Featured Home (TOP)

Recent Comments

Friday, March 13, 2015

Unknown

இலக்கிய உரையாடலுக்கான அமர்வு


"அகர ஆயுதம்" இலக்கிய உரையாடலுக்கும் சந்திப்பிற்குமான பொதுவௌியின் தொடர் அமர்வின் அடுத்த அமர்வு எதிர்வரும் 2015-03-22ம் திகதி பொத்துவில் பிரதேச சபைக் கட்டடத்தில் நடைபெறவிருக்கின்றது.

மூத்த இலக்கியவாதி கலையன்பன் அஸீஸ் தலைமையில் காலை 8.30 மணிதொடக்கம் 2.00 மணிவரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது காலை, மதிய உணவுகளுடன் முழுநாள் சுவையான இலக்கிய அமர்வாக இடம்பெறவிருக்கின்றது. 


மூத்த , இளம் எழுத்தாளர்கள் கவிஞர்கள்  கலைஞர்கள் விமர்சகர்கள் துறைசார்ந்த பேச்சாளர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்  பொத்துவில் கலைஞன் றிஸ்வி அவர்களின் மற்றுமொரு திறமையான "கீறல்" திரைப்படமும் காண்பிக்கப்படுவதுடன் பகலுணவின் பின் -சந்தக்கவிமணி- கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் சிறப்புக் கவியரங்கும் இடம்பெறவிருக்கின்றது.

இப் பொதுவௌி அமர்வில் எழுத்தாளர்கள், கலைஞர்களின் வௌியீடுகளையும் காட்சிப்படுத்தவுள்ளதால் பங்குகொள்ளும் கலைஞர்கள் ,எழுத்தாளர்கள் தங்களது வௌியீடுகளை கொண்டுவருவது வரவேற்கப்படுகின்றது.

நிகழ்வில் பங்குகொள்வோர்   எமது மின்னஞ்சல் முகவரியான Aharam.world@gmail.com எனும் முகவரியூடாகவோ அல்லது 0772380958-0778486168-0774073361 க்கோ  அழைத்து உறுதிப்படுத்திக் கொள்வது ஏற்பாட்டாளர்களின் சிரமத்தை தவிர்த்துக் கொள்வதற்கு உதவியாக அமையும்.

-கிராமத்தான் கலீபா-

பொத்துவில்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :