Featured Home (TOP)

Recent Comments

Sunday, July 26, 2015

Unknown

மது அருந்தி மயங்கிக்கிடந்த 10 மாணவர்கள் கைது: ஒருவர் ஆபத்தான நிலையில்

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது; கம்பளை நகரில் மகாவலி ஆற்றங்கரையில் மாணவர் குழுவொன்று மதுஅருந்திய நிலையில் மயங்கிக்கிடப்பதாக கம்பளைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நிறைந்த மதுவெறியில் மயங்கிக் கிடந்த பத்து மாணவர்களை கைது செய்ததுடன் அதில் ஒரு மாணவன் ஆபத்தான நிலையிலிருந்தமையால் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Read More
Unknown

மு.கா.வும் அ.இ.ம.கா.வும் ஒன்றையொன்று வீழ்த்தும் வேலைகளையே செய்கின்றன இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்கிறார் அதாவுல்லா

வடக்கில் பல்­வேறு பிரச்­சி­னைகள் இருக்­கின்­ற ­போ­திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை வீழ்த்­து­வ­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை ரிஷாட் பதி­யுதீன் அம்­பாறை மாவட்­டத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருக்­கின்றார்.

அவ­ரது பிர­தே­சத்தில் மு.கா தனித்துப் போட்­டி­யி­டு­வதால் மு.காவை வீழ்த்தும் முயற்­சியில் இங்கே மக்கள் காங்­கி­ரஸை விஸ்­த­ரித்­தி­ருக்­கின்றார்.


இதனால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தின் வாக்­குகள் சித­ற­டிக்கப்ப­டு­கின்­றன என முன்னாள் அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தின் முதன்மை வேட்­பா­ள­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்லா தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்­தி­லுள்ள துறை­சார்ந்த முக்­கி­யஸ்­தர்­களை ஒன்­றி­ணைத்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட தேர்தல் நட­வ­டிக்­கைகள் பற்­றிய கலந்­து­ரை­யாடல் கடந்த புதன்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று அதா­உல்லா அரங்கில் இடம்­பெற்ற விஷேட கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலியை வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யி­டு­கின்­றது.

அதேபோல் ரிஷாட் பதி­யு­தீனின் பிர­தே­சத்தில் மு.கா தனித்துப் போட்­டி­யி­டு­வதால் அம்­பா­றையில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யி­டு­கின்­றது.

இவ்­வாறு அர­சியல் ரீதி­யாக இக்­கட்­சி­யினர் பழி­வாங்கல் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­களே தவிர அவ­ரவர் கட்­சி­களில் பிர­தி­நி­தி­களை அதி­க­மாகப் பெற­வேண்டும் என அவர்கள் முயற்­சிக்­க­வில்லை.

வெற்­றிலை என்­பது மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு மட்டும் சொந்­த­மான ஒரு சின்­ன­மல்ல. அது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்­கான பொது­வான சின்னம்.

சிலர் சொல்­வ­தைப்போல் மஹிந்த அணியில் வெற்­றி­லைச்­சின்­னத்தில் நான் போட்­டி­யி­ட­வில்லை

தேசிய காங்­கிரஸ் சார்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிலே நான் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன்.  

கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக நமது மக்­க­ளுக்கு நடந்த கொடுமை, நாம் எங்­குமே வாழ முடி­யாத சூழ்­நிலை, எமது உரி­மைகள் சொத்­துக்கள் என்­பன சூறை­யா­டப்­பட்­டமை இவற்­றை­யெல்லாம் கருத்­திற்­கொண்டே நான் எம்மை நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்­கான சூழ்­நி­லை­யினைத் தோற்­று­வித்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பக்கம் இருந்தோம்.

அமைச்சுப் பதவி பெறு­வ­தற்­கா­கவோ, வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவோ அல்­லது தனிப்­பட்ட சுய­ந­லத்­திற்­கா­கவோ நாம் அவர் பக்கம் செல்­ல­வில்லை. அதற்­காக நாம் தொடர்ந்தும் மஹிந்­தவின் பக்கம் நிற்க வேண்டும் என்­பது கட்­டா­ய­மா­ன­தல்ல. அவ்­வா­றா­ன­தொரு தேவை எமக்கு எப்­போதும் இருந்­தது கிடை­யாது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு மஹிந்த அணி­யென்றும் மைத்­திரி அணி என்றும் இரண்டு கூறு­க­ளாகப் பிரிந்து விட்டால் அந்த இடை­வெ­ளிக்குள் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்­கான நிலை­மையை தோற்­று­விக்கக் கூடும் என்­ப­தற்­கா­கவே நாம் இரு தரப்­பி­ன­ரையும் ஒற்­று­மைப்­ப­டுத்தும் முயற்­சியில் ஈடு­பட்டோம்.

