
அவதானி
புதிய காத்தான்குடி கோழிக்காரன் வீதியைச் சேர்ந்த முஹம்ட் சிபான் (26) டெங்கு நோய் காரணமாக இன்று (08.02.2015) காலை மரணமடைந்தார்.
டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சசை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சசை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதே போன்று நேற்று காத்தான்குயில் பாடசாலை மாணவியொருவரும் டெங்கு நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கடந்த வருடமும் டெங்கு நோய் காரணணமாக புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகரத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி உரியிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி நகர சபை தற்போது மக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்பூட்டல்களை செய்து வருவதுடன் சுகாதார அதிகாரிகள் மூலம் வீடுவீடாக சுத்தம் தொடர்பாக அறிவுறுத்தி அவனித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
ஆனால், நகர சபையினால் கண்காணிக்கபட்டு துப்பரவு செய்யப்பட வேண்டிய வீதியோரக் காண்கள் நீர் நிரம்பி வழிவதனாலும் காண்களுக்கு மேல்மூடிகள் போடப்படாமையினாலும் சேர்ந்திருக்கும் குப்பைகள் அள்ளப்படாமையினாலும் குறித்த இடங்களில் நுளம்புகள் பெருக்கெடுத்து அதன்மூலமே இவ்வாறான டெங்கு நோய்கள் உருவாகுவதாகவும் அதன்மூலமே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சுத்தம் சுகாதாரம் தொடர்பாக வீடுகளுக்குச் சென்று அறிவுறுத்தல்கள் வழங்கும் நகரசபை அதிகாரிகள் அவர்களது பொறுப்பிலுள்ள மேற்குறித்த இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும எனவும் வீடுகளிலுள்ள சிரட்டைகளில் நீர் தேங்கி நிற்பதை சுட்டிக்காட்டும் பொது சுகாதார அதிகாரிகள் காண்களில் தேங்கி நிற்கும் நீர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதன் காரணம் என்ன என்பது தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேற்குறிப்பிட்ட நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை துப்பரவு செய்வதற்கும் அதனை நல்லமுறையில் பேணி வருவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நகர சபை நிருவாகத்தை கேட்டுக் கொள்கின்றார்கள்