நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடகப் பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இலங்கைத் திருநாட்டின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை காத்தான்குடியிலுள்ள அதன் மக்கள் அரங்கில் இனிதே நிறைவுற்றது.
NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ALM.சபீல் நளீமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், NFGGயின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் உள்ளிட்ட தலைமைத்துவசபை உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பெண்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விஷேட உரை ஒன்றை ஆற்றினார், அத்துடன் அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.
