Featured Home (TOP)

Recent Comments

Friday, February 5, 2016

avathani Media Network

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் சிரமதான நிகழ்வுகள்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிரமதான நிகழ்வுகள்  நேற்று இடம்பெற்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலை ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்கசகர் யூ.எச்.எம்.அக்பர் தலைமையில் நேற்று  4 வியாழக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் நடைபெற்றது.

மேற்படி சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் என்.பீ.ரஞ்சன்,அதன் செயலாளர் டாக்டர் கருநாகரன் உட்பட சிறைச்சாலை ஜெயிலர் என்.பிரபாகரன்,மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள்,உத்தியோக்கத்தர்கள், மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களான பீ.சுசிதரன்,ஜனாபா சித்தி சபீனா என பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 68வது சுந்திர தின நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வுகள் என்பன  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :