புதிய தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இக்கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளின்
தலைவர்கள் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
தேர்தல் முறைமை சீர்திருத்தத்தின் போது உள்வாங்கப்படவுள்ள புதியமுறைமை குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல் முறை மாற்றத்தினால் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும், இதுபோன்ற மாற்றம் குறித்து இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லையென தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் முறைமை சீர்திருத்தம்குறித்து இரு முன்மொழிவுகள்முன்வைக்கப்பட்டுள்ளன. இதில்,
தொகுதி வாரியாக 140 பேரும்,விகிதாசார முறையின் அடிப்படையில்60 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் ரீதியில் 15 உறுப்பினர்களும்தெரிவு செய்யப்படுதல்என்பது ஒரு முன்மொழிவாகும்.
தொகுதி வாரியாக 125 உறுப்பினர்களும், விகிதாசார ரீதியில் 75 பேரும்,தேசியப் பட்டியலில் 25 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுதல் என்பதுஇரண்டாவது முன்மொழிவு எனவும் தேர்தல்கள் திணைக்கள உயர் மட்ட அதிகாரிகளைமேற்கோள்காட்டி சிங்களஊடகமொன்று அறிவித்துள்ளது.
