அனைத்து மாவட்டங்களிலும் சமநிலையான அபிவிருத்தி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ஒரு மாவட்டத்திற்கு கூடுதல் நலன்களையும், மற்றுமொரு மாவட்டத்திற்கு குறைந்த நலன்களையும் வழங்கும் கொள்கைகளை பின்பற்றாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகந்த இலங்கை வங்கி கிளையை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பொலனறுவை மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நிவர்த்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
