கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் முஸ்லிம்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்குமுதலமைச்சர் விவகாரம் பெரும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்ஆரம்பம் தொட்டே முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்திருந்ததார்.
இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும் இறுதியில் எதுவுமே பலிக்காமல் போக தற்போது முன்னால் மேயர் சிராசின் பாணியில் மக்களை பகடைக் காயாகபயன்படுத்தி கடந்த வெள்ளி ஜும்மா தொழுகைக்குப் பிறகு தலைவருக்கு எதிரான போராட்டம்,கொடும்பாவிஎரிப்பு என்று தனது ஆதரவாளர்களை வைத்து அரங்கேற்றி இருந்தார் .
எனினும் அரசியல் சாணக்கியம் பேசும்தலைவர் சாணக்கியமற்ற முடிவுகளை எடுத்ததன் விளைவு தற்போது முஸ்லிம் காங்கிரஸ்உறுப்பினர்களின்,போராளிகளின் வெறுப்புக்கு உரியவராக மாறியிருக்கிறார்..எதிர்வரும் பொதுத்தேர்தலை வைத்துகாய் நகர்த்தும் மு.கா.தலைமை தவிசாளரை ஓரம் கட்ட முதலமைச்சர் பதவியை ஹாபீஸ் நசீருக்கு வழங்கியதுஎன்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதனால் விரக்தியடைந்த ஜெமீல் அனுசரணையுடன் சகுனம் பார்த்துகாத்திருந்த மயில் கட்சி அம்பாறையில் தடம் பதிக்க முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆக பிரதானமுஸ்லிம் கட்சிகள் , தலைவர்கள் என்று நாம் நினைக்கும் இவர்கள் மக்கள் கருத்துகளையோ தேவைகளையோஆராயாமல் வெறுமனே பதவிக்காகவும்,கட்சி வளர்ச்சி என்று சொல்லி எம்மக்களிடையே பிரதேசவாதம் என்பதனூடாக
குரோதத்தையுமே ஊட்டுகின்றனர்.ஒற்றுமை,சகோதரததுவத்தும் சொல்லித்தரும் இஸ்லாம்மார்க்கத்தை பின்பற்றும் நாம் இவர்களுக்காக
நேரடியாகவும்,சமூக வலைத் தளங்களிலும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
