Featured Home (TOP)

Recent Comments

Monday, April 20, 2015

Unknown

கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழப்பு

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு 142 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 38 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 198  விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 2014ஆம்  ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் இடம்பெற்ற 42 விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளமை  கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும்.
எனவே வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
- VK
Read More
Unknown

லஞ்ச ஊழல் ஆணைக்குழு மஹிந்தவிடம் விசாரணை?

எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More
Unknown

ரோட்டரி கழகத்தினால் -வசதியற்ற குடும்பங்களுக்கு மலசல கூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ்; வாழும் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பபுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட மலசலகூட வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் அனுசனையூடன் அமைக்கப்பட்ட 10 மலசலகூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 சனிக்கிழமை காத்தான்குடி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் நிருவாகக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதன் போது ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் பிரதிநிதிகளால் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களின் ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் முக்கியஸ்தர்களும் ,ஊர் பிரமுகர்களும் ,பொது மக்களும் கலந்து கொண்டனர்.







Read More
Unknown

காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய 19வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மன்மத சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய 19வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா 18-04-2015 நேற்று முன்தினம் சனிக்கிழமை காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
Read More