Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 11, 2015

Unknown

குடித்து விட்டு கும்மாளம் இட்ட யுவதி..!! ஐந்து Boy பிரண்டுகளும் Girl உம் கைது

சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் அட்டன் காவல்துறையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் அட்டன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஜந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக அட்டன் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண்ணை குறித்த மதுபான நிலையத்திற்கு மறைவாக கொண்டு சென்றதாகவும் இவர்களை கைது செய்யும் வேளையில் இவர்கள் அதிகமான போதை நிலைமையில் இருந்ததாகவும் அட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை ஒரு புனித தலம் எனவும் அங்கு செல்லும் யாத்திரைகள் போதை நிலைமையில் செல்லக் கூடாது எனவும் மதுபானம் மற்றும் ஏனைய போதை பொருட்களை கொண்டு செல்லுதல் சட்டவிரோதம் எனவும் யாத்திரைகள் அமைதியாக, பக்தியான நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டும் என காவல்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.
கைது செய்த ஜந்து இளைஞர்களையும் ஒரு யுவதியையும் வைத்திய பரிசோதனையின் பின் அட்டன் நீதமான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதாக அட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இவர்களை கைது செய்யும் போது கைது செய்ய வேண்டாம் எனவும் இச்சம்பவத்தை மறைக்குமாறும் கைது செய்யப்பட்டவர்கள் வேண்டுக்கோள் கேட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
Courtesy - puttalam today

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :