Featured Home (TOP)

Recent Comments

Saturday, January 16, 2016

avathani Media Network

காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) க்கும் இடையிலான சந்திப்பு

(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) க்கும் இடையிலான சந்திப்பொன்று CB காசிம் வீதியிலுள்ள காரியாலயத்தில் அதன் தலைவர் ஏ எல் அப்துர்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது 
காத்தான்குடி வைத்தியசாலை தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இச்சந்திப்பு இடம்பெற்றதுடன் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் அதனை எவ்வாறான முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது என்ற விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது. 
தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஐ எல் எம் றிபாஸ் அவர்கள் கடந்த காலத்தில் காத்தான்குடி வைத்தியசாலையில் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் அதன் தற்போதய நிலை தன்னால் இதற்காக மேற்கொள்ளவுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் ஏன் காத்தான்குடி வைத்தியசாலையை தற்போது மக்கள் குறைவாக பயன்படுத்துகின்றனர் எனவும் எமது அமைப்பினால் வைத்தியசாலை முன்னேற்றத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்
மேற்படி கலந்துரையாடலில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ ஜீ எம் ஹாறூன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  செயலாளர் எம் ஏ சி எம் ஜவாஹிர் எம்.ஹில்மி உட்பட பலர் கலந்துகொண்டனர்
வைத்தியசாலை தொடர்பாக மீடியா போரம் ஊடக பணிக்கப்பால் இவ்வாறான வேலைத்திட்டத்தினை முன்கொண்டு வருகின்றமை குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் பாராட்டுத்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது








avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :