Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 13, 2015

avathani Media Network

நிந்தவூர் அல்;-மதீனா உயர்தர தினத்தில் சாதனையாளர்கள்; கௌரவிப்பு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர தினம் நேற்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம், உள்ளிட்ட கல்விமான்கள்,  சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த(சாஃத) பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திபெற்ற மாணவர்கள்,  பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானோர், தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றோர் எனப் பல மட்டத்திலுள்ளோரும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிசாமினால் மாலையணிவித்து, நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஒரு மாணவருக்குள் ஒரு வைத்தியர் உறங்கிக் கொண்டிருப்பார். அது உங்களுக்குத் தெரியாது. ஒரு மாணவருக்குள் ஒரு பொறியலாளர் உறங்கிக் கொண்டிருப்பார். அது உங்களுக்குத் தெரியாது. ஒரு விஞ்ஞானி உறங்கிக் கொண்டிருப்பார். ஒரு மிகப் பெரிய டெரக்டர் உறங்கிக் கொண்டிருப்பார். ஒரு அதிபர், ஆசிரியர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். அதில் உங்களுக்குப் பொருத்தமானவர் எவர் என்பதைக் கண்டறிந்து தட்டி எழுப்புவதும், அதுவாக உங்களை உருவாக்குவதும் ஆசிரியரின் கடமையும், பொறுப்புமாகும். இப்பணியிலிருந்து அவர்கள் தவறுவார்களாயின் அதனை இனங்கண்டு கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்குரியது. அதனை நீங்கள் இணங்காண வேண்டும். எனவே, வாழ்க்கையில் நீங்கள் ஒரு போதும் தோல்வி அடைந்து விடக் கூடாது. நும்பிக்கை இழந்து விடக் கூடாது. தோல்வி என்பது நிரந்தரமானதல்ல!' எனத் தெரிவித்தார்.











Read More

Saturday, December 12, 2015

avathani Media Network

5000 ரூபா புகைப்பரிசோதனை கட்டணம்; தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்­டத்தில் தனியார் பஸ்­க­ளுக்கு விதி­க் கப்­பட்­டி­ருந்த 5000 ரூபா புகை­ப்ப­ரி­சோ­தனை கட்­டணம் தற்­கா­லி­கமாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
கடந்த மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்ப்­பட்ட வரவு செலவுத் திட்­டத்தில் வாக­னங்­க­ளுக்­கான புகைப்­ப­ரி­சோ­த­னைக்­கான கட்­ட­ணம் அதி­க­ரிக்­கப்­பட்­டது. அதற்கு எதிர்ப்பு தெரி­வித்த பல்­வேறு போராட்­டங்­களும் முன்­னெ­டு­க்கப்­பட்­டன.
அந்­த­வ­கையில் கடந்த காலங்­களில் மோட்டார் சைக்கிள் உட்­பட முச்­சக்­கர வண்­டி­க­ளுக்­கான இக்­கட்­டண அதி­க­ரிப்பு நீக்­கப்­பட்­ட­தோடு தனியார் பேருந்­து­க­ளுக்கு மட்­டுமே இந்த கட்­டண அதி­க­ரிப்பு அமுலில் இருக்கும் என நிதி­ய­மைச்சால் தெரி­விக்­கப்­பட்­டது.
இவ்­வா­றான நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பேருந்து உரி­மை­யாளர் சங்­கங்கள் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுக்க விருந்­த­ன. நேற்றைய தினம் இது தொடர்பில் பேருந்து உரி­மை­யாளர்கள் சங்­கத்­திற்கும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கும் இடையே பேச்­சு­வார்த்தை நடை­பெற்­ற­து.
அந்­த­வ­கையில் தனியார் பேருந்­துக்­க ­ளுக்­கான அதிகரிக்கப்பட்டுள்ள 5000 ரூபா கட்டணம் தற்காலிகமாக இடை நிறுத் தப்படுவதாக குறித்த பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

கல்லெறி மீதான சொல்லெறிகள்

( ஏ.எல்.நிப்றாஸ் )
மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக
Read More
avathani Media Network

தூய தேசத்தை நோக்கிய தொடரும் பயணம்..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
தற்காலத்தில் நமது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக,கலாச்சார ,சமய சீர்கேடுகள், போதை பொருள் பாவனை போன்றவை தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டங்களை " தூய தேசத்தை நோக்கிய பயணம் " என்ற சீர்திருத்த பயணத்தை முஹாசபா மீடியா நெட்வொர்க் முன்னெடுத்து வருகின்றது.. இதனது ஒரு கட்டமான "சுய விசாரணை"," சிகரட் வாழ்வா?சாவா?" என்ற பிரசுரங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர், காத்தான்குடி நகர சபை அதிகாரிகள், ஊழியர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கபட்டது..

இது தொடர்பாக பல விடயங்களை கருத்திற்கொண்டு இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது..







Read More