Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 14, 2015

Unknown

வரலாற்று சிறப்புமிக்க காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் காரியாலயம் திறப்பு..


-டீன்பைரோஸ்-
    காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்திற்கான புதிய காரியாலயம் காத்தான்குடி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாத்திற்கு பின்னால் உள்ள நகர சபை கட்டிடத்தில் (13.02.2015 வெள்ளிக்கிழமை) உத்திய புர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  கலந்து கொண்டார்.


காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் இன் உப தலைவர் என்.எம்.ஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே;.எல்.எம்.பரீட்,கே.எல்.எம்.முபீன்,காத்தான்குடி மின் பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல்,விளையாட்டு உத்தியோகஸ்தர்; எம்;.வை.ஆதம்லெப்பை உட்பட கால்பந்தாட்ட சங்கத்தின் நிர்வாகிகள்,விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கால்பந்தாட்ட சங்கமானது முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டது மாத்திரமல்லா சுமார் 5 இலட்சம் நிதி ஒதிக்கீடு செய்ததன் மூலம் சங்கத்திற்கான மடிகணணி,காரியாலய தளர்பாடங்கள்,விளையாட்டு உபகரணங்கள், டிஜிடல் புரஜெக்டர் உட்பட பல பொருட்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவரான என்.டீ.பாறூக் தெரிவித்தார.;

சுங்கத்திற்கான பொருட்கள் அதியினால் கையளிக்கப்பட்டதுடன் முன்னால் பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  









Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :