Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 1, 2015

avathani Media Network

தமிழ் மக்களோடுஇணைந்த எழுச்சி மிக்க அரசியலை மு.கா. முன்னெடுக்கிறது - றவூப் ஹக்கீம்

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
ஏறாவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாவது, “முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.
சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.
இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10- 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடும். நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமாக முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்தார். வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.” என்றுள்ளார்.
Read More
avathani Media Network

துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி 5பேர் காயம்!

அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் அடிபட்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீதே குறித்த வான் மோதியுள்ளது.
மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற வான் இவர்கள் மீது மோதிக் கொண்டு சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 04 ஆண்கள் உட்பட பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானை ஓட்டிச் சென்றவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் என்பதுடன் மிஹிந்தலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More
avathani Media Network

"பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியவற்றை வெளியிலிருந்து நாம் செய்து காட்டியுள்ளோம்": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியிருக்கிறோம்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
"மக்கள் ஆணையைப்பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து செயற்படுவது விசனத்துக்குரியதாகும். கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இன மதவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்த்து குரல்கொடுக்காது தமது அரசியல் இருப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுய இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டமையை மக்கள் அறிவர்.
தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் மஸ்ஜிதுகள் தாக்கப்ட்டபோதும், மத விவகாரங்களை சுதந்திரமாக நிறைவேற்ற விடாமல் தடுத்த போதும் பர்தா, ஹலால் போன்ற பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கிய போதெல்லாம் அவற்றை எதிர்த்து குரல் கொடுக்காமல், தாம் சார்ந்த அரசியலை ஸ்திரப்படுத்துவதில்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டி வந்தனர். கிரீஸ் மனிதன், வெள்ளை வேன், பயங்கர கொடூர சம்பவங்கள் நடந்தபோது அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை, இவைகள் கட்டுக் கதைகள் என்றெல்லாம் உண்மைக்குப் புறம்பாக செயற்பட்டமையை மக்கள் அறிவர். 
இந்த நிலமைகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எந்த வித பாராளுமன்ற உறுப்புரிமையும் இல்லாத நிலையில், மகிந்தவின் பயங்கரமான, அராஜக அடக்குமுறை அரசியலுக்கு மத்தியிலும், இப்பிரச்சனைகளை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் முன்கொண்டு சென்றது. மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்த போது அவரை பகிரங்கமாக சந்தித்து முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக நமது நாட்டில் அக்கறையுடன் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சிவில் அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு முயற்சிக்க வேண்டுமேயல்லாது அதனை மூடி மறைப்பதும் திரிபு படுத்துவதும் சமூகத்துரோகமாகும். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் மக்கள் ஆணையினை வேண்டி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். சமூகம் சார் கடமைகள் என்னவென்று தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமல் தகுதி வாய்ந்த சமூக அரணாக செயற்படக்கூடிய ஆளுமையும் துணிவும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களை வேண்டிக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

Read More
avathani Media Network

மஹிந்தவின் பயணங்களுக்காக தரவேண்டிய 114 மில்லியன் ரூபாய் பாக்கியை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பயணங்களுக்காக தரவேண்டிய பாக்கியை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச, தமது பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் அஜித் டயஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயன்கோனுக்;கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி 113 மில்லியன், நானூற்றி தொன்னூற்று நான்காயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு ரூபாய்களை முன்னாள் ஜனாதிபதி செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதவிர இதற்கான வரிகளையும் செலுத்தவேண்டும் என்று எயார்லைன்ஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச. திருப்பதிக்கு கடந்த டிசம்பத் 9ஆம் 10ஆம் திகதிகளில் சென்று வந்த செலவும் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

Read More