Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 24, 2015

Unknown

காத்தான்குடி வீதி அபிவிருத்தியில் NFGG-UNPயின் கூட்டு நடவடிக்கை

ஊடகப்பிரிவு, - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வீதி அபிவிருத்தி தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆகியன இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
புதிய காத்தான்குடி பரீட் நகர் பகுதியில் நீண்டகாலமாக மிகமோசமாகப் பழுதடைந்த நிலையில் காணப்படும் பாம் வீதியினை உரிய முறையில் அமைப்பதில் அரசியல்வாதிகளால் இழுத்தடிப்பு செய்யப்ட்டதனை கண்டித்து கடந்த 03.02.2015 அன்று பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதுபோலவே மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் கர்பலா வீதியினை அமைத்துத் தருமாரறு கோரி பாலமுனைப் பிரதேச மக்களினால் கடந்த 13.02.2015 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் NFGGயும் UNPயும் இந்த இரண்டு வீதிகள் தொடர்பிலும் அதி முக்கிய கவனம் செலுத்தியுள்ளன. அதற்கிணங்க பாம் வீதியினை உடனடியாக அமைத்துத் தருமாறு மக்கள் சார்பாக கோரும் அவசரக் கடிதம் ஒன்றினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் கடந்த 05.02.2015 அன்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஸீம் அவர்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதுபோன்று கர்பலா வீதியினை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரும் கடிதம் ஒன்றினை அப்பிரதேச மக்கள் சார்பாக ஹசனாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகிகளினால் நெடுஞ்சாலை அமைச்சருக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை அமைச்சருடனும் அமைச்சின் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு UNPயின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கூட்டுமுயற்சியின் பலனாக இந்த இரண்டு வீதிகளையும் உடனடியாக அமைப்பதற்கான விஷேட அனுமதியினை நெடுஞ்சாலைகள் அமைச்சர் தற்போது வழங்கியுள்ளார்.
இந்த அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தும் வகையில் விஷேட சந்திப்பு ஒன்று நேற்று (23.02.2015) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளருடனும் அதன் பிரதம பொறியியலாளருடனும் நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் NFGGயின் சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி, UNP சார்பில் அதன் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்தோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி ஊர்வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் மூலமாக பல வீதிகள் காத்தான்குடியில் அமைக்கப்பட்டபோதிலும் அவற்றில் பெருமளவானவை உரிய முறைப்படியும் உரிய தரத்துடனும் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற அனுபவத்தின் அடிப்படையில் நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் அமைக்கப்பட இருக்கும் ஊர்வீதியும் அதனோடு இணைந்த வடிகாலமைப்பும் முறையான தரத்தோடு அமைப்பக்கட வேண்டும் என்ற விடயம் NFGG-UNP பிரதிநிதிகளால் RDA அதிகாரிகளிடம் சுட்டிக்கட்டப்பட்டது. அத்தோடு இந்த விடயத்தின் முக்கியத்துவம் கருதி, அவசியப்படும் பட்சத்தில் சுயாதீனமாக தொழிநுட்ப மேர்பார்வைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் NFGG-UNP பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இக்கோரிக்கையினை நியாயத்தினை ஏற்றுக்கொண்ட RDA அதிகாரிகள் ஊர்வீதி அமைப்பில் உரிய தரம் உத்தரவாதப்படுத்தப்படும் என்பதனை உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து RDAயின் பிரதம பொறியியலாளரும் NFGG-UNP பிரதிநிதிகளும் ஊர்வீதி அபிவிருத்தி நடைபெறும் இடத்திற்கு சென்று கள மேற்பார்வை செய்தனர். அத்தோடு இவ்வீதி அமைப்பைப் பொறுப்பேற்றுள்ள முக்கிய ஒப்பந்தக்கார நிறுவனத்தின் பொறுப்பாளருடனும் இத்திட்ட முகாமையாளருடனும் கலந்துரையாடிய NFGG-UNP பிரதிநிதிகள் இவ்வீதியின் தரம் தொடர்பில் மீண்டும் வலியுறுத்திக் கூறியதோடு தொடர்ந்தும் இந்த வேலைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இவ்வீதியினை அகலப்படுத்தும் பொருட்டு உடைக்கப்பட்ட வீட்டுச் சுவர்களினை மீண்டும் அமைத்துக் கொடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :