பாராளுமன்றத்தில் தொழில் அமைச்சு தொடர்பான விவாதமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சபைக்கு சிறு உடற்கட்டு, மெல்லிய தோற்றம் உடைய ஆனால் ஒரு ஆழமான சிந்தனையின் மொத்த உருவமுடைய ஒருவர் முஸ்லிம்களின் புனித மறையான திருக்குர்ஆனுடன் சபைக்கு சமூகமளித்திருந்தார். அவர்தான் மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள்..
"அரசாங்க சேவையில் உள்ள முஸ்லிம் பெண்களின் கணவர் மரணித்ததன் பிற்பாடு அவர்களுக்கு இத்தா என்கின்ற மார்க்க அனுஷ்டானம் உள்ளது. ஆகையால் அரசு அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்."
அப்போது தன் கையில் இருக்கும் அல்குர்ஆனை விரித்து கணவன் மரணித்ததும் மனைவிமார் இத்தா அனுஷ்டிக்க வேண்டும் என இத்தாவை விதியாக்கும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டி தனது கோரிக்கையை விடுத்தார்.
விடயம் பரிசீலிக்கப்படுகிறது. அமைச்சரவை அனுமதியும் கிடைக்கிறது. இத்தா விடுமுறை சட்டமாக்கப்படுகிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக.
நாடாளுமன்றுக்கு முதலில் குர்ஆனை எடுத்துச் சென்று பெருமை மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்களையே சாரும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத்துடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏறாவூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர்தான் ப்ரீட் மீராலெப்பை அவர்கள்.
அரசியல்வாதிகளிலே நானும் உங்கள் மண்ணைச் சேர்ந்தவன்தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறேனே தவிர, உங்களைத் தொடர்ந்து வந்த எந்த அரசியல்வாதியினாலும் இதுவரை நான் கிஞ்சித்தேனும் பெருமைப்பட்டுக் கொள்ளவேயில்லை.
அன்னாரின் மறுமைச் சுகவாழ்வு, சுவனமனைச்சுகந்தத்தில் பிரகாசமாய் இருந்திட பிரார்த்திப்போமாக.!
Mohamed sabry யின் முகநூலில் கிடைத்தவை
