Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 19, 2015

Unknown

நல்லாட்சியில் பெற்றுக் கொண்ட நல்ல அமைச்சுகளும் உறங்கு நிலையில் தொடரும் முஸ்லிம் விவகாரங்களும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

நல்லாட்சி அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் என்ற கால எல்லை முடிவடையும் நிலையில் அந்த திட்டத்தின் கீழ் தொடங்கிய சில பணிகளை புதிய அரசு முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கிறது. பொதுமக்கள் நலன் தேசிய அபிவிருத்தி, அரசியல் என்று இன்னோரன்ன விடயங்கள் அந்த திட்டத்தில் அடங்கப் பெற்றுள்ளன. 

ஆட்சியமைப்பதற்கு உறுதுணையாக நின்ற கட்சிகள் விசேடமாக, சிறுபான்மை இனக் கட்சிகள் முன்வைத்த சில கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட நிலையில் அவற்றின் சிலவற்றையும் புதிய அரசு நூறுநாட்கள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக் கொடுக்கவும் தவறவில்லை.

இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான தமிழர் சமுதாயம் சார்பாக முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றினை அதாவது, கையளவேனும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது புதிய அரசு. வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அவற்றில் சில நூறு ஏக்கர்களேனும் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை, வடக்கு, கிழக்கில் இராணுவ சேவையிலிருந்த ஆளுநர்களுக்குப் பதிலாக சிவில் அதிகாரிகள் இருவரை இரு மாகாணங்களுக்கும் நியமித்தமை, வடக்கில் தொழில்வாய்ப்புகளை வழங்கியமை என்று சில விடயங்களைச் சிறிதாகவேனும் இன்றைய அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.
Read More
Unknown

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்கள் கலந்து கொள்ளும் மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் -காத்தான்குடியில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோர் கலந்து கொள்ளும் மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் இம்மாதம் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பாலமுனை,காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெறவுள்ளது.

ஆண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 22ம் திகதி புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும்,ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை பூநொச்சிமுனை கடற்கரையிலும்,ஏப்ரல் 24ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரையிலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்திலும்,ஏப்ரல் 26ம் திகதி காத்தான்குடி-06 பஸ்மலா சதுக்கத்திலும்,ஏப்ரல் 27ம் திகதி பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளி அருகிலும் மாலை நேரங்களில் பிற்பகல் 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் ,பெண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலிலும் காலை 10.மணிக்கு இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.



இதில் அணைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

மேற்படி அனைத்து மார்க்க பிரச்சாரக் கூட்டங்களும் ஸாஜில் மீடியா நெட்வேர்க் பிறைவட் லிமிடட்டின் இணைய டிவி ஊடாக www.dharulathar.com, wwwzajilnews.lk    இணையத்தளங்களில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

இலங்கையின் முதலாவது ஹோட்டல் முகாமைத்துவ மாநாடு


இலங்கையில் நடத்தப்படும் முதலாவது ஹோட்டல் முகாமைத்துவ மாநாடு எதிர்வரும் மே மாதம் 12-13ஆம் திகதிகளில கொழும்பு - தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.


இலங்கை ஹோட்டல் பாடசாலையின் பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடானது 'விருந்தோம்பல் தலைவர்களுக்கான நுணுக்க முகாமைத்துவம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.



(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

தேர்தல் முறை மாற்றம் பற்றிய 20 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகள் முன்வைப்பு


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)


தேர்தல் முறை மாற்றம் பற்றிய  20 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முடிவு செய்யப்பட்டு ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமை காலை நடை பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது கையளிக்கப்பட்ட இந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் வருமாறு:
Read More