யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் எண்ணைக்கசிவு காரணணமாக நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை விரைவாக சுத்தப்படுத்தி மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனக்கோரி இன்று (15.02.2014) காலை மக்கள் கவனஈர்ப்பு நிகழவில் கலந்து கொண்டனர்.
கொழும்பு 06, வெள்ளவத்தை கொமசியல் வங்கிக்கு முன்பாக இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறுபட்ட சுலோகங்களையும் சுமந்தவண்ணம் வீதியின் மருங்கில் காணப்பட்டனர்.





