UK இல் இருந்து முஹம்மது பாயிஸ் -
இலங்கை தீவில் மீண்டும் இனவாதப் பூதம் நடமாடத் தொடங்கி உள்ளது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிங்கள பேரினவாத அரச அனுசரனயுடன் பெளத்த துரவிகாளால் முநெடுக்கப்பட்டு வந்த இனவாதம் முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளை சூறையாடியது
வடகிழக்கு தவிர்ந்த பகுதிகளில் வாழும் முஸ்லிகள் அச்சத்துடன் வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டனர் வியாபாரங்கள் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டன
மூன்றாம் சிறுபான்மை இனத்தின் மீதான அச்சுறுத்தலை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோடு இனவாதிக்களுக்கு சார்பாகவும் கருத்துக்களை வெளியிட தொடங்கியது பெளத்த மேலாதிக்கப் போக்கை மறைமுகமாக முஸ்லிம்கள் மீது திணிக்கவும் செய்தது
முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாத இனவாதக் கும்பல் அரச இயந்திரத் தோடு இறுக்கமான தொடர்பை கொண்டிருந்ததோடு அதன் திட்டமிடலின் கீழ் இயங்கவும் செய்தது
வட கிழக்கு பிரதேசங்களில் புலிகள் முஸ்லிம்களை முழுமையாக அழிதொளிப்பதட்காக மேட்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளை ஒத்ததாகவே சிங்கள பேரினவாதிகளின் நடவடிக்கைகளும் காணப்பட்டது
1. நிலரீதியான ஆக்கிரமிப்பு
2. இன மதரீதியான ஆக்கிரமிப்பு
3.வாழ்வாதாரங்களை இல்லாதொழித்தல்
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இனவாதிகளின் இலட்சிய கணவான தனி சிங்கள நாடொன்றை உருவாக்குதல் என்ற இலக்கை நோக்கி நகர முடியும் என இனவாதிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்
இக்கருத்தினை சிங்கள கிராமப் புற மக்கள் மத்தியில் பெளத்த பேரினவாதிகள் அரசசார்பு அரசியல் வாதிகளைக்கொண்டும் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டனர் இதன் விளைவாக அரசு எதிர்பார்த்த விளைவையும் அறுவடை செய்தது பிரச்சாரம் விரிவடைய தொடங்கியபோது நாட்டின் பலபகுதிகளிலும் முஸ்லிம்களின் வணகஸ் தளங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏலத் தொடங்கின இதனூடாகவே முஸ்லீம்களை சூடேற்றவும் அரசு வலை விரித்து எதிர்பார்த்து காத்திருந்தது
முஸ்லிம் சமூகம் தானாகவே சுதாரித்துக்கொண்டு மிகநிதானமாக ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க ஆரம்பித்தபோதுதான் அரசு ஆடிப்போனது திட்டமிடலில் மாற்றங்களை சடுதியாக செய்யவேண்டி ஏற்பட்டது
நாட்டின் பலபகுதிகளுளும் தீவிர மத எதிர்ப்பு பிரச்சாரங்களை முடக்கி விட்டபோதும் எதிர்பார்த்த விளைவை எட்டாததனால் தான் அரசு நேரடியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அக்கிராமத்தில் சொத்துக்களையும் உயிர்களை தனது இராணுவ பலத்தை கொண்டே அப்பாவி முஸ்லிம்களை கொண்றும் தீக்கிரை இட்டும் அழித்தது இது பேரினவாதிகளுக்கு அரசின் முழு ஆதரவை தெரிவிப்பதற்கான இன அழிப்பு அவர்களை மேலும் இனவாத செயற்பாட்டை விஸ்தரிப்பதட்கான தட்டிக் கொடுக்கும் வேலையாக அரசு செய்து முடித்தது
இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்தது பெரும்பாலான அரபு நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையிலையிலும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது
இங்குதான் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட தொடங்கினர் முஸ்லிம்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள் சந்தர்பத்தை பயன்படுத்தி வரிந்து கட்டிக்கொண்டு அணியாக்கார அரசுக்கு தங்கள் விசுவாசத்தை காண்பிக்க முண்டி அடித்துக்கொண்டனர் அரபுநாடுகளிடம் இனவாத அரசை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் முஸ்லிம் சமூகத் திற்கு வரலாற்றுத் துரோகத்தை செய்து கொண்டே முஸ்லிம் சமூகம் தொடர்பாகவும் பேசத் தொடங்கினர்
முஸ்லிம் சமூகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட
அரசியல்வாதிகள் அரசுடனும் எதிர்கட்சிகளுடனும் இருந்த போதிலும் பாராளுமன்றத்தில் அரசைகண்டிக்கவோ அரசுதான் இன அழிப்பின் பின்னணியில் இருக்கிறது என்று உரத்துச் சொல்லவோ நாதியற்ற நிலையில் இப்பிரச்சினை பேசசக்கூட விருப்பம் இல்லாத நிலையில் பாராளு மன்றம் செல்லாமல் தவிர்த்துக் கொண்டனர்
சகோதர சமூகத்தின் தலைவர்களே முஸ்லிம் சமூகம் அனாதையாக்கப்பட்டதை உணர்ந்து சீறி எழுந்து முஸ்லிம் சமூகதிட்காக அரசுக்கு எதிராக பேசத்தொடங்கியது வடக்கில் ஆர்ப்பாட்டங்களையும் செய்தது சிங்கள சமூகத்தின் புத்திஜீவிகளும் போர்கொடி தூக்கினர்
நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது முண்டி அடித்துக் கொண்டு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் அதே தலைவர்கள் அதே கோஷம் முஸ்லிம் சமூகத்தின் மறதி என்ற மூலதனத்தில் களமிறங்கி இருக்கும் அரசியல் வியாபாரிகள் நாங்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் காவலர்கள் என்றும் கூறத் தொடங்கி விட்டனர் உணர்ச்சி வார்த்தைகளுக்கு அடிமையாகிப் போன சமூகம் மீண்டும் மாலைகளால் அரசியல் வாதிகளின் கழுத்தை நிரப்பத் தொடங்கி விட்டனர்
முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி நடக்கிறது வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது என்று முஸ்லிம் சமூகம் பொங்கி எழுந்து அதன் விலைவாக ஆட்சியில் இருந்த அரசை தூக்கி எரிவதிலும் தீவிர ஈடுபாடுகாட்டியது அதே அணியாக் கார அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் இளைத்தது ஆதரவாகவும் கடைசி நிமிடம் வரை பிரச்சாரமும் செய்தனர்
முஸ்லிம் சமூகம் எதிர்திசையில் நீச்சல் அடிப்பதை கண்ட முஸ்லிம் தலைவர்கள் தங்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடுவார்கள் என்ற காரணத்தினால் கடைசி நிமிடம் விசுவாசமான தலைவருக்கு கழுத்தறுக்க முடிவு செய்தது
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் சமூகத்தின் உரிமைகள் குறித்து எதுவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் வெறும் அமைச்சுப் பதவிகளுக்காக ஒட்டிக் கொண்டுள்ளனர்
தற்போதைய அரசின் நிலைமை பரிதாபகரமானது வலுவான நிலையில் அமைக்கப்படாத அரசின் பலகீனங்களை புரிந்த கொண்ட இனவாதிகள் மீண்டும் தெருவுக்கு வந்துள்ளனர்
கடந்த கால அனுபவங்களைக் கொண்டு மீண்டும் கிராமங்கள் தோறும் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன மகிந்த அரசுக்கு எதிரான வெற்றி பேரின சிங்கள மக்களுக்கான தோல்வியாக காட்டி புதிய உத்தியாக பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர்
இதற்ட்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் உள்முரண்பாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு மேற்கொள்ளும் அரசியல் மேடைப் பேச்சுக்களும் சிங்களமக்களை மீண்டும் சூடேற்ற தொடங்கி உள்ளது
முஸ்லிம் அரசியல் வாதிகளே முஸ்லிம் சமூகத்திற்கு சாபக் கேடு நாடும் முழுவதும் சிதறுண்டு வாழும் முஸ்லிம் சமூகம் மிகக்கவனமாக அந்நிய சமூகத் தோடு நடந்து கொள்ளவேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அரசியல் வாதிகளின் சுயநல அரசியல் போக்கை தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் அங்கீகரித்தால் அதன் விளைவை அனுபவிப்பது வெகு தூரத்தில் இல்லை இப்போது முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளப் போகும் சவால் மிக்ககாலத்தையே நாம் சிறந்த தலைவர்களை உருவாக்க இன்னும் தவறுவோமானால் எமக்கு முன்னாள் உள்ள சவால்களை முறியடிக்க முடியாது அழிந்து விடுவோம்
மக்கள் கட்டிக் காப்பதையும் தங்கள் சுயநலங்களுக்காக அளிக்கத் துடிக்கும் அரசியல் தலைவர்களை நாம் இனங்கண்டு விட்டோம்
எதிர்கால சந்ததியினரை கருத்திற்கொண்டு எமது பிரதி நிதிகளை தூர நோக்குள்ள இஸ்லாமிய சிந்தனை உள்ள சமூகதிட்காக தன்னை அற்பநிக்கக் கூடியவர்களை உருவாக்க வேண்டும்
கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிரியின் காலில் மண்டி இட்டுக் கிடந்தது மாத்திரம் இன்றி பிழையான பாதையை நோக்கி பயணிக்கவும் முயற்சி செய்தனர் மக்களே அவர்களுக்கு வழிகாட்டி நல்லாட்சியின் பக்கம் தள்ளி உள்ளனர்
faiyiz uk
