Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை

உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில் லஞ்சீட் பாவ­னை­யினை தடை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
லஞ்சீட் பாவ­னைக்கு பதி­லாக உணவுப் பொருட்­களை பொதி­யி­டு­வ­தற்குப் பொருத்­த­மான பாத்­தி­ரங்கள் மற்றும் வாழை இலை யை பயன்­ப­டுத்து­வ­தற்­கான ஊக்­கு­விப்பு வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தாக சுற்றுச் சூழல் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.
பொலித்தீன் பாவ­னை­யினை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிப்­ப­தனை பிர­தான நோக்­க­மாகக்­கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள இத்­திட்­டத்தை எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக சுற்றுச் சூழல் அதி­கார சபையின் தலைவர் பேரா­சி­ரியர் மேர்வின் லால் தர்­ம­சிறி தெரி­வித்­துள்ளார். இதன் முதல் கட்டம் அரச சேவைகள் திணைக்­களம் மற்றும் கல்­வி­ய­மைச்­சுடன் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.
அத்­துடன் லஞ்சீட் பாவ­னை­யினை தடை­செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் அரச, தனியார் துறை யினர் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
Read More
avathani Media Network

மட்டு-ஒட்டமாவடி மீராவோடை கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேறும் விழா-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-ஒட்டமாவடி மீராவோடை கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் 1வது வருட மாணவர் வெளியேறும் விழா நேற்று (21-12-2015) திங்கட்கிழமை மாலை ஒட்டமாவடி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியை திருமதி. ஏ.எல்.ஹில்மியா தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அமீர் அலி கலந்து கொண்டார்.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியினால் கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் ஒரு வருடம் பாலர் கல்வி பயின்று வெளியேறும் சிறுவர், சிறுமிகளுக்கு கிண்ணமும், சான்றிதழும், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலை மாணவ, மாணவிகளின் ஆற்றல்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலப் பேச்சு, சிங்களப் பேச்சு, ஆங்கில மற்றும் தமிழ் பாடல், கஸீதா உட்பட பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேறும் விழாவில் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஒட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, மீராவோடை கிழக்கு சனசமூக நிலையத் தலைவர் கே.எம்.நிஜாமுதீன், கல்குடா மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் உட்பட ஊர் பிரமுகர்கள், கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





















Read More
avathani Media Network

பதுரியா ஜமாத்தார் இஸ்லாமிய சமுக சேவை மன்றம் விடுக்கு உருக்கமான வேண்டுகோள்


Read More
avathani Media Network

இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக ஒரு நாள்!!

(ஜுனைட்.எம்.பஹ்த்)
அன்பான இலங்கை வாழ் முஸ்லிம்  நண்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்)
எமது இலங்கை திருநாட்டில் இன,மத பேதங்கள் இன்றி மனிதன் என்ற ஒரே எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம் மத்தியில் இது பொறுக்க முடியாத மனித உருவத்தில் நடமாடித்திரியும் இரத்த காட்டேரி பொதுபல சேன என்ற துவேஷ காட்டேரிகள்  இனம்,மதம் என்ற பெயரில் இவனுகளது நாசகார துவேஷ செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் புனிதமான அல் குர் ஆனை இழிவுபடுத்தும் வேலை செய்ய  துனிந்துவிட்டானுகள்.
இவர்கள்  புத்த துறவிகள் அல்ல  காரணம் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அஹிம்சை யாக இருப்பார்கள் புத்த மதம் அதனைத்தான் போதனை செய்கிறது.. இவர்கள் இன தீயில் குளிர்காயும் கயவர்கள் கூட்டம்..
இதற்கு எதிராக நாம்  கண்மூடித்தனமாக தேர்வு செய்து நித்திரை கொள்ள பாராளுமன்றம் அனுப்பியவர்கள் பேசமாட்டார்கள்.  இனிமேல் அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் நம்பி பயனில்லை..

இதே போலும் இதை விட மோஷமாகவும் இஸ்லாத்தையும் எமது உயிரிலும் மேலான இறை தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் விமர்சிக்கும் நோக்கத்தில் இறை வேதமான குர் ஆனை ஆய்வு செய்த எத்தனையோ மனிதர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் புனித இஸ்லாத்தை ஏற்று இன்று அதனை போதிக்கும் தூய பணியை மேற்கொண்டு வருகின்றனர்.. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் இந்த பொதுபல சேனாவுக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்க நாம் அனைவரும் பிரார்திப்போம்...
Read More