையும் அவரையே சாரந்துள்ளது.  இது மிகச்சிற்நத கிண்ணஸ் சாதனையாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணியாகும்.  

அதேபோல் சாதாரணமாக வௌ்ளிக்கிழமைகளில் எவரும் பொலிஸ் நிலையத்திற்கு  செல்லவதில்லை.   காரணம் அன்றைய தினம் மாலை 03.00 மணியைத் தாண்டினால் பல அதிகாரிகள் கடமையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவதால், பிணையில் கையெழுத்திட இருப்பதில்லை.
எதுஎவ்வாறு இருப்பினும் ஹிருணிகா விடயத்தில் கடந்த சனிக்கிழமை ஆச்சரியமாக பதிவாளர் அலுவலகம் திறந்திருந்தமையும், அதிகாரிகள் பிணையில் கையெழுத்திட தயாராக இருந்ததமையும்  குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நாம் ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதையிட்டு அந்த நாள் நாட்டின் இருளான நாள் என்று அடையாளப்படுத்தும் வகையில் கறுப்புக்கொடி ஏந்துமாறு மக்களிடம்  வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
பின்னர் அதற்கு மாற்று நடவடிக்கையாக முகநூலின் அடையாளப் புகைப்படத்தை கறுப்புக்கொடி படமாக மாற்றுமாறு அறிவித்திருந்தோம்.  அதனையடுத்து பாராளுமன்றத்தில் சிலர் ஜனநாயகமான முறையில் எமக்கு பதிலளித்தனர்.  மறுபுறம் அமைச்சர்களான ராஜித ,தலதா, ஹரீன் ஆகியோர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான பதில்களை மறைமுகமானக தெரிவித்தனர்.
இதன் போது அமைச்சர் ஹரீன் பாராளுமன்றத்தில் கறுப்பு கொடியேந்தச் சொல்வபர்களுக்கு விரைவில் வௌ்ளைக்கொடி ஏந்த வேண்டிய தேவை ஏற்படும் என்றார். 
வௌ்ளைக்கொடி ஒரு நபர் இறந்த பின்னரே ஏந்தப்படும்.  இதனால் அமைச்சர் என்ன குறிப்பிட முற்படுகின்றார் என்பது தெரியவருகின்றது. அதேபோல் தொடர்ந்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துவரும் அபயாராம வஹாரை பூமியிலும் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கறுப்புக்கொடிகளை நீக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை எதிர்பார்த்து தான் முகப்புத்தகம் வாயிலாக நாம் கறுப்புகொடி  காட்டி எதிர்ப்பை தெரிவிக்க கோரினோம்.  ஆனால் இந்த கறுப்புக்கொடி போராட்டத்தில் எவரும் பங்குகொள்ளவில்லை என்ற கருத்தும் பரப்பப்டுகின்றது.
ஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சமன்மலி, மொஹமட் முஸம்மில் ஆகியோரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :