ஜுனைட்.எம்.பஹ்த்
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் கௌரவ ஹசன்அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று நாளை 25.02.2015ம் திகதி (புதன்கிழமை) காலை 10.00மணிக்கு வருகைதரவிருந்தது.
கௌரவ அமைச்சர் ஹசன் அலி (பா.உ) அவர்கள் நாளை முல்லைத்தீவிற்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதால் இந்நிகழ்வானது தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வானது எதிர் வரும் மார்ச் மாதம் இடம்பெறும் என கிழக்குமாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக் தெரிவித்தார் .
