ஜுனைட்.எம்.பஹ்த்.
இலங்கை பெண்களை மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான் விரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
நான் ஒர் பெண்ணாகவே இந்தப்பிரச்சினை பார்க்கின்றேன் எனவும் தாய் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தம்மை பற்றி என்ன சொன்னாலும் மனச்சாட்சியின் அடிப்படையில் தாம் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சவூதி மன்னருடன் தொடர்புகளைப்பேணி வரும் ரவூப் ஹக்கீமை குறித்த நபர்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும்அந் நாட்டு சட்டங்களின் அடிப்படையில் தாம் அங்கு சென்று இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவதனை விடவும்
அமைச்சர் ஹக்கீம் செல்வது பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
