Featured Home (TOP)

Recent Comments

Monday, February 23, 2015

Unknown

சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் - தேசிய ஷுரா தீர்மானம்


பஹத் எம் ஜூனைத் - 

தேசிய ஷுரா சபையின் மூன்றாது பொதுச் சபைக்கூட்டம் அதன் தலைவர் தாரிக்பதியூதின் மஹ்மூத் தலைமையில் இன்று(22.02.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு06 இல் அமைந்துள்ள எம்.ஐ.சீ.எச். மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் பொதுச் சபை அங்கத்தவர்களும் நிறைவேற்றுக் குழு மற்றும்செயலக அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், அரசியல்அமைப்புத் திருத்தயோசனைகள், தேசிய
ஷுரா சபை கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் போன்றபல்வேறு கருத்துகளும் அபிப்பிராயங்களும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.



எதிர்கால பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் நியாமானதும் தகுதி வாய்ந்தது மான சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த
வேண்டும்  என இன்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.



அத்துடன் தேர்தல்தொகுதிகளுக்கான எல்லை மீள்நிர்னணயம் தொடர்பானசெயல்முறையில்
சிறுபான்மையினரதுபிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.



என மேலும்தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்வை தேசியஷுரா சபையின் பிரதித்தலைவர் டீ.கே. அசூர்தொகுத்து வழங்கினார். கடந்தபொதுச்சபைஅறிக்கையைஉதவிபொதுச் செயலாளர் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் வாசித்தார்.


தேசிய ஷுரா சபையின் முக்கியத்துவத்தை பலரும்உணர்ந்துள்ளனர். அதனால்எமது பொறுப்பும் பணியும் அதிகரித்துள்ளன. இதனை எல்லோரும் ஒன்றிணைந்து கூட்டாகவும் தியாகத்துடனும் செயற்படுத்துவதன் மூலமே அல்லாஹ்வின் உதவியுடன் சாதிக்கலாம்.


இந்த செயற்பாடுகள் முஆமலாத்வகையை சார்ந்த இபாதத்எனவும் தலைவர் தாரிக்பதியூதின் மஹ்மூத்தனது உரையில் தெரிவித்தார். கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை பொதுச் செயலாளர இஸ்மாயில் அஸீஸும் நிதி அறிக்கையை பிரதிப்பொருளாளர் மௌலவி சியாத் இப்ராஹிமும் முன்வைத்தனர். பிரதித் தலைவர் அஷ்ஷெய்க்பளீல் (நளீமி)சிறப்புரை நிகழ்த்தினார்.


தேசிய ஷுரா சபையின்பொறுப்புகள், கடமைகள்தொடர்பாக வலியுறுத்தியஅவர், எதிர்காலத்தில்முன்னெடுக்கப்படவேண்டியவேலைத்திட்டங்கள்,முதன்மைப்படுத்தப்படவேண்டிய விடையங்கள்குறித்தும் விளக்கினார்.புதிய அரசாங்கத்தின் 100 நாள்வேலைத்திட்டத்தில் கவனம்செலுத்தப்படும் அரசியல்அமைப்பு திருத்த யோசனைகள்,முஸ்லிம்களின் எதிர்காலபாராளுமன்ற பிரதிநிதித்துவ தொகுதிகளுக்கான எல்லை மீள்நிர்ணயம் ஆகியன தொடர்பாகநிறைவேற்றுக் குழு உறுப்பினர்சட்டத்தரணி ரஸீத் எம். இம்தீயாஸ்புள்ளி விபரங்களுடன் விளக்கினார்.


பொதுச் சபை அங்கத்தவர்களான விஷேட வைத்திய நிபுணர்டாக்டர் சரூக் ஸஹாப்தீன், முன்னாள் ஐ.நா. அலுவலகர்ஹில்ரு சித்தீக், அமெரிக்காவில் உள்ளதஸ்மினா அமைப்பின் செயற்பாட்டாளர் இல்யாஸ்ஹாசிம், சிரேஷ்ட ஆய்வாளர்எம்.ஐ. எம்.முஹியத்தீன், மௌலவி அப்துல் வதூத்ஜிப்ரி, .இலங்கைஜமாத்தே இஸ்லாமியன். தலைவர் உஸ்தாத் ரஷித் ஹஜ்ஜுல்அக்பர் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.


இந் நிகழ்வில் தேசியஷுரா சபையின்உத்தியோகபூர்வஇணையத்தளமானwww.nationalshoora.com
யை பேராசிரியர்ரிஷ்வி சரிப் அங்குரார்ப்பணம்செய்து வைத்தார். இதுகுறித்த விளக்கத்தை நிறைவேற்றுக்குழு உறுப்பினரான ஆய்வாளர்ரீஷா எஹியா முன்வைத்தார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :