Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 18, 2015

Unknown

புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
தேர்தல்களில் விருப்பு வாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் முகமாக அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அவசியம். அது, அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Read More
Unknown

சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கொலையாளி ஒருவர் – கருணா குற்றச்சாட்டு:-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கொலையாளி ஒருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டமையை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரே இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேட்பு மனு வழங்குமாறு கோரவில்லை எனவும், சுசில் பிரேமஜயந்தவின் சுய விருப்பின் அடிப்படையில் குறித்த கொலையாளிக்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் கொலைகளுடன் இந்த நபருக்கு நேரடித் தொடர்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வேட்பாளர் யார் அவர் எந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

globaltamilnews
 
Read More
Unknown

இலங்கை, இந்தியாவை இணைக்கும் வீதிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதி உதவி

இலங்கை – இந்தியாவை இணைத்து அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீதிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதிஉதவி பெற எதிர்பார்த்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் இலங்கை இடையே 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
மதுரை- பரமக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அவர்,
ராமேஸ்வரம் இலங்கை இடையே பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகவும் இதற்காக உலக நிதி அமைப்பு 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க சம்மதித்துள்ளதாகவும் கூறினார்.
இதில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக நெஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
Read More
Unknown

ஐ.தே.மு. 127, ஐ.ம.சு.கூ. 64 ஆசனங்களை பெறும்: ராஜித

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி  127 ஆசனங்களை பெற்று வெற்றி பெறும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பயாகல கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது முன்னணி மிகவும் பலமானதாக உள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தற்போதைய நிலைமைக்கமைய 127 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 64 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 10 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 10 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.
Read More