Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்க துரிதகெதியில் தீர்வு

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்க துரித தீர்வை பெற்றுக்கொடுக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட கொள்கையடிப்படையிலான தீர்மானங்களின் படி இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்காக தேசிய கொள்கை மறறும் பொருளாதார அமைச்சர் நிரோஷன் பெரேராவின் கண்காணிப்பின் கீழ் 4 அமைச்சுகளின்பங்களிப்புடன் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு தொழில்வாய்ப்பற்ற பட்டாரிதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகமுன்வைத்த பரிந்துரைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமருடன் இடம்பெறவுள்ளசந்திப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

ஐ.தே.கட்சியின் யாப்பு சீர்த்திருத்தப்படுகிறது – அமைச்சர் கபீர்


ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு சீர்த்திருத்தப்படவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த யாப்பு சீர்த்திருத்தம் மூலம் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். 
Read More
avathani Media Network

கடத்தல் சம்பவம் : ஹிருணிகாவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பேருக்கு விளக்கமறியல்

தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகாவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பேரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read More
avathani Media Network

வழி தவறிய பிரிவினரின் கூட்டத்தை தடை செய்யக்கோரி காத்தான்குடி ஜம்யியதுள் உலமா நகர சபை செயலாளருக்கு கடிதம்

வஹ்ததுல் வுஜூத் பிரிவினரின் நிகழ்வு இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அஞ்சி நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு நகர சபை செயலாளருக்கு பரிந்துரை செய்து ஜம்இய்யதுல் உலமா கடிதம் -

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

வஹ்ததுல் வுஜூத் பிரிவினரின் நிகழ்வு 01-01-2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சுவதாக காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கடிதம் ஒன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.

மேற்படி கடிதத்தில் 01-01-2016ம் திகதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு தொடர்பாக என தலைப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….

இன்று 23-12-2015ம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அவசர நிர்வாக கூட்டத்தீர்மானத்தினை தங்களுக்கு இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த 28-05-2015ம் திகதி கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடாத்திய மாநாட்டில் வஹ்ததுல் வுஜூத் என்ற பிரிவினர் வழிதவரிய ஒரு சிந்தனைப் பிரிவினர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றோம். அந்த வகையில் மேற்குறித்த சிந்தனைக் கோட்பாட்டினைக் கொண்ட பிரிவினரால் எதிர்வரும் 01-01-2016ம் திகதி தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கருத்தரங்கொண்றினை நிகழ்த்தவுள்ளதாக எமக்கு எழுத்து மூலம் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே மேற்படி நிகழ்வு இடம்பெறும் பட்சத்தில் நமது பிரதேசத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சுகின்றது.

எனவே மேற்படி சமூக நலனைக் கருத்திற் கொண்டு குறித்த நிகழ்வு இடம்பெறாது நகர சபை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்புதல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக தாங்கள் 01-01-2016ம் திகதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு இத்தால் பரிந்துரை செய்யப்படுகின்றது.


Read More