மிக மிக மோசமான தோல்வி ஒன்றை மேற்கிந்திய தீவுகள் அணி சந்தித்திருக்கின்றது. கூறப்போனால் தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் அணியை மற்றுமொரு சிம்பாப்வேயாக்கி வில்லியர்ஸ் மற்றுமொரு கெயில் ஆகியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்..
இந்த போட்டியின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில முக்கிய விடயங்களை நாம் பார்க்கலாம்..
1. 257 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணியின் இரண்டாவது அதிகூடிய ஓட்ட வெற்றி இது. இதற்கு முன்பு சிம்பாப்வே அணிக்கெதிராக 272 ஓட்ட வெற்றியை பெற்றிருந்தார்கள் 2010ம் ஆண்டு..
2. தென்னாபிரிக்க அணிக்கெதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றிருக்கும் 18வது தோல்வி இது.. இரு அணிகளும் 19 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடியுள்ளது ஒரே ஒரு தடவை மட்டுமே மேற்கிந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
3.300 ஓட்டங்களுக்கே மேற்பட்ட இலக்குகளை துரத்தி இதுவரையிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றதில்லை.. அந்த வரிசையில் இன்றும் மேற்கிந்திய அணிகளுக்கு மற்றுமொரு தோல்வி.
4.64 பந்துகளில் டிவில்லியர்ஸ் 150 ஓட்டங்களை பெற்றிருந்தார் ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் அதிவேகமாக பெறப்பட்ட 150 ஓட்டம் இது. இதற்கு முன்பு சேன்வாட்சன் பங்களாதேஷ் அணிக்கெதிராக 83 பந்துகளில் 150 ஓட்டங்களை பெற்றிருந்தார் 2011ம் ஆண்டு.
5.இந்த போட்டியின் மூலம் 3000 ஓட்டங்களை கடந்த 15வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றார் டிவில்லியர்ஸ்.
6.அம்லா மற்றும் டு பிலிசஸ் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 127 ஓட்டங்களை பெற்றிருந்தார்கள் உலககிண்ண வரலாற்றில் தென்னாபிரிக்க அணி பெரும் இரண்டாவது அதி கூடிய இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம்.
7.14.2 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி 50 ஓட்டங்களை பெற்றிருந்தது இது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தென்னாபிரிக்கா பெற்ற இரண்டாவது மெதுவான ஓட்டம் 19.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்திருந்தார்கள் 2001ம் ஆண்டு.
8.162* ஓட்டங்களை பெற்றிருந்தார் டிவில்லியர்ஸ் உலக கிண்ண வரலாற்றில் தென்னாபிரிக்க வீரர் ஒருவர் ஒருவர் பெறுகின்ற இரண்டாவது 150க்கு மேற்பட்ட ஓட்டம் இது. முதல் இடத்தில் இருப்பவர் கேரிகேர்ஸ்டன் 188* ஓட்டங்களை பெற்றிருந்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிராக 1996ம் ஆண்டு.
9.52 பந்துகளுக்கு முகம்கொடுத்தபோது தனது சதத்தை பெற்றுக்கொண்டார் டிவில்லியர்ஸ் உலக கிண்ண வரலாற்றில் இரண்டாவது வேகமான சதத்தை பெரும் முதலாவது தென்னாபிரிக்க வீரர் இவர். முதலிடத்தில் இருப்பவர் அயர்லாந்து வீரர் ஒ பிரைன் 50 பந்துகளில் வேகமான சதத்தை பெற்றிருந்தார் இங்கிலாந்து அணிக்கெதிராக 2011ம் ஆண்டு நடந்த உலககிண்ண போட்டியில்.
10.408 ஓட்டங்களை பெற்றிருந்தது தென்னாபிரிக்க அணி உலககிண்ண போட்டிகளில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்டம் இது. முதலிடத்தில் இந்திய அணி இருக்கின்றது 2007ம் ஆண்டு நடந்த உலக கிண்ண போட்டியில் பெர்முடா அணிக்கெதிராக அவர்கள் 413 ஓட்டங்களை பெற்றிருந்தார்கள்.
11.தென்னாபிரிக்க அணி தனது இறுதி பவர்பிளை ஓவர்களில் எந்தவொரு பந்தையும் ஓட்டமற்ற பந்தாக ஆக்கவில்லை..ஐந்து ஓவர்களில் 72 ஓட்டங்களை பெற்றிருந்தார்கள்.. பவர்பிளை ஓவரில் எந்தவொரு பந்தையும் ஓட்டமற்ற பந்தாக ஆக்காத முதல் அணி என்கின்ற பெருமையை இதன் மூலம் பெறுகிறது.
12.மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தனது பத்து ஓவர்களில் 104 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதற்கு முன்பு எந்தவொரு மேற்கிந்திய பந்துவீச்சாளரும் இத்தனை ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கவில்லை அத்துடன் எந்தவொரு அணியின் தலைவரும் பந்துவீசி இத்தனை ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கவில்லை.
13.ஜேசன் ஹோல்டரின் வீசிய ஓவர்களில் 76 ஓட்டங்களை டிவில்லியர்ஸ் பெற்றிருந்தார் ஒரு பந்து வீச்சாளரின் பந்துகளை எதிர்கொண்டு ஒரு துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இவை. இதற்கு முன்பு 2005ம் ஆண்டு மகேந்திரசிங் தோணி உபுல் சந்தனவின் ஓவர்களை எதிர்கொண்டு 61 ஓட்டங்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
14.டிவில்லியர்ஸ் பர்ஹான் பெஹர்தீன் ஆகிய இருவரும் இணைந்து 20 பதுகளில் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தார்கள் சராசரி ஓட்ட விகிதம் 24 ஒரு ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் சராசரி ஓட்ட விகிதம் அதிகமாக உள்ள முதல் சந்தர்ப்பம் இது.
15.இறுதி 15 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி 222 ஓட்டங்களை குவித்திருந்தது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது அதிக்கூடிய ஓட்டம் இது.. முதல் இடத்தில் இருப்பதும் தென்னாபிரிக்க அணியே இந்த வருட ஆரம்பத்தில் நடந்த போட்டியொன்றில் தென்னாபிரிக்க அணி இதே மேற்கிந்திய அணிக்கெதிராக 15 ஓவர்களில் 230 ஓட்டங்களை குவித்திருந்தது.
16.ஒரு அணி மூன்று தடவைகள் 400 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த முதல் சந்தர்ப்பம் இது.. எந்தவொரு அணியும் இதுவரையில் மூன்று தடவைகள் 400 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கவில்லை ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில்.
Razana Manaf - Facebook
Razana Manaf - Facebook
