Featured Home (TOP)

Recent Comments

Saturday, January 2, 2016

avathani Media Network

ரணிலை நிர்வாணமாகத் துரத்தியடிப்போம். - ஞானசார தேரர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆடைகள் எதுவும் இன்றி துரத்தியடிப்போம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
  
புதிய அரசியலமைப்பில் சிறிதேனும் நாட்டுக்குப் பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதனை தீவைத்து எரிக்கவும் தயங்க மாட்டோம். அனுமார் வைத்த தீ போன்று நாங்களும் தீவைக்க தயாராக உள்ளோம். அதே நேரம் அவ்வாறு நாட்டுக்குப் பாதகமான வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்படுமாக இருந்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆடைகள் எதுவும் இன்றி துரத்தியடிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

2016 பட்ஜட்: அதிகரிக்கப்பட்ட வரிகள் அமுல்

சிகரெட், மது மற்றும் கசினோ வரி அடங்கலாக வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட வரிகள் நேற்றுமுதல் அமுலுக்கு வருவதாக உள்நாட்டு வருமானவரித் திணைக்களம் தெரிவித்தது. இதனூடாக அரசாங்கத்துக்கு 9200 கோடி ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி தேசிய கட்டுமான வரி, மதுசார புகையிலை வரி, கசினோ வரி என்பவற்றுக்கு 25 வீதத்தால் மிகைவரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய கட்டுமான வரி அதிகரிப்பின் ஊடாக 9000 கோடி ரூபா வருமானமும், மதுசாரம், புகையிலை மற்றும் கசினோ வரி அதிகரிப்பின் மூலம் 200 கோடி ரூபா வருமானமும் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 4 வீதம் வரை திருத்தப்பட்டிருப்பதுடன், இதனூடாக 90,000 மில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரெட், மதுபானம், சூதாட்டம் அற்ற சமூகமொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே இவற்றின் மீது 25 வீத மிகைவரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்துவதன் ஊடாக 2000 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வற் வரி திருத்தம், காணி (உரிமை மாற்றத்தை மட்டுப்படுத்தல் சட்டம்) என்பவற்றின் ஊடாகவும் அரசாங்கம் கூடுதல் வரி வருமானத்தை எதிர்பார்க்கிறது.
 இதேவேளை, வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய கடவுச்சீட்டுப்பெறுவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வயதுவந்தவர்களின் ஒரு நாள் சேவை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான கட்டணம் 10,000 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 5000 ரூபாவாகவும், வயது வந்தவர்களுக்கான வழமையான சேவைக் கட்டணம் 3000 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.
Read More
avathani Media Network

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றில்

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை 2500 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் அவர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 10,000 ரூபாவாக உயர்த்துதல் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன தெரிவித்தார்.
இம்மாதத்திற்கு அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
புதிய வருட ஆரம்ப நாளான இன்று தொழில் துறை அமைச்சின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Read More
avathani Media Network

இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு

கடந்த காலங்­களில் நாட்டில் காணப்­பட்ட அர­சியல், இன ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்­னெ­டுத்து வரும் செயற்­பா­டுகள் இந்த ஆண்­டிலும் தொடரும். அதேபோல், இந்த ஆண்டு இறு­திக்குள் அர­சியல் பிரச்­சினை தீரும் என அர­சாங்­கத்தின் ஊட­கப்­பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தை நம்பி எம்­முடன் கைகோர்த்­த­மைக்கு நாம் எப்­போதும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். அதேபோல் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட தாயா­ராக உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
இந்த ஆண்­டுக்குள் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­ப­டு­வது உறுதி என தமிழர் தரப்பு தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்கம் எவ்­வா­றான வகையில் செயற்­படும் என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்,
அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த ஆண்டு ஆரம்பம் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் மிகவும் முக்­கி­ய­மான ஆண்­டாக அமைந்­தது. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஐந்து ஆண்­டு­களில் நாட்­டையும் மக்­க­ளையும் அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்தி நாட்டை சர்­வா­தி­கா­ரத்தின் பக்கம் கொண்டு சென்ற மஹிந்த அர­சாங்­கத்தை வீழ்த்தி ஜன­நா­யக, மக்கள் நலன் பேணும் அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். அதேபோல் நாட்­டுக்கு எதி­ரான அழுத்­தங்கள், சர்­வ­தேச படை­யெ­டுப்­புகள் அனைத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளோம்.
கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்­வா­தார முறை­யிலும் மக்கள் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கப்­பட்டு பாரிய கஷ்­டங்­களை அனு­ப­வித்து வந்­தனர். ஆனால் புதிய அர­சாங்­கத்தின் வரவு செலவு திட்டம் மக்­களை பொரு­ளா­தார சுமையில் இருந்து காப்­பாற்றும் வகையில் அமைந்­துள்­ளது. அவ்­வா­றான ஒரு நல்ல மாற்றம் ஏற்­பட்­டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மக்­க­ளுக்கு மிகவும் சிறந்த ஆண்­டாக நிறை­வ­டைந்­துள்­ளது.
அதேபோல் ஆரம்­ப­மா­கி­யுள்ள இந்த புது வருடம் கடந்த ஆண்­டைப்­போல மேலும் பல நன்­மைகள் ஏற்­படும் வகையில் அமையும் என்ற வாக்­கு­று­தியை எம்மால் கொடுக்க முடியும். மூவின மக்­களும் தமது உரி­மை­க­ளுடன் வாழக்­கூ­டிய வகையில் நாடு என்ற ரீதியில் அனை­வரும் ஒன்­றி­னையும் ஒரு ஆட்­சியை எம்மால் முன்­னெ­டுக்க முடியும். அதேபோல் பொரு­ளா­தார ரீதி­யிலும் அர­சியல் ரீதி­யிலும் வளர்ச்சி கண்ட நாடாக இலங்­கையை மாற்றும் நட­வ­டிக்­கை­களை பிர­தான இரண்டு கட்­சி­களின் தலை­மைத்­து­வமும் மேற்­கொள்ளும்.
குறிப்­பாக கடந்த காலங்­களில் நாட்டில் காணப்­பட்ட அர­சியல் மற்றும் இன ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் நாம் முன்­னெ­டுத்து வரும் செயற்­பா­டுகள் இந்த ஆண்­டிலும் தொடரும். புதி­தாக அர­சியல் அமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் தலை­மையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து கலந்­தா­லோ­சித்து வரு­கின்­றன. ஆகவே புதிய அர­சியல் அமைப்பில் நிச்­ச­ய­மாக அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும்.
கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஆட்சி மாற்­றத்தின் போராட்­டத்தில் தமிழ் மக்கள் மிகப்­பெ­ரிய பங்­கா­ளர்­க­ளாக காணப்­பட்­டனர். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. எம்மை நம்பி எம்­முடன் கைகோர்த்­த­மைக்கு நாம் எப்­போதும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். அதேபோல் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட தாயா­ராக உள்ளோம்.
கடந்த காலத்தில் விட்ட தவ­று­களை இந்த அர­சாங்கம் விடப்­போ­வ­தில்லை. நாம் வடக்கு கிழக்கு மக்­களை அக்­க­றை­யுடன் கவ­னித்து வருகின்றோம். அதேபோல் சிங்கள தமிழ் உறவையும் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் பிரச்சினை தீரும். அதேபோல் நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். அதை தொடர்ந்தும் தக்கவைப்போம் என அவர் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

ரூ.20 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு உதவிகள்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரின் ரூ.20 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனை 'ஒஸ்றா மெடிகல் தனியார் வைத்தியசாலை'க் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் அடங்கிய பெறுமதிவாய்ந்த புத்தகப் பைகள், ஊடகவியலாளர்களுக்குப் பெறுமதியான கைப்பைகள், இரத்தப்பரிசோதனை செய்வதற்கான 'குளுக்கோ மீற்றர்கள்' என்பன இலவசமாக வழங்கப்பட்டன. 

நிகழ்வின் இறுதியில் சமூக சேவையாளர்கள் நால்வர் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

'சமூகத்திற்கு என்றும் அழப்பரிய சேவைகளை துணிந்து நின்று, வேதனம் பாராது, வேதனைகள் பலவற்றைச் சுமந்து, தொண்டாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் தேகஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயபரிசோதனை செய்யக் கூடிய குளுக்கோ மீற்றர் கருவியை அன்பளிப்பாக வழங்குகின்றோம்' என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.










Read More