Featured Home (TOP)

Recent Comments

Monday, March 2, 2015

Unknown

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி கையூட்டல்?

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி ரூபா கையூட்டல் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த தனியார் கடற் பாதுகாப்பு நிறுவனம் கடலில் கப்பல் ஒன்றில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணி வந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்படுவதனை நிறுத்த ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரை அணுகியுள்ளனர்.
எனினும்,  இந்த கையூட்டலை பெற்றுக்கொள்ள குறித்த அமைச்சர் மறுத்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மிகவும் நெருக்கமான குறித்த அமைச்சர், கடந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார் எனத் தெரிக்கப்படுகிறது
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்த அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - tamilwin.com

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :