பஹத் ஜூனைத்
இலங்கை முஸ்லிம்களில் 20 சதவீதமானோர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளார்கள் என்றும் நாலாப்புறங்களிலும் வாழும் முஸ்லிம்கள் இதனால்கூடுதலாகப் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் ஸ்ரீலங்கடி சில்வா தெரிவித்தார்.
போதைவஸ்து பயன்பாட்டிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுப்பது தொடர்பாக முஸ்லிம்இயக்கங்களின்பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே சபையின் புதிய தலைவர் டாக்டர் ஸ்ரீலங்கடி சில்வா இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அகில இலங்கை வை.எம்.எம். பேரவைஉள்ளடக்கிய முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது போதைவஸ்து பாவனையிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுப்பதற்குபள்ளி வாசல் மட்டத்திலான ஆதரவு அவசியம் என்று தலைவர் தெரிவித்தார்.
போதைவஸ்து பயன்பாட்டில்மட்டுமன்றி போதைவஸ்துகள் வியாபாரத்திலும் முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், நாட்டுக்குள் வரும் எந்தவகையான போதைப் பொருட்களும் பரீட்சிக்கப்படும் முதலாவது தளமாககொம்பனித்தெரு இருப்பதாக கூறினார்.
ஏனைய சமயங்களைப் போன்றல்லாது இஸ்லாம் போதைவஸ்து பயன்பாட்டினை முற்றாகதடைசெய்துள்ளது என்று குறிப்பிட்டஅவர், ஏனைய சமயங்களில்போலன்றி இவ்வாறான தவறுகளைச்செய்வோர் பள்ளிவாசலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
எனவே, இந்த ஆபத்திலிருந்து இளையதலைமுறையினரை மீட்டெடுக்கபள்ளிவாசல்கள் உலமாக்கள்முன்வரவேண்டும் என்று அவர்அழைப்பு விடுத்தார்.
முஸ்லிம் சமூகம் ஒரு வெற்றிச் சமூகம்.அவர்கள் எதில் கைவைத்தாலும்வெற்றி பெறுவார்கள். நல்லவிவசாயிகளாக, வர்த்தகர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தசமூகத்தின் மத்தியில் போதைவஸ்து பழக்கம் அதிகரிக்க இடமளிப்பது நல்லதல்ல
என்றும் அவர்தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலஅறிவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இக்கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.
தேசிய அபாயகரமான ஒளடதங்கள்கட்டுப்பாட்டு சபை 2014ஆம் ஆண்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38%அதிகரிப்பாகும்.
கைது செய்யப்பட்டவர்களது இனவிகிதாசாரம் சிங்களவர்கள் 36859 (56%), தமிழர்கள் 16934 (26%), முஸ்லிம்கள் 1202
(19%).ஆகும் .
(நன்றி: நவமணி)
