Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 4, 2015

Unknown

தலைக் கவசத்திற்கு தடை விதிக்க முன்னர் பர்தா,நிகாப் உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்

முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் ஞான­சார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடை­க­ளுக்கு தடை விதிக்­கா­த­வரை யாரும் தலைக்­க­வச சட்­டத்­தினை பின்­பற்ற வேண்டாம் எனவும் குறிப்­பிட்டார்.
பொது பலசேனா பெளத்த அமைப்­பினால் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் தலைக்­க­வச சட்டம் தொடர்பில் வின­வி­ய­போது அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது.

தேசிய பாது­காப்பு தொடர்பில் நாம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பேசி வரு­கின்றோம். ஆனால் இன்று புதிய அரசு விசித்­தி­ர­மான சட்­டங்­களை கொண்டு வந்து தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. முழு­மை­யாக முகத்தை மூடிய தலைக்­க­வசம் அணி­வதை தடுக்க வேண்டும் எனக் கோரி புதிய சட்டம் இயற்­றி­யுள்ள இவர்கள் ஏன் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், பர்தா உடை­க­ளுக்கு தடைவிதிக்கவில்லை. தலை­க­வசம் அணிந்து தப்பு செய்­கி­றவர் யார் என்­பதை கவ­சத்தை கழட்டி பார்க்க முடியும். ஆனால் நிகாப் பர்தா உடை­க­ளினுள் இருப்­பர்கள் யார் என்­பதை எவ்­வாறு அவ­தா­னிப்­பது.
கடந்த காலங்­களில் இவ்­வ­கை­யான ஆடை­களை பயன் படுத்­தியே இலங்­கையில் பல குற்­றங்கள் இடம்­பெற்­றன. மாமா, அஸ்மின் போன்ற குற்­ற­வா­ளிகள் இவ்­வகை உடை­யினுள் ஒளிந்­தி­ருந்தே தப்­பித்து வந்­தனர். எனவே தலைக்­க­வசம் தொடர்பில் சட்டம் கொண்­டு­வந்து முழு­மை­யாக முகத்தை மூடிய தலைக்­க­வசம் அணி­வதை தடை செய்­வ­தாயின் அதே சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகை உடை­க­ளையும் தடை செய்து பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும். சட்டம் என்­பது அனை­வ­ருக்கும் அனைத்து வகை­யிலும் பொருந்தக் கூடிய வகையில் அமை­யப்­பெற வேண்டும். மத சார்பில் ஒரு சில­ருக்கு சாதகமாகவும் ஏனை­யோ­ருக்கு வேறு விதத்தில் சட்டம் இயற்­று­வது ஏற்றுக் கொள்ள முடி­யாது.
முஸ்லிம் தீவி­ர­வா­தத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்­தி­லேயே இஸ்­லா­மிய தேச­மாக்கும் செயற்­பாடு மறை­மு­க­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. பிர­பா­கரன் வடக்கை மட்­டுமே கோரி போரா­டினார்.
ஆனால் முஸ்லிம் தீவி­ர­வாதம் மிகவும் மோச­மாக அமை­தி­யாக இருந்து காய் நகர்த்தி முஸ்லிம் மத வாதத்­தி­னையும் யதார்த்­தத்­திற்கு அப்­பாற்­பட்ட கொள்­கை­க­ளையும் பரப்பி சிங்­கள கொள்­கை­களை அழிக்­கின்­றனர்.
எனவே முகத்­தினை முழு­மை­யாக மூடு வதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வரப்­ப­டு­மாயின் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடிய ஆடைகளையும் தடை செய்ய வேண்டும். அதை நடைமுறைப் படுத்தும் வரையில் இளைஞர்கள் யாரும் இச் சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

sourc - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :