பஹத் ஜூனைத்
துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
"ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் இச்செயலமர்வுமார்ச்மாதத்தில்நடைபெறவுள்ளது.
இது முற்றிலும் இலவசமானது.இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்கள், செய்தி இணையத்தளங்களை நடாத்துவோர், டுவிட்டர் சேவைகளை நடாத்துவோர் மற்றும் ஊடகத்துறையில் ஆவர்வமுள்ள மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளமுடியும். இச்செயலமர்வில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்துகொள்ளமுடியும்.
மார்ச் மாதத்தில் வார இறுதி நாளில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4மணிவரை இச்செயலமர்வு நடைபெறும். இதில் கலந்துகொள்வோருக்கு போக்குவரத்துச்செலவு, உணவு மற்றும் சான்றிதழ் என்பனவழங்கப்படும்.
இதற்கு பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை. மட்டுப்படுத்தப்பட்டு ள்ளதால், உங்களது விண்ணப்பங்களை மார்ச் 01ஆம்திகதிக்கு முன்னர் கிடைக்ககூடியவகையில் அனுப்பிவைக்கவும். அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்த தலைநகரைச் சேர்ந்த. பிரபல ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கீழுள்ளஇணைப்புக்குச் செல்லவும்.
egzh9A9eF1
மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் (பகல் வேளைகளில் மாத்திரம்)
0777731180 எனும்தொலைபேசி இலக்கத்துடன்தொடர்புகொள்ளவும்.
