Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 15, 2015

Unknown

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலை (மியூசியம்) மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைப்பு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு–கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலை (மியூசியம்) இன்று 15-04-2015 புதன்கிழமை மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இதனை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், தற்போதய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர் அங்குரார்ப்பனம் செய்து வைத்தனர்.
Read More

Tuesday, April 14, 2015

Unknown

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு.-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை, சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கிராமிய மின்சார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
Read More
Unknown

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (11) சம்மாந்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.


பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.எம்.சபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கூட்டுறவு அபிவிரத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.முகம்மட் லாபீர், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மொத்தம் 1043 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரைநிகழ்த்துகையில் “ இன்று நாம் உட்கொள்ளும் உணவுகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை கலந்திருக்கின்றது. மரக்கறி, பழவகைகள் போன்றவற்றில் காணப்படும் புளுக்களால் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நச்சுத் தன்மை காணப்படுகின்றது.

இவ்வாறான நச்சுத் தன்மையால் நாம் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் விடுபட்டு, நச்சுத்தன்மையற்ற நிறையுணவை நாளும் உண்ணவேண்டும். அதன் மூலம் சுகதேகிகளாக வாழவேண்டும் என்பதற்காகவே நமது அரசாங்கம் கற்பிணித் தாய்மாருக்கு இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது ” எனத் தெரிவித்தார்.







Read More
Unknown

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுகாதார சேவை நிலைத் திறப்பு விழா. -மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ரூபாய் 50 இலட்சம் செலவில் “வேல்ட் விசன்” அனுசரனையில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார சேவை நிலைய கட்டிடத் திறப்பு விழா இன்று இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஐ.எஸ்.கே.ஏ.பீ.திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
Read More