இந்தியாவின் மேற்கு வங்க பிரதேசத்தில் 72 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் நேற்று (14) 6 பேரினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கன்னியாஸ்திரி சேவையாற்றிய, பாடசாலையிலிருந்த பணத்தையும் குறித்த சந்தேகநபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மடத்திற்குள் நுழைந்த குழுவினர் கன்னியாஸ்திரியை துஷ்யிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சி கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்கினால் ஒரு லட்சம் இந்திய ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலை
கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
news1st
