Featured Home (TOP)

Recent Comments

Monday, February 9, 2015

Unknown

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)இன் 85 வது ஆண்டுகள் நிறைவு விழா மிக விரைவில்....

டீன் பைரோஸ்-
காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விழா ஒன்றினை மிக விரைவில் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக (08.02.2015 ஞாயிறு) நடைபெற்ற விசேட ஊகவியாலர்கள் சந்திப்பின் போது பாடசாலை அதிபர் ULM,Mubarak தெரிவித்தார்.


உலகை வெல்லும் கல்வியை நோக்கி எனும் நோக்கை பொருளாக கொண்டு மேற்படி நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பமாக இருப்பதுடன் பின்வரும் விடயங்கள் தொடராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

01)பாடசாலையின் 85 வது நிறைவினை முன்னிட்டு நிணைவுப்படிவம்.
02)மார்ச்சு மாதம் தமிழ்,முஸ்லிம் பெரிய பாடசாலைகளுக்கிடையில் விவாத போட்டிகளை நடாத்துதல்.
03)ஏப்ரல் மாதம் கழகங்களுக்கிடையில் கிரிக்கட்,உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்துதல்.
04)மே மாதம் மூதுர் தொடக்கம் பொத்துவில் வரை கவன ஈர்ப்பு வாகன தொடர் அணியினை ஏற்பாடு செய்தல்.
05)ஜூன் மாதம் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாரிய சிரமதான பணி ஒன்றினை மேற் கொள்ளல்.
06)ஜூலை மாதம் பாடசாலையில் மாபெரும் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்தல். 
07)பாடசாலை ஸ்தாபகர் முதலியார் சின்னலெப்பை ஞாபகார்த்த முத்திரை ஒன்றினை வெளயிடல்.
08)பாடசாலை தொடர்பாக தேசிய பத்திரிகைகளில் அனுபந்தம் வெளயிடல்.
09)கல்வி விழிப்புனர்ச்சி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

மேலும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேற்படி பாடசாலையின் அதிபர் முபாறக தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம்(தேசிய பாடசாலை) சுமார் 14 ஏக்கர் நில பரப்பளவில் 1930.01.06 இல் திரு கந்தசாமி என்பவரை முதலாவது அதிபராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிலத்தை வழங்கியவர் மர்ஹூம் முதலியார் சின்னலெப்பை ஆவார். இலங்கையின் தேசியக் கொடியை பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய பெருமையும் அன்னாரையே சாரும்.

மேற்படி பாடசாலையில் கல்வி கற்ற பல ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் உலகின் பல நாடுகளில் பலதரப்பட்ட பதவிகளுடன் தொழில் வாய்ப்புகளை மெற் கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயமானது பல கல்விமான்கள்,புத்தி ஜிவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,சாதனையாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் உருவாக்கி உள்ளது என்ற பெருமையான செய்தியையும் நாம் சொல்லாமல் உலகம் தெரிந்து கொள்ளும்.


மேற்படி ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது.......
01)ULA.Mubarak SLEAS (Principal)
02)SMM.Baseer Tr (secretary SDC)
03)ALM.Rahmathulla PHI (Member SDC)
04)Dr-DM.Mahir (Member PPA)
05)ACA.Azees Hrig (Secretary PPA)

ஆகியோர்களும் விழா தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேற்படி பாடசாலையின் 85 வது விழா தொடர்பாக பல்வேறு பட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ள அதே நேரம் இப்பாடசாலையின் பழைய மாணவர்களின் மேலான ஆலோசனைகளையும்,
உதவிகளையும் வேண்டி நிற்கின்றது மேற்படி பாடசாலை நிர்வாகம்.
விழா தொடரபில் நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களையும் உதவிகளையும் வழங்கிட பின்வரும இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
அலை பேசி - 0652245726.
மின்னஞ்சல் -info@ncckky.sch.lk /lafir.mlm@gmail.

v

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :