Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 15, 2015

Unknown

மாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் உயர்மட்ட பதவிக்கு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் உப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கும் அதிக காலம் ஒரே இடத்தில் சேவையாற்றியவர்களுக்கும், சுயவிருப்பின் பேரில் இடமாற்றம் கோரியவர்களுக்கும், இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ தெரிவிக்கின்றார்.


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, புத்தளம், பதுளை, ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா, கண்டி, மாத்தளை, கம்பஹா, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்ட அரச அதிபர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 8 மாதத்திற்குள் மேலும் பல அரசாங்க அதிபர்களுக்கான இடமாற்றம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ குறிப்பிட்டார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :