காத்தான்குடி நகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சை குழு உறுப்பினர் M.A.H.M.மிஹ்ழார் இன்று(27.2.2015) வெள்ளிக்கிழமை ஜும் ஆத்தொழுகையின் பின்னர் மக்கள் முன்னிலையில் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜுமாஆப்பள்ளிவாயலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த வைபவத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகரசபையின் உறுப்பினராக கடமையாற்றி வந்த அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி அவர்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளளைத்தல் கொள்கைக்கமைய இராஜினாமா செய்ததினைத் தொடர்ந்து ஏற்றப்பட்ட வெற்றிடத்திற்கு MAHM.மிஹ்ழார் அவர்களை நியமிக்க சூராசபை அங்கீகாரம் வழங்கியது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் சுயேற்சைக் குழு 1ல் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு மக்களின் அங்கீகாரம் மூலம் இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(ஜுனைட்.எம்.பஹத்)
