(ஜுனைட்.எம்.பஹ்த் )
இம்முறை பெரும்போகத்தில் சுமார்3,900 மெட்ரிக் தொன் நெல்கொள்வனவு செய்துள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை, அநுராதபுரம், மொனராகலை, திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நெற் கொள்வனவு இடம்பெற்றுள்ளது.
இம்முறை பெரும்போகத்தில் சுமார் 2இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப் பதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் பொது முகாமையாளர் கூறினார்.
நாட்டரிசி ஒரு கிலோகிராம் 45ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 50 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.