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கக் கூடாது என்­ப­தற்­கா­கவே நாம் பல்­வே­றான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

மாறாக ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் வடக்கு கிழக்கு இணைப்பு சம்­பந்த­மான பிரச்­சினை இருக்­கி­றது, புலி­களின் வருகை, பொரு­ளா­தாரப் பின்ன­டைவு, முஸ்லிம் மக்­க­ளுக்குப் பிரச்­சினை, அபி­வி­ருத்தி அழிந்து போகும் நிலைமை போன்ற பல்­வே­றான பிரச்­சி­னைகள் நாட்டில் தலை­தூக்கும். 

இதற்­கா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறக்­கூ­டா­தென்ற நிலைப்­பாட்டில் நின்­று­கொண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு கூறு போடப்­ப­டாமல் ஒன்­றாக இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். இதற்­காக நான் மஹிந்­தவின் அணி என்­பது கேலியான விட­ய­மாகும்.

தற்­போ­தைய நாட்டின் நில­வ­ரப்­படி நாடு தழு­விய ரீதியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு இம்­முறை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றப் பொதுத் தேர்­த­லின்­போது அமோக வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­ய­டை­ய­வுள்­ளது.

நாடு முழு­வ­தி­லு­முள்ள சிங்­கள மக்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கின்­றார்கள்.

நாட்­டி­லுள்ள சிறு தொகை சிங்­கள மக்­களும் வட கிழக்கில் உள்ள சில குழு­வி­ன­ருமே ஐக்­கிய தேசியக் கட்­சி­யினை ஆத­ரிக்­கின்­றார்கள்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது அனைத்துக் கட்­சி­களும் இணைந்து அம்­பாறை மாவட்­டத்தில் அன்னச் சின்­னத்­திற்கு 2 இலட்­சத்து 33 ஆயிரம் வாக்­கு­களை அளித்­தனர்.

வெற்­றிலைச் சின்­னத்­திற்கு 1 இலட்­சத்து 21 ஆயிரம் வாக்­குகள் கிடைத்­தன. அந்தத் தேர்­தலில் அன்னச் சின்­னத்­திற்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் இம்­முறை சுமார் 65 ஆயிரம் வாக்­குகள் தமிழ் மக்கள் பக்கம் சென்று விடும்.

மக்கள் விடு­தலை முன்­னணி, பொன்­சேகா அணி, தேசிய காங்­கிரஸ் என்று பல்­வே­றான பிரி­வு­களில் இம்­முறை வாக்­குகள் செல்­ல­வுள்­ளன.

அம்­பாறை மாவட்­டத்தின் தற்­போ­தைய நில­வ­ரத்­தின்­படி ஒரு இலட்­சத்து 10 ஆயிரம் வாக்­கு­க­ளையே ஐக்­கிய தேசிக் கட்சி பெற்றுக் கொள்ளும்.

ஒரு இலட்­சத்து நாற்­ப­தா­யி­ரத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு பெற்றுக் கொள்­ள­வுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் இம்­மா­வட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு நான்கு ஆசனங்­க­ளையும், ஐக்­கிய தேசியக் கட்சி இரண்டு ஆச­னங்­க­ளையும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு ஆச­னத்­தையும் பெற்றுக் கொள்ளும்.

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எமது தேசிய காங்­கிரஸ் கட்சி தனித்துப் போட்­டி­யிட வேண்டும் என சிலர் விரும்­பி­ய­போ­திலும் எமக்­காக அளிக்­கப்­ப­ட­வுள்ள சுமார் 70 ஆயிரம் வாக்­கு­களைக் கொண்டு ஒரே ஒரு பிர­தி­நி­தியைத் தான்  பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்­பாட்­டில்­தான் நாம் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு மூன்று பிர­தி­நி­தி­களை வெற்றி பெறும் முனைப்­பு­டனே களத்தில் இறங்­கினோம்.

அம்­பாறை மாவட்­டத்தில் நீண்ட கால­மாக அர­சியல் அதி­கா­ர­மற்று அர­சி­யல்­வா­தி­களால் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்த பொத்­துவில் மற்றும் இறக்­காமம் போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரங்­களை வழங்கும் வகை­யி­லேயே இப்­பி­ர­தே­சங்­களி­லி­ருந்து வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கி பல்­வே­றான வெற்றி வியூகங்களுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். இச்­சந்­தர்ப்­பத்தில் நம்­ம­வர்கள் எதிர்­கட்­சிக்­கா­ரர்­களின் பொய்ப் பிரச்­சா­ரங்­களை நம்பி விடாமல் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டு நமது வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்த முயல வேண்டும்.

நாட்டில் நடை­பெறும் ஏனைய தேர்­தல்­தல்­களைப் போல் பாரா­ளு­மன்றத் தேர்­த­லினை மட்­டிட முடி­யாது. நமது பிர­தே­சத்­திற்கு நமது மாவட்­டத்­திற்கு யார் பொருத்­த­மா­னவர் யார் சேவை செய்­யக்­கூ­டி­யவர் என்­ப­தனைக் கருத்­திற்­கொண்டு செயற்­பட வேண்­டிய தேர்­த­ல் இதுவாகும்.

கடந்த காலங்­களில் நாம் நியா­ய­மான முறை­யிலே மக்­க­ளுக்­காக செயற்­பட்­டி­ருக்­கின்றோம்.

நாம் நேர் வழியில் நடந்து கொண்­டதால் இந்த நாட்டில் பாரிய அர­சியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.

இந்த நாட்டில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வரக்­கூ­டாது என்­கின்ற திட­மான நிலைப்­பாட்டில் எமது தேசிய காங்­கிரஸ் உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக ரணில் விக்­ர­ம­சிங்க இருக்கும் வரை அக்­கட்­சியில் இணை­வ­தில்லை என மறைந்த எமது தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஒரு கொள்­கை­யுடன் செயற்­பட்டார்.

அவர் வழியில் அவர் பாச­றையில் அர­சியல் செய்யும் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக ரணில் விக்­ர­ம­சிங்க இருப்­பா­ராயின் எதிர்த்தே செயற்­ப­டுவோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக வேறொ­ருவர் வரு­மி­டத்து நாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினை எதிர்க்க வேண்­டிய தேவை ஏற்பாடாது.

விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட எமது மக்களைக் குடியேற்றுவதற்காக கடந்த மஹிந்த ஆட்சியில் மக்கள் குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட வில்பத்துக்காட்டினை இந்த அரசாங்கத்தினாலும் ரணில் விக்ரமசிங்கவினாலும் காடழிப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என பலமாக குரல் கொடுக்கப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் தமக்குச் சொந்தமானது என்று நினைக்கின்ற சில விடயங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

எமது தேசிய காங்கிரஸ் கட்சி காலத்திற்குக் காலம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறிவிடும் கட்சியல்ல. திடமான நிலைப் பாட்டுடன் நேர்வழியில் செயற்பட்டு வருவதால் எமக்கென்று நற்பெயர் எப்போது முண்டு.

காலத்திற்குக் காலம் அவசர முடிவுகளை எடுத்து மாறுகின்ற வர்கள் அரசியலில் நின்றுபிடிக்க முடியாமல் அழிந்து போய்விடு வார்கள் என்றார்.
Read More
Unknown

‘கொழும்பின் தொலைநோக்கு’ முஜிபுர் ரஹ்மானின் விஷேட கூட்டம்

கொழும்பு முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் 'கொழும்பின் தொலைநோக்கு' எனும் தொனிப்பொருளுடனான விஷேட கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை 27ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. 
 
மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதாம அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் தலைமையில்,  கொழும்பு - 06, மெரென் கிரேண்டில் இடம்பெறும் இந்நிகழ்வில், முன்னாள் கல்வி அமைச்சர் கருணாசேன கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 
 
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாகிர் மாக்கார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
 
கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் ரிஷ்வி முப்தி, அஷ்செய்க் அகார் முஹம்மத்,  அஷ்செய்க் யூசுப் முப்தி, தேசிய சூறா சபை தலைவர் தாரிக் மஹ்மூத், முஸ்லிம் கவுன்ஸில் உப தலைவர் ஹில்மி முஹம்மத் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இதேவேளை, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.பைரூஸ், அர்ஷாட் நிசாமுதீன், பாயிஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் கொழும்பு மாநகர ஆணையாளர் உமர் காமில் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 
 
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் முஜிபுர் ரஹ்மானின் திட்டங்கள் தொடர்பில் 'கொழும்பின் தொலைநோக்கு' கருப்பொருளில் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
Read More
Unknown

தலைவரே கவனம்..! தவிசாளர் வேலி தாண்டுவது உறுதி!!


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

தேர்தல் களம் சூடு பிடித்து வரும் இந்நாளில் கட்சி மாறிகளும் முடிச்சு மாறிகள் போல் இரவோடிரவாக பல்வேறு தரப்பு அரசியல் தலைகளுடனும் இரகசியச் சந்திப்புக்களை மேற்கொண்டு, பேரம் பேசல்களை நடாத்தி கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் மூத்த கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்ததாக ஊடகங்களில் டமாரம் அடித்து வரும் முன்னாள் தமிழ் ஆயுதப் போராட்டக் குழுவின் அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல்ஞானியான தவிசாளர் ஒருவர், வேட்பாளர் தெரிவில் இடம்பெற்ற தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தப் போவதாக சமீபத்தில் 'பெருநாள் ஸ்பெஷல் வெடில்' ஒன்றைக் கொழுத்தி ஊடகங்களில் வீசியிருந்தார்.

எனினும் இதுவரை அவர் திருவாய் மலர்ந்து எந்தவிதமான தில்லுமுல்லுகளையும் வெளியாக்கவில்லை. அவரது தில்லுமுல்லுகள் அவரது சொந்தக் கப்பலில் ஏற்றுமளவுக்கு அதிகளவில் இருக்க, தோணியில் ஏற்றுமளவுக்கு அவரிடமுள்ள தில்லுமுல்லுகள் முஸ்லிம் சமூகத்தில் எந்த முலைக்குள் அடங்கும்? என்ற மக்களின் கேள்விகள் ஒருபுறமிருக்க...

இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த தவிசாளர் காத்தான்குடிக்கு பின்னிரவில் வந்து, அவருக்கு நெருக்கமான முன்னாள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினருடன் (அவரது பெயரும் முன்னாள் மு.கா. தவிசாளர் ஒருவரின் பெயரை நெருங்கியது) மோட்டார் சைக்கிளில் சென்று சக மகிந்த விசுவாசியும், தற்போதைய மைத்திரி பார்ட்டி வேட்பாளருமான ஈச்சை மர மண்ணின் மைந்தனைச் சந்தித்து பேச்சுவார்ததைகளை மேற்கொண்டதாக எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியொன்று கூவியுள்ளது.

குறித்த எஸ்.எம்.எஸ். செய்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரது பெயர்களும், சந்தித்த மண்ணின் மைந்தனின் பெயரும் அச்சொட்டாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கப்பட்டு 48 மணித்தியாலங்கள் கழிந்திருந்தும் அச்செய்திக்கு எதிராக நடவடிக்கைகளோ அல்லது மறுப்போ இவர்கள் தெரிவிக்காமல் இருப்பது, இந்தப் பரம இரகசிய சந்திப்பை மட்டு. மாவட்ட மு.கா. ஆதரவாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைந்துள்ளது.

மட்டு. தேர்தல் களத்தில் குறித்த தவிசாளருக்கு இடமளிக்க வேண்டாம் என மாஜி. மாநகரப் போராளி முதல் கட்சியின் தேசிய கொ.ப. வரை சமீபகாலமாக ஊடகங்களில் ஒப்பாரி வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் இவ்விடத்தில் கவனிப்புக்குரியது.

இதேவேளை, ஏறாவூரில் மௌலானா மீண்டும் மு.கா.வினூடாக நாடாளுமன்ற மட்டத்திற்கு உயர்வது, தனது அரசியல் இருப்புக்கு ஆப்பாகும் என்பதனால்தான் இவ்வாறான பெருநாள் வெடிகுண்டுகள் மு.கா. தலைமையை நோக்கி எறியப்படுவதாகவும், இதற்கு சைட் சப்போர்ட்டாக ஏறாவூரிலிருந்து ஒரு பாவா மாத்திரம் மு.கா.வின் மீது அதிருப்தி தெரிவித்து சின்னதொரு அறிக்கை விட்டிருப்பதாகவும் ஏறாவூர் வட்டாரம் கூறுகிறது.

ஆக, இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து, பெருக்கிப் பிரித்துப் பார்க்கும்போது தவிசாளர் மிக விரைவில் வேலி தாண்டி வெற்றிலை மேடையில் காட்சியளித்து புதிய வெற்றி வியூகத்தைக் கட்விழ்த்து விடப்போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Read More