Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 16, 2015

Unknown

ஊடகவியலாளர்களை குழப்பக்காரர்கள் எனக் கருத்துக்கூறி அனுமதி மறுத்த யாழ். அரசாங்க அதிபருக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

(ஊடக அறிக்கை - கிழக்கு ஊடக சங்கம் - 

சமூகப் பொறுப்புடன் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அசௌகரியங்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களை குழப்பவாதிகளாகச் சித்தரிக்க முயற்சித்துவரும் யாழ். அரசாங்க அதிபர் என். வேதநாயனின் செயற்பாட்டிற்கு கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோரால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பட்டிருப்பதாவது:
Read More

Wednesday, April 15, 2015

Unknown

வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவதற்கும் காத்தான்குடி சமூகம் முயற்சிக்க வேண்டும்! -குர்ஆன் மத்ரஸா திறப்பு விழாவில் நீதிபதி அல்ஹாபிழ் அப்துழ்ழாஹ் வேண்டுகோள்-

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவது போல் வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவதற்கும் காத்தான்குடி சமூகம் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் வேண்டுகோள்விடுத்தார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் இன்று (15.04.2015) மாலை நடைபெற்ற ஹிழுறியா குர்ஆன் மத்ரஸாவின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே காத்தான்குடிப் பிரமுகர்களிடம் அவர் அவ்வாறு கேட்டுக்கொண்டார்.
Read More
Unknown

நிந்தவூர் பிரதேச கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு. -பைசால் காசீம் (எம்.பி) பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின்  நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப்;; பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த (13) நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.

பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி;. பைறூசா நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
Read More
Unknown

காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்- ஒருநாள் தலைமத்துவ பயிற்சி முகாம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி  இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்  பாடசாலையில் தரம் ஒன்பது, பத்து ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களை தலைமைத்துவ ரீதியில் பயிற்றுவிக்கும் முகமாக ஒருநாள் தலைமத்துவ பயிற்சி முகாம் ஒன்று கடந்த 14-04-2015 நேற்று செவ்வாய்க்கிழமை பாலமுனை கடற்கரை வளாகத்தில் இடம்பெற்றது.

இளைஞர்களை தயார்படுத்துவது அவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிப்பதற்காக எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இப்பயிற்சி முகாமில் சுமார் 43 மாணவர்கள் கலந்து கொண்டனர். 
Read More