Featured Home (TOP)

Recent Comments

Tuesday, January 12, 2016

avathani Media Network

பிரசாந்தன் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

இரட்டைக் கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் உட்பட இருவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் பூபாலப்பிள்ளை ஹரிதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேநபர்களான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் பூபாலப்பிள்ளை ஹரிதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என் கணேசராசா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 2 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இரண்டு சந்தேகநபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :