Featured Home (TOP)

Recent Comments

Friday, February 5, 2016

avathani Media Network

ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள்-குமுறுகிறார் மௌலவி அப்துல் ஹமீத்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவர்கள் என உளவியல் வைத்திய நிபுனரும் பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி தெரவித்தார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டடில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் 'யார் இந்த ஷீயாக்கள்' எனும் தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
ஷீயாக்கள் என்போர் புனித இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் பல்வேறுபட்ட மோசமான கருத்துக்களைக் கொண்டோர்.

குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான 'ஷஹாதா' எனப்படும் கலிமாவில் கூட திரிபுகளை ஏற்படுத்தல்இதொழுகையில் ஈடுபடும் போது கிப்லாவை(புனித கஃபாவை முன்னோக்கித் தொழல் வேண்டும் என்ற ஷரீஆ கட்டளைக்கு மாறாக) முன்னோக்காதிருத்தல் , 'கர்பலா' யுத்த தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில் இஸ்லாம் அனுமதிக்காத வெட்டுக்குத்து,தம் உடம்பில் தாமாகவே காயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடல் ,அல் குர்ஆன் போற்றிப் புகழ்ந்த அதிகமான ஸஹாபாக்களை நரகவாதிகள் என பிரகடனப்படுத்தல் ,நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அதி விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) யை விபச்சாரி என பொய்பட்டம் சூட்டல்இ தற்போது முஸ்லிம்களிடம் உள்ள அல் குர்ஆன் முழுமையானதல்ல என அப்பட்டமான பொய் உரைத்தல் ,குறிப்பிட்ட இரவில் யார் வேண்டுமானாலும் எந்தப் பெண்னுடனும் தவறாக ஈடுபடலாம் என பத்வா கொடுத்தல் உள்ளிட்ட இஸ்லாத்திற்கும் அதன் அடிப்படைக் கோட்பாட்டையும் முழுமையாக பாதிக்கக் கூடிய பல விஷமத் தனமான கருத்துக்களை போதிக்கக் கூடிய ஒரு இயக்கமே இந்த ஷீயா இயக்கமாகும்.

உலகலாவிய ரீதியில் ஈரான்இ ஈராக் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் குறித்த இயக்கம் இலங்கை நாட்டிலும் அண்மைக்காலமாக பரவலாக பரவி வருகின்றது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் மன்பஉல் ஹுதா எனும் பெயரில் அவர்களுக்கென ஓர் மதரசா(கூடம்)  நடாத்தப்பட்டு அதில் வருடாவருடம் மாணவர்களை வெளியாக்குவதன் மூலம் குறித்த நச்சுக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அது மட்டுமல்லாது பொலன்னறுவைப் பிரதேசத்திலும் பெண்களுக்கென ஓர் மதரசா இயங்குவதோடு நாடளாவிய ரீதியில் அவர்களுடைய நச்சுக்கருத்துக்கள் பொதிந்த நூல்கள்,துண்டுப்பிரசுரங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே ஷீயாக்கள் குறித்தும் அவர்களது நச்சுக்கருத்துக்கள் குறித்தும் முஸ்லிம்களாகிய நாங்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.குறிப்பாக அவர்களது நூல்களை முற்றாக புறக்கணித்து நடப்பதுடன் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தெளிவுகளை தகுந்த உலமாக்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பெரும்பாலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

தாருல் அதரின் -அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு காத்தான்குடியில்-பெரும் திரளான மக்கள் பங்கேற்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்றது.
 
மேற்படி அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டில் மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அஸ்ஹர் (மின்ஹாஜி) 'இஸ்லாத்தில் துழைந்த அத்வைதம்' எனும் தலைப்பிலும், பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீத் (ஷரயி) 'யார் இந்த ஷியாக்கள்?' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
 
இங்கு தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 13 முக்கிய விடயங்கள் அடங்கிய அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
 
இம் மாநாட்டில் பெரும் திரளான இஸ்லாமிய பொது மக்கள் கலந்து
கொண்டனர்.
 
குறித்த மாநாட்டில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Read More
avathani Media Network

சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ ) காத்தான்குடி கிளை யின் "தெருமுனைப் பிரச்சாரம்"

சிறீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ ) காத்தான்குடி கிளை யின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற தெருமுனைப் பிரச்சாரம் இன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம் பெற்றது.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் வாழ்வமைப்போம்' எனும் தலைப்பில் இன்றைய உரையினை அமைப்பின் பிரச்சாரகர் நிகழ்த்தினார்.
வீதியின் ஓரங்களில் நின்றவர்கள் இந்த உரையினை மிகவும் அவதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததையும் காணக்ககூடியதாக இருந்தது. 


Read More
avathani Media Network

" சுதந்திரத்தை நினைவுகூறும் இந்நாளில், நமக்கு முன்னால் இரண்டு தேசிய கடமைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது" சுதந்திரதின உரையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

'நமது நாட்டின் 68வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்ற நம் முன்னால் இரண்டு தேசியக்கடமைகள் இருக்கின்றன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி மாற்றத்தினை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கும் இனவாத சக்திகளை தோற்கடிப்பது அதில் ஒன்றாகும்.மற்றையது நாட்டில் உண்மையான நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கேற்ற ஒரு புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்திக்கொள்வதாகும்.' இவ்வாறு NFGGயின் தவிசாளர் பொறியியளாலர்அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.



 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப்பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வு நேற்றுக் காலை NFGG காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட், பிராந்திய செயலாளர் MCM ஜவாஹிர் ஆசிரியர், மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது
" இன்று நம்நாட்டின்  68வது சுதந்திர தினத்தை நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த தினமானது, வெளிநாட்டு காலனித்துவ சக்திகளிடமிருந்து இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொண்ட வரலாற்று நிகழ்வைக்குறிக்கிறது. அது போல இந்த நாட்டிற்கு இன்னுமொரு சுதந்திரமும் அண்மையில் கிடைத்தது.இந்த நாட்டை படு மோசமாக ஆட்சி செய்து கொண்டிருந்த உள்ளுர் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்ததன் மூலம் கிடைத்த சுதந்திரமே அதுவாகும். கடந்த வருடம் ஜனவரி 8ம் திகதி அந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது.

இன்றைய சுதந்திர தின நிகழ்வை சந்தோஷமாக அனுஸ்டித்துக்கொண்டிருக்கும் நம் முன்னால் இரண்டு பெரிய தேசியக்கடமைகள் இருக்கின்றன. அதிலொன்று ஜனவரி 8ம் திகதி பெற்றுக்கொண்ட அந்த சுதந்திரத்தினை இல்லாதொழிக்க பாடுபட்டு வரும் இனவாத சக்திகளையும் அவர்களது முகவர்களையும் தோற்கடிப்பதாகும். இந்த நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றம் என்ற சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக பொதுவாக நமது நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களும் அனுபவித்து வந்த அடக்கு முறைகளையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது.அந்த அடக்கு முறைகளிலிருந்து மீண்ட ஒரு சுதந்திர உணர்வை நாம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாம் உணர்ந்தும் அனுபவித்தும் வருகிறோம். 



 தற்போதைய ஆட்சி முறைமையை முழுமையான நல்லாட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் ,அதை நோக்கிய மாற்றங்களையும், நகர்வுகளையும் நாம் மெல்ல மெல்ல கண்டு வருகிறோம். இது 'நமது தேசம்' எனும் உணர்வு எல்லாக் குடிமக்களுக்குள்ளும் இதயபூர்வமாக ஏற்பட்டு வருகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளும் நம் நாட்டை புதிய தேசமாக கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளை இந்த நல்ல மாற்றங்களை இல்லாதொழித்து இந்த நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் தள்ளுவதற்கான சதி முயற்சிகளை இனவாத சக்திகளும் அவர்களது முகவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
 பொதுபல சேனாவின் வேலைத் திட்டங்கள்  தற்பொழுது 'சிங்ஹலே' அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய கீதத்தை இந்த நாட்டின் மற்றொரு தேசிய மொழியான தமிழில் பாடக்கூடாது என்று அதனை தேசிய பிரச்சனையாக மாற்றி வருகின்றனர்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அதனை தடுத்து நிறுத்த சதி செய்கிறார்கள். எனவே இந்த இனவாத சக்திகளை மீண்டும் தலைதூக்க விடாமல் அவர்களைத் தோற்கடித்து இந்த நாட்டைப் பாதுகாப்பது நமது முன்னாலுள்ள முதலாவது தேசியக் கடமையாகும்.



 அது போலவே இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சியை நோக்கிய மாற்றங்களை நிறுவன மயப்படுத்தி, நிரந்தரமாக்கி ஜனநாயகமும் சமூக நல்லிணக்கமும் நிறைந்த தேசமாக நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. அதற்கேற்ற ஒரு புதிய அரசியல் சாசனம் தேவை என்பதை இன்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். சகல மக்களும் பங்குதாரர்களாக இருந்து சகலரினதும் நலன்களையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தத் தக்கதாக ஒரு அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியது நம் முன்னால் உள்ள இரண்டாவது தேசியக்கடமையாகும்."


Read More
avathani Media Network

சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் சிரமதான பணி...

(ஜுனைட்.எம்.பஹத்)

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி உறுப்பினர்களினால் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் மைய்யவாடி 05.02.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00 க்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது..

இச் சிரமதான நிகழ்வில் முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது உறுப்பினர்களும் பள்ளிவாசல் மஹல்லாவாசிகளும் கலந்து கொண்டனர்.
முஹாசபா மீடியா நெட்வொர்க் தொடர்ச்சியாக பல சமூக நல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.






Read More
avathani Media Network

விசேட தேவை உடையவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்- சிப்லி பாறூக்

(ஜுனைட்.எம்.பஹ்த்)

விசேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட
வேண்டியவர்கள் என்று இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 68வது சுதந்திரதின
விழாவில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி
பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி, கிழக்கிலங்கை வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்
இன்று காத்தான்குடி சாஹிரா விசேட தேவைக்குரியவர்களின் பாடசாலையில் இலங்கையின்
68வது சுதந்திரதின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விசேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கு இனிப்புக்கள் வழங்கி அவர்களுடன் சுதந்திரதின விழாவினை கொண்டாடினார், இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி
பாறூக் அவர்கள் விசேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும்
சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள். சாதாரண ஓர் மனிதனை மதிப்பது போல்
இவர்களையும் மதித்து அவர்கள் எவ்வாறான விடயங்களை கொண்டாடுகின்றார்களோ அதேபோல் இவர்களும் கொண்டாடி மகிழ வேண்டும் அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புக்குரிய இந்நாளில் இந்த விசேட தேவைக்குரிய பிள்ளைகள் மிகவும் சந்தோசமாக
சுதந்திரதினத்தினை கொண்டடுகின்றனர், இதே போல் அனைத்து விடயங்களிலும் இவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கும் இந்த சமூகத்தின் அங்கத்தவர்கள்
அவர்களுக்குள்ளே பல திறமைகள் இருக்கின்றன அதனை இனங்கண்டு அதனை வளர்க்க வேண்டும் அவர்களும் சுதந்திரமாக வாழவேண்டும் என தனது சுதந்திரதின உரையில்
தெரிவித்தார்.







Read More
avathani Media Network

காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவும், சீடோ சமூக சேவை அமைப்பும் இணைந்து மேற்கொண்ட சிரமதானம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவும், காத்தான்குடி சீடோ சமூக சேவை அமைப்பும் இணைந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியை சிரமதானம் செய்யும் நிகழ்வு 04-02-2016 நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதிநிதிகள் உட்பட சீடோ சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரினால் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

மேற்படி சிரமதான நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ். செல்வராஜா, சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி எம். மயூரன், உட்பட பொலிஸ் பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சீடோ அமைப்பின் தலைவர் ஏ.பீ.எம். ஜௌபர் ஜே.பி, பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.பி. நபீல் ஆகியோரும் மஹல்லா வாசிகள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Read More
avathani Media Network

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சுதந்திர தின நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வு நேற்று (04.02.2016) காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்ற  மேற்படி நிகழ்வில் முதல் அம்சமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மானினால்; தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய சபையின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்; தலைமையில் நடைபெற்றன.

இங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.அஷ்செய்க் நஜா முஹம்மட் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்ஆகியோர் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிராந்திய சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஏ.ஜி.எம்.ஹாறூன், எம்.ஏ.எச்.எம்.மிஹ்ழார், எம்.எச்.ஏ.முகம்மட் நஸீர், ஆகியோரும் எம்.எம். அமீர் அலி ஆசிரியர், எஸ்.எச்.எம்.பிர்தௌஸ்,எம்.எம்.முகம்மது ஜனூப், எஸ்.எம்.எம்.பஸீர் ஆசிரியர் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏராளமான செயற்குழு உறுப்பினர்களும் பெண்கள் அணிப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அத்தோடு விஷேட அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் காதர் பலாஹி ,முன்னாள் நகர சபை தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை, முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதி மாஹிர் ஹாஜியார், ஐக்கிய தேசிய கட்சிப் பிரதிநிதி  எம்.எச்.எம்.முஸ்தபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி இல்மி அஹமட் லெவ்வை ஆகியோரும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.



















Read More